அதிரடியில் அசத்தும் புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

அதிரடியில் அசத்தும் புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி

Added : ஜூன் 01, 2016 | கருத்துகள் (85)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
அதிரடியில் அசத்தும் புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி

புதுச்சேரி : புதுச்சேரியில் இன்னும் புதிய அரசு பதவியேற்காத நிலையில், அங்கு புதிய துணைநிலை ஆளுனராக பதவியேற்றுள்ள முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான கிரண்பேடி பல புதிய அறிவிப்புக்களை அதிரடியாக அறிவித்துள்ளார்.கடந்த இரண்டு நாட்களுக்கு முன் புதுச்சேரி துணைநிலை ஆளுனராக பதவியேற்றுக் கொண்ட கிரண்பேடி, 1031 என்ற இலவச அழைப்பு எண்ணை அறிவித்துள்ளார். ஜூன் 8 ம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வரும் இந்த அழைப்பு எண்ணை தொடர்பு கொண்டு மக்கள், லஞ்சம், ஈவ் டீசிங், சமூக விரோத செயல்பாடுகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான புகார்களை அளிக்கலாம். புதுச்சேரியை அமைதியான யூனியன் பிரதேசமாக மாற்றுவதற்காக குற்றங்களை தடுக்கவும், சாலை பாதுகாப்பை மேற்படுத்தவும் வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.இலவச அழைப்பு சேவை எண் மூலம் அளிக்கப்படும் புகார்கள் மிக ரகசியமாக வைக்கப்படும் எனவும் கிரண்பேடி உறுதி அளித்துள்ளார். புகார் அளித்தவர் பற்றிய விபரம் போலீஸ் ஐஜி மற்றும் தலைமை செயலருக்கு மட்டுமே தெரியும் வகையில் இந்த புகார்கள் பாதுகாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பொய் புகார்கள் அளிப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. குற்றம் தொடர்பாக புகார் அளிப்பவருக்கு உரிய நீதி பெற்று தரும் போலீசாருக்கு பரிசு வழங்கப்படும்.கல்வித்துறை செயலர் மற்றும் பள்ளி கல்வி இயக்குனர் ஆகியோர் பள்ளிகளுக்கு அதிரடி விசிட் செய்து ஆசிரியர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும். இதே போன்று மருத்துவமனைகைளுக்கு ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் எனவும், போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு அந்த இடத்திலேயே அபராதம் விதிக்க வேண்டும் எனவும் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.விளம்பர பலகைகள், ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்பட வேண்டும். விஐபி.,க்கள் வருகைக்காக போக்குவரத்தை நிறுத்த கூடாது எனவும், இந்த உத்தரவுகள் ஒரு வாரத்திற்குள் அமலுக்கு வர வேண்டும் எனவும் கிரண்பேடி தெரிவித்துள்ளார். காலில் விழும் கலாச்சாரத்துக்கு கண்டனம்: விஐபி கலாச்சாரத்தை மாற்ற வேண்டும் என்பதை தனது பதவியேற்பு விழாவிலேயே கிரண்பேடி மாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. பதவியேற்பு விழாவில் தனது காலில் விழுந்த ஒரு பெண் எம்.எல்.ஏ.,வின் காலில் பதிலுக்கு விழுந்து வணங்கிய கிரண் பேடி, காலி்ல விழுந்து வணங்கக்கூடாது என்று அறிவுரை வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து (85)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
02-ஜூன்-201616:36:14 IST Report Abuse
ganapati sb பாண்டியில் அனுபவம் பெற்றபின் பேடியை டில்லிக்கு மாற்றினால் அரவிந்தும் கிரணும் சேர்ந்து போட்டி போட்டுக்கொண்டு டில்லியை வளர்ச்சி பெற செய்து விடுவார்கள்
Rate this:
Share this comment
Cancel
raju - Madurai,இந்தியா
02-ஜூன்-201615:46:10 IST Report Abuse
raju New brooms sweeps well
Rate this:
Share this comment
Cancel
baski - Chennai,இந்தியா
02-ஜூன்-201614:09:56 IST Report Abuse
baski தமிழ்நாட்டில் ஆளுனர் உரை, பதவி பிரமானம் இதை தவிர ஆளுனருக்கு வேலை இல்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X