ஆறு... பேஜாரு...!கலக்கும் கழிவால் நோய் அபாயம் நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தி| Dinamalar

ஆறு... பேஜாரு...!கலக்கும் கழிவால் நோய் அபாயம் நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தி

Added : ஜூன் 02, 2016 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ஆறு... பேஜாரு...!கலக்கும் கழிவால் நோய் அபாயம் நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தி

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே ஆழியாறு, உப்பாறும் சங்கமிக்கும் இடத்தில், கழிவு நீர் கலப்பதால், குடிநீர் மாசுபடும் அபாயம் உருவாகியுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில், போராட்டம் நடத்தப்படும் என, சமூக நல ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.
பொள்ளாச்சி அருகேயுள்ள ஆழியாறு அணையிலிருந்து, ஆழியாறு ஆற்றுக்கும், இங்கிருந்து, பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு தாலுகா பகுதிகளுக்கு, நீர் வினியோகிக்கப்படுகிறது.
ஆழியாறு அணை அருகே, அங்கலகுறிச்சி கூட்டுக்குடிநீர் திட்டம், கம்பாலபட்டி கூட்டுக்குடிநீர் திட்டம், ஆழியாறு ஆற்று நீரை பயன்படுத்தி, மயிலாடுதுறை அருகே கோட்டூர் பேரூராட்சி பயன்படுத்தும் வகையில், குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகின்றன.
தவிர, கோட்டூர், ஒடையகுளம், வேட்டைக்காரன்புதுார் பேரூராட்சிகள் மற்றும் 38 கிராமங்கள் பயன்பெறும் வகையில், கூட்டு குடிநீர் திட்டம், ஆனைமலை பேரூராட்சி பயன்பெறும் குடிநீர் திட்டமும், நகராட்சி பகுதிக்கு என, பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தற்போது, ஆற்று நீர் மாசுபட்டுள்ளதால், சுகாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
கழிவுகள் சங்கமம்ஆனைமலை பகுதியில், ஆழியாறும், உப்பாறும் சங்கமிக்கும் இடத்தில், கழிவு நீர் தேங்கி வருகிறது. சர்க்கார்பதியிலிருந்து, ஆனைமலை மாசாணியம்மன் கோவில் வழியாக ஆனைமலை பகுதிக்கு வரும் உப்பாறு நீரில், ஆனைமலை குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த கழிவு கலப்பதால், சாக்கடை நீராக மாறியுள்ளது.
பல லட்சம் மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ள, ஆற்று நீர் மாசுபடுவதை தடுக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் முன்வரவில்லை. மேலும், உள்ளாட்சி நிர்வாகங்கள், குடியிருப்பு பகுதியிலிருந்து வெளியேறும் கழிவு நீரை, சுத்திகரித்து, ஆற்றில் விடுவதற்கான எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. இதனால், துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் பகுதியாகவும் மாறி வருகிறது.
ஆழியாறு, உப்பாறு சங்கமிக்கும் பகுதியில் கழிவு நீர் கலப்பதை தடுத்து நிறுத்தி, குடிநீர் ஆதாரமாக உள்ள ஆற்றை பாதுகாக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, இப்பகுதியினரின் கோரிக்கையாக உள்ளது.
சமூக நல ஆர்வலர்கள் கூறுகையில், ''பொதுமக்கள் பயன்படுத்தும் நீரை சுகாதாரமாக தர வேண்டியது, சம்பந்தப்பட்ட நிர்வாகத்தின் பொறுப்பு. ஆற்று நீர் மாசுபடாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; தவறினால், பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj Pu - mumbai,இந்தியா
04-ஜூன்-201620:01:45 IST Report Abuse
Raj Pu பம்பா ஆறு,திருவண்ணாமலை என்று பக்தர்கள் அதிகம் கூட்டம் சேரும் இடங்களில் எல்லாம் நீர்நிலைகள் பாழ்படுகின்றன. மக்களுக்கும் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் அரசும் மெத்தனமாக உள்ளதால் , இது போன்ற நிலை தொடர்கிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X