சல்மா 'நட்பு' அணை| Dinamalar

சல்மா 'நட்பு' அணை

Added : ஜூன் 04, 2016
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement



பிரதமர் மோடியால் நேற்று துவக்கி வைக்கப்பட்ட 'ஆப்கன் - இந்தியா நட்பு அணையின்' முந்தைய பெயர் சல்மா அணை. உள்நாட்டு போர், பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல், சிக்கலான அமைவிடம் போன்ற சவால்களை கடந்து இந்த அணை கட்டும் திட்டம் நிறைவடைந்துள்ளது. இதில் இந்தியாவின் பங்கு மகத்தானது.
இந்த அணையால் 80 ஆயிரம் எக்டேர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். 42 மெகாவாட் நீர் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படும். அணை கட்டும் பணி 1976ல் ஆப்கானிஸ்தான் அரசால் துவக்கப்பட்டது. அங்குள்ள ஹெராத் மாகாணத்தில் சிஷ்டி செரிப் மாவட்டத்தில் ஹரி ஆற்றின் குறுக்கே, இந்த அணை கட்டப்பட்டது.
அப்போது ஏற்பட்ட சோவியத் யூனியன் - ஆப்கன் கிளர்ச்சியாளர்கள் போரால் இப்பணி பாதிக்கப்பட்டது. பின் 1988ல் இந்திய நிறுவனமான 'வாப்காப்ஸ் லிமிடெட்' இப்பணியை தொடங்கியது. மீண்டும் அங்கு ஏற்பட்ட உள்நாட்டு போரால் பாதியிலேயே கைவிடப்பட்டது. கடந்த 2006ல் அணை கட்டுவதற்காக ரூ. 1700 கோடியை இந்தியா ஒதுக்கியது. இந்தியா, ஆப்கன் பொறியாளர்கள் இணைந்து இப்பணியை மேற்கொண்டனர்.
சல்மா அணை கட்டுமான பணியை தடுப்பதில் ஈரான் மறைமுகமாக செயல்பட்டதாக, ஆப்கன் மக்கள் நம்புகின்றனர். அணை கட்டினால் ஈரானுக்கு நீர்வரத்து குறையும் என்பதால், தலிபான்களுக்கு நிதி வழங்கி எதிர்ப்பு தெரிவிக்க வைத்தனர் என கருத்து நிலவுகிறது இந்த அணை கட்டும் பணியில் மும்முரமாக ஈடுபட்டதற்காக 2010 ஜனவரியில் சிஷ்டி செரிப் மாவட்ட கவர்னர், தலிபான்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த 2013ல் இந்த அணையை வெடி வைத்து தகர்க்கும் சதிச் செயல் நடப்பதாக, ஆப்கன் தேசிய பாதுகாப்பு ஏஜன்சி குற்றம்சாட்டியது. சவால்களை கடந்து அணை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X