கவனிப்பை எதிர்பார்க்காத கல்வி அதிகாரி: 'வாட்ஸ் ஆப்'பில் குவியும் வாழ்த்துகள் Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கவனிப்பை எதிர்பார்க்காத கல்வி அதிகாரி:
'வாட்ஸ் ஆப்'பில் குவியும் வாழ்த்துகள்

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் பெறுதல், இடமாறுதல், 'பென்ஷன்' போன்றவற்றுக்கு அதிகாரிகளை கவனித்தே உத்தரவு பெறும் நிலையில், எதையும் எதிர்பார்க்காமல் உத்தரவிட்ட அதிகாரிக்கு, 'வாட்ஸ் ஆப்'பில் வாழ்த்துகள் குவிகின்றன.

கல்வி அதிகாரிக்கு 'வாட்ஸ் ஆப்'பில் குவியும் வாழ்த்துகள்


தமிழகத்தில் தொடக்கப் பள்ளி, பள்ளிக்கல்வி, அனைவருக்கும் கல்வி இயக்கம், எஸ்.எஸ்.ஏ., எனப்படும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கமான ஆர்.எம்.எஸ்.ஏ., என, பல துறைகளின் கீழ், ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.இடம் மாறுதல், விடுப்புகளை சரிசெய்தல், பாஸ்போர்ட் வாங்க அனுமதி, பி.எப்., மற்றும் பதவி உயர்வு பெறுவது

என, அனைத்து வகையான பணிகளுக்கும், கல்வி அலுவலக பணியாளர்களையும், மேலதிகாரிகளையும், 'கவனிக்க' வேண்டியது கட்டாயம். இதில் சிலஅதிகாரிகளும், பணியாளர்களும் மட்டும் விதிவிலக்கு.
இந்த வகையில், தற்போது,10 ஆண்டுகள், 20 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை அந்தஸ்து வழங்கப்படுகிறது. இதற்கான உத்தரவுகளை, 5ம் வகுப்பு வரை, தொடக்கக் கல்வி அதிகாரியான, ஏ.இ.இ.ஓ., பிறப்பிக்கிறார்; 10ம் வகுப்பு வரை மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரியான டி.இ.ஓ.,வும், அதற்கு மேல், சி.இ.ஓ.,வும் பிறப்பிக்கின்றனர்.
இந்தாண்டு இந்த தேர்வு நிலை அந்தஸ்தை பெற, ஆசிரியர்கள் தங்கள் அதிகாரிகளை நேரில் சந்தித்தும் தலைமை ஆசிரியர்கள் மூலமும் தேவையானவற்றை
கவனித்துவருகின்றனர்.
ஆனால், மதுரை மாவட்ட, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஜான் கென்னடி அலெக்சாண்டர், நேற்று முன்தினம், அலுவலகத்துக்கு மனுக்கள் கொண்டு சென்ற, 50 ஆசிரியர்களுக்கு, உடனடியாக ஆவணங்களை ஆய்வு செய்து தேர்வு நிலை அந்தஸ்து சான்றிதழ் வழங்கிஉள்ளார்.
இதனால், திக்குமுக்காடி போன ஆசிரியர்கள்,

Advertisement

'வந்த காரியம் இவ்வளவு எளிதில் முடிந்துவிட்டதே' என, ஆச்சர்யமடைந்து, அந்த அதிகாரிக்கு பரிசளிக்க நினைத்துள்ளனர். அதையும் அவர் ஏற்றுக் கொள்ளாமல், 'பள்ளிக்கு சென்று சிறப்பாக கல்வி பணியாற்றுங்கள்' என, அறிவுரை கூறி அனுப்பியுள்ளார். இந்த தகவல், ஆசிரியர்களின் மொபைல் போன்களில் உள்ள வாட்ஸ் ஆப் குழுக்களில் உலா வந்து அனைவரின் பாராட்டையும் பெற்ற வண்ணம் உள்ளது.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramalingam Gurusamy - Toronto ,கனடா
07-ஜூன்-201621:46:37 IST Report Abuse

Ramalingam Gurusamyகல்வி துறையில் கையூட்டு இல்லாமல் காரியம் சாதித்தல் என்பது குதிரை கொம்பு போன்ற இக்காலத்தில் பைசா செலவில்லாமல் ஆசிரியர்களுக்கு தேர்வுநிலை பதவி உயர்வு வழங்கி உதவிய கல்வி அதிகாரிக்கு கடவுள் அருள் உண்டு. அவரின் யதார்த்த குணம் அனைவரும் பின்பற்ற வேண்டும் மனிதம் போற்றும் செயலாகும்.

Rate this:
selvakumar - trivandrum,இந்தியா
07-ஜூன்-201621:25:39 IST Report Abuse

selvakumarஇது தாங்க இன்னைக்கு தமிழ் நாடு நிலைமை.

Rate this:
SRIVIRAJA - SRVILLIPUTTUR,இந்தியா
07-ஜூன்-201618:43:32 IST Report Abuse

SRIVIRAJAகென்னடி அலெக்சாண்டருக்கு வாழ்த்துக்கள், இவரைப்போன்று எல்லா அதிகாரிகளும் வேலை செய்தால் நாடு முன்னேறும்

Rate this:
மேலும் 20 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X