ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு: அனைத்து தரப்பும் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்ய உத்தரவு Dinamalar
பதிவு செய்த நாள் :
  ஜெ.,சொத்து குவிப்பு வழக்கு,  ஒத்திவைப்பு

தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான, சொத்து குவிப்பு வழக்கில், வாதங்கள் முடிவடைந்ததை தொடர்ந்து, தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது, சுப்ரீம் கோர்ட்.தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவருடைய தோழி சசிகலா மற்றும் சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில், அவர்களுக்கு, தலா, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து, சிறப்பு கோர்ட் நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா, 2014 செப்., 27ம் தேதி, தீர்ப்பு அளித்தார்.

  ஜெ.,சொத்து குவிப்பு வழக்கு,  ஒத்திவைப்பு


இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கை விசாரித்த, கர்நாடக ஐகோர்ட் நீதிபதி குமாரசாமி, சிறப்பு கோர்ட் தீர்ப்பை தள்ளுபடி செய்ததுடன், நால்வரையும் விடுதலை செய்து, 2015, மே11ம் தேதி, தீர்ப்பு அளித்தார்.இந்த தீர்ப்புக்கு எதிராக, கர்நாடக அரசு, தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன், பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி ஆகியோர், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த ஆண்டு, ஜன., 8ம் தேதி முதல், தொடர்ந்து இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் விசாரித்து வந்தது. இந்நிலையில், அனைத்து தரப்பு வாதங்களும் நேற்று நிறைவடைந்தன. அதை தொடர்ந்து, தீர்ப்பைஒத்திவைப்பதாக, நீதிபதிகள், பினாகி

Advertisement

சந்திர கோஸ், அமிதவ் ராய் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு, நேற்று அறிவித்தது.அனைத்து தரப்பினரும், தங்கள் வாதங்களை, வரும் 10ம் தேதிக்குள் தாக்கல் செய்யவும், அமர்வு உத்தரவிட்டது. கோடை விடுமுறைக்கு பின், கோர்ட் திறக்கப்பட்டதும், தீர்ப்பு தேதி வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியல் பரபரப்பு

'தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான இந்த வழக்கில், தீர்ப்பு எப்படி இருக்கும்' என, தமிழக கட்சிகள் இடையே, மீண்டும் பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (237)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
a natanasabapathy - vadalur,இந்தியா
09-ஜூன்-201612:39:36 IST Report Abuse

a natanasabapathy66 கோடி ஊழல். அதை விசாரிக்க 600 கோடி செலவு. இதுதான் ஜனநாயகம். ஆயிரம் லக்ஷம் கோடிகளில் ஊழல் செய்தவநேல்லாம் சுதந்திரமாக சுற்றி வருகிறான். நான்கு வருடத்தில் ஒரு கவுன்சிலர் இரண்டு மனைவி மூன்று வீடு நான்கு கார் கோடிகளில் பணம் சம்பாதித்தது விடுகிறான். எவன் மீதாவது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா? அரசியல் காரணங்களுக்காகவே இத்தகைய வழக்குகள் போடப்படுகின்றன.

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
09-ஜூன்-201623:26:33 IST Report Abuse

தமிழ்வேல் அதற்காக 66 கோடிக்கு வழக்கு போடாமல் இருக்க முடியாது....

Rate this:
Panneer - Puduchery,இந்தியா
08-ஜூன்-201622:15:05 IST Report Abuse

Panneerதீர்ப்பு தெரிந்தது தான்.சசிகலா,& கோ எப்படி குறுகிய காலத்தில் சொத்து சேர்த்தார்கள் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியாயப்படுத்துவார்களா? சட்டத்தில் உள்ள ஓட்டைகளை சுட்டிகாட்டி வழக்கை தள்ளுபடி செய்து மழுப்பலான தீர்ப்பு தான் வரும்.. முற்றிலும் மாறுபட்ட இரண்டு தீர்ப்புகளில் குறிப்பிட்ட அடிப்படைகள் சரியா தவறா என்பதை இறுதி தீர்ப்பில் விளக்க வேண்டிய பொறுப்பு உச்ச நீதிமன்றத்துக்கு இல்லாமல் போனால் ஜனநாயகம் ,மற்றும் அரசமைப்பு சட்டம் மீது நம்பிக்கை போய்விடுமே

Rate this:
ravi - thiruvananthapuram,இந்தியா
08-ஜூன்-201621:45:20 IST Report Abuse

raviஅமரர் கல்கி அவர்கள் ,அனந்த விகடனில் ,1928 வருடம் ,சட்டம் ஒரு கழுதை என்று ஓர் கட்டுரை எழுதி இருந்தார் .அதில் நீதி மன்றங்களில் வழங்க படும் தீர்ப்புகளில் உள்ள குறைகள் ,நீதி வேறு ,சட்டம் வேறு என்று அழகாக எடுத்து காட்டி இருந்தார் .வக்கீல்களின் பேராசை, நீதிபதிகளின் முட்டாள்தனங்களும் சிறப்பாக எடுத்து உரைக்கப்பட்டிருந்தது .

Rate this:
மேலும் 233 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X