தமிழகத்தில் உளுந்து, துவரம் பருப்புகளின் விலை குறையுமா? கூடுதல் ஒதுக்கீடு அளிக்கிறது மத்திய அரசு Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
குறையுமா?.
தமிழகத்தில் உளுந்து, துவரம் பருப்புகளின் விலை
கூடுதல் ஒதுக்கீடு அளிக்கிறது மத்திய அரசு

பருப்புகளின் விலையை, கிலோவுக்கு, 120 ரூபாய்க்கு அதிகமாக விற்பதை தடுக்கும் வகையில், தமிழகத்துக்கு, 2,023 டன் உளுந்து மற்றும், 1,000 டன் துவரம் பருப்பை அளிக்கிறது மத்திய அரசு.
அதிக அளவில் பருப்புகளை உற்பத்தி செய்யும் மற்றும் பயன்படுத்தும் நாடாக, இந்தியா உள்ளது.

தமிழகத்தில் உளுந்து, துவரம் பருப்பு, விலை  குறையுமா,  கூடுதல் ஒதுக்கீடு, அளிக்கிறது மத்திய அரசு


இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால், பருப்புகளின் உற்பத்தி வெகுவாக குறைந்து விட்டது.இதனால், உள்நாட்டு சந்தைகளில், பருப்புகளின் விலை தாறுமாறாக உயர்ந்தது. தமிழகத்தில், தினசரி உணவில் பயன்படுத்தப்படும், உளுந்து மற்றும் துவரம் பருப்பின் விலை, கிலோ, 200 ரூபாய் வரை உயர்ந்தது.தேவைக்கு ஏற்ற அளவில், உற்பத்தி இல்லாததால், அதிக அளவில் பருப்புகளை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பருப்பு வகைகளை இறக்குமதி செய்வதற்கு, தனியார் நிறுவனங்களுக்கு அரசு அனுமதி அளித்தது. இருப்பினும் பருப்புகளின் விலை குறையவில்லை.
அதைத் தொடர்ந்து, மியான்மரில் இருந்து, மத்திய அரசே, நேரடியாக பருப்பு வகைகளை, இறக்குமதி செய்து, கையிருப்பு வைக்க முடிவு செய்தது. அதன்படி மத்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன்


தலைமையில், இந்திய குழுவினர், மியான்மர் சென்று பேச்சு நடத்தினர். இதையடுத்து, முதல்கட்டமாக, மியான்மரில் இருந்து, 11 ஆயிரம் டன் துவரம் பருப்பு, 2,000 டன் உளுந்து வந்துள்ளன. மேலும், 6,000 டன் பருப்பு, விரைவில் வர உள்ளது.
இந்த நிலையில், 'உயர்ந்து வரும் பருப்பின் விலையைக் கட்டுப்படுத்த,கூடுதல் தொகுப்பில் இருந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும்' என, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தன.அதைத் தொடர்ந்து, மத்திய நுகர்வோர் நலத்துறைச் செயலர் ஹேம் பாண்டே தலைமையில், நேற்று நடந்த, அமைச்சரவைகளுக்கு இடையேயான கூட்டத்தில், மாநிலங்களுக்கு கூடுதல் பருப்பு வகைகளை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்துக்கு, 2,023 டன் துவரம் பருப்பும், 1,000 டன் உளுந்தும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், தெலுங்கானா மாநிலங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம், ஆந்திரா, தெலுங்கானாவில், இந்த பருப்புகள் ரேஷன் கடைகளில், குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. தற்போது தமிழகத்துக்கு கூடுதல் ஒதுக்கீடு கிடைத்துள்ளதால், வெளிச் சந்தையிலும் உளுந்து மற்றும் துவரம் பருப்பின் விலை குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த, நான்கு மாதங்களாக ரேஷனில் உளுந்துகிடைக்கவில்லை. வெளிச் சந்தையிலும் விலை உயர்ந்து வருவதால், குடும்பத்தின் செலவு உயர்ந்து கொண்டே போகிறது. விலை உயர்வை கட்டுப்படுத்த, பதுக்கலை தடுக்க வேண்டும்.ஸ்ரீவித்யா, இல்லத்தரசி, சென்னை.

விலை என்ன?


ரேஷன் கடைகள் மூலம், உளுந்து மற்றும்

Advertisement

துவரம் பருப்பு விற்கப்படுகின்றன. இவை தலா, கிலோ, 30 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன.அதே நேரத்தில், சென்னையில், வெளிச் சந்தையில், துவரம் பருப்பு கிலோ, 140 - 170 ரூபாய்; உளுந்து கிலோ, 160 - 170 ரூபாய் என்ற விலைக்கு விற்கப்படுகிறது.

ஏன் பற்றாக்குறை?




* நாட்டின் சராசரி பருப்புகளின் தேவை, 2 கோடி டன்
* 2013 - 14ல், 1.92 கோடி டன்னாக இருந்த உற்பத்தி, 2014 - 15ல், 1.73 கோடி டன்னாக குறைந்தது
* 2014 - 15ல், 45.8 லட்சம் டன்னாக இருந்த இறக்குமதி, 2015 - 16ல், 57.9 லட்சம் டன்னாக உயர்ந்தது
* இந்த ஆண்டில், தனியார் நிறுவனங்கள் மூலம், 38,500 டன் பருப்புகள் இறக்குமதி செய்யப்பட்டன
* கரீப் பருவத்தில், 51 ஆயிரம் டன் மற்றும் ரபி பருவத்தில், 60 ஆயிரம் டன் பருப்புகளை மத்திய அரசு கொள்முதல் செய்துள்ளது
* முதல் முறையாக மத்திய அரசே நேரடியாக பருப்பு இறக்குமதி செய்துஉள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Saravanan - Trichy,இந்தியா
12-ஜூன்-201610:15:22 IST Report Abuse

Saravananஎன்றைக்கு விவசாயத்தையும், விவசாயியையும் மதிக்கிறோமோ அன்றைக்கு தான் நாடு உருப்படும்.

Rate this:
Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா
11-ஜூன்-201604:55:24 IST Report Abuse

Barathanஎல்லா பதுக்கல்காரர்களையும் கண்டுபிடித்து தண்டனை வழங்க வேண்டும். செய்யுமா மாநில மற்றும் மத்திய அரசும். ஒரு சில சூப்பர் மார்கட்களில் யாரு கேட்க போறாங்க என்ற எண்ணத்தில் விலையை காட்டுத்தனமாக ஏற்றி விற்கிறார்கள். உதாரணம் புதுச்சேரியில் ஒரு க்ரோசரி ஷாப்பில் உளுந்தின் விலை Kg 170 ரூ. அதே தரமுள்ள உளுந்து பக்கத்தில் உள்ள சூப்பர் மார்க்கட்டில் kg 220 ரூ க்கு விற்கிறார்கள்.

Rate this:
raghavan - Srirangam, Trichy,இந்தியா
08-ஜூன்-201609:53:52 IST Report Abuse

raghavanஇப்படி விலை உயர்ந்து போன பருப்பால் தான் திமுக கூட்டணி 98 சீட்டுகளை பிடித்தது.. வெங்காயம் கூட ஆட்சியை கவிழ்க்கும் வல்லமை பெற்றது..

Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X