மத்திய அமைச்சர்களை சந்திப்பாரா ஜெ., Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மத்திய அமைச்சர்களை
சந்திப்பாரா ஜெ.,

டில்லிக்கு வரும் முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடியை மட்டும் சந்தித்துவிட்டு, சென்னை திரும்புகிறாரா அல்லது பிற அமைச்சர்களையும் சந்திப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மத்திய அமைச்சர்களை சந்திப்பாரா ஜெ.,

மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், டில்லிக்கு வந்து, பிரதமர் உட்பட முக்கிய மத்திய அமைச்சர்களை, மரியாதை நிமித்த மாக, முதல்வர் கள் சந்திப்பது வழக்கம். இதன்படி, தமிழக முதல்வர் ஜெயலலிதா,

வரும் 14ல், டில்லிக்கு வரவுள்ளார். இரண்டு ஆண்டு இடை வெளிக்கு பின், முதல்வர் டில்லிக்கு வருவதால், அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளில், டில்லி அ.தி.மு.க., வினர் தீவிரமாக உள்ளனர்.

பிரதமர் மட்டுமல்லாது, மத்திய அமைச்சர்கள், தேசிய கட்சிகளின் தலைவர்களையும், ஜெயலலிதா சந்திக்கலாம் என்பதால், இரண்டு நாள் டில்லியில் தங்குவார் என, எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், 'ஒரு நாள் டில்லி பயணம்' என்றே குறிப்பிடப்பட்டுள் ளது.

மத்திய அமைச்சர்களை சந்திப்பது குறித்து, அதில் எதுவும்குறிப்பிடவில்லை. அப்படியானால், மற்ற மத்திய அமைச்சர்களை முதல்வர் சந்திப்பாரா மாட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிரதமருடனான சந்திப்புக்கு, மாலை, 4:40க்கு, நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 30 முதல் 45 நிமிடங் கள் வரை, இந்த சந்திப்பு இருக்கும்.

Advertisement

அதற்கு பின், யாரை யும் சந்திக்க வாய்ப்பு இருக்காது.

எனவே, பிரதமரின் இல்லத்திலிருந்து, முதல் வரின் கார், நேரடியாக விமான நிலையத்திற்கு செல்லவே வாய்ப்புள்ளளது. அவ்வாறு நடந்தால், அது, அரசியல் ரீதி யாக, ஆச்சரியங் களை ஏற்படுத்தும்.

Advertisement

வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sethusubramaniam - chennai,இந்தியா
10-ஜூன்-201618:06:59 IST Report Abuse

sethusubramaniamமரியாதை நிமித்த சந்திப்பெல்லாம் மரியாதை தெரிஞ்சவங்களுக்கு தான். அந்த மத்திய அமைச்சர்களெல்லாம் O.P.S. மாதிரி கும்பிடுவான்களா சொல்லுங்க. சந்திக்க முயற்சிக்கிறோம்.

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
10-ஜூன்-201617:08:17 IST Report Abuse

K.Sugavanamதினமலருக்கு மத்திய அமைச்சர்கள் மேல் என்ன கோபமோ?

Rate this:
Chandru covai - coiambatore,இந்தியா
10-ஜூன்-201616:33:49 IST Report Abuse

Chandru covaiகொடநாட்ல வந்து பார்க்கட்டும் மத்திய அமைச்சர்கள்.

Rate this:
மேலும் 43 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X