வெளுத்து வாங்கும் மழை... தீவிரமடைகிறது தென்மேற்கு பருவமழை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வெளுத்து வாங்கும் மழை... தீவிரமடைகிறது தென்மேற்கு பருவமழை

Updated : ஜூன் 10, 2016 | Added : ஜூன் 10, 2016 | கருத்துகள் (13)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
monsoon, பருவமழை

சென்னை : தமிழகம் மற்றும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளது. இதனால் தமிழகத்தில் நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
தமிழகம் மற்றும் கேரளாவில் 2 நாட்களுக்கு முன் தென்மேற்கு பருவ மழை துவங்கி உள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையால் இந்த ஆண்டு கூடுதலாக 4 முதல் 6 சதவீதம் வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மழையால் சேதம் ஏற்படுவதை தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசு, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழையால் நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகளும், ஏரிகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.

தமிழகம் மற்றும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.

தொடர் கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் கடல்சீற்றமும் அதிகரித்து காணப்படுவதால் விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
மழையால் குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. குற்றால சீசன் துவங்கி உள்ள சமயத்தில், அருவிகளில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்படுவதால், அவ்வப்போது அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் மழை நிலவரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், தென்மேற்கு பருவமழை கர்நாடகத்தில் தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தில் இன்று (ஜூன் 10) சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். தென் மாவட்டங்களில் சில இடங்களிலும், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும். சென்னையை பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நேற்று காலையுடன் முடிந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 10 செ.மீ., மழை பெய்துள்ளது என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kuppuswamykesavan - chennai,இந்தியா
11-ஜூன்-201600:26:25 IST Report Abuse
kuppuswamykesavan ஏரி குளம் ஆறு ஓடை இருந்த இடம் தெரியலே,பெய்த மழை எங்கேன்னு ஒருத்தருக்கும் புரியலே. என்னமோ நடக்குது,இந்த உலகில் மர்ம்மம்மா இருக்குது. ஒண்ணுமே புரியலே உலகத்திலே. - பாடல் போல.
Rate this:
Share this comment
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
10-ஜூன்-201614:01:32 IST Report Abuse
Rajendra Bupathi மழை பேஞ்சா என்ன மங்காணி பேஞ்சா என்ன ?ஏரி, குளத்த தூர் வாருனா என்ன ?வாராட்டா என்னா.?நம்ப வயிரு ரொம்புனா சரி.ஆனா ஒண்ணு எந்த அரசியல் வாதியும் நல்லாவே இருக்கா மாட்டிங ஆமா.நாட்ட பத்தி கொஞ்சமாவது நெனைச்சி பாருங்கய்யா.கங்கிரஸ் காலத்துக்கு பிறகு எந்த ஏரி குளத்தெயாவது தூர் வாரி இருப்பிங்களா,மனச் தொட்டு சொல்லுங்க இல்ல விவசாயிங்களையாவது ஏரி மண்ண அள்ளதான் அனுமதிச்சிங்களா.?
Rate this:
Share this comment
vadivelu - chennai,இந்தியா
11-ஜூன்-201603:59:19 IST Report Abuse
vadivelu1967 க்கு பிறகு என்று வேண்டுமானால் சொல்லுங்க , காங்கிரஸ் ஆளும் கர்நாடகம் இதை விட மோசமாகவே செயல் படுகிறது.தமிழ அரசியல்வாதிகள் கல்லா கட்டுவதில்தான் குறியாக இருக்கிறார்கள், இதில் காங்கிரஸ் காட்சிக்காரன் விலக்கல்ல, மத்தியில் போய் இருந்து பெரிய கல்லா மாளிகையை கட்டுகிறான்....
Rate this:
Share this comment
Cancel
Nakuleswaran - Chennai,இந்தியா
10-ஜூன்-201612:56:04 IST Report Abuse
Nakuleswaran ". இதனால் மழையால் சேதம் ஏற்படுவதை தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவு." அப்போ நீரைச் சேமிக்க எந்த நடவடிக்கையும் இல்லையா? அதுவல்லவா முதல் செய்யவேண்டியது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X