மீண்டும், தீனதயாள்,வீட்டில்,சிலைகள்,சோதனை | பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் மீண்டும் கண்டுபிடிப்பு: கடத்தல்காரன் தீனதயாள் வீட்டில் தொடர்கிறது சோதனை Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மீண்டும், தீனதயாள்,வீட்டில்,சிலைகள்,சோதனை

சர்வதேச சிலை கடத்தல்காரன் தீனதயாளுக்கு சொந்தமான, சென்னையில் உள்ள சொகுசு பங்களா மற்றும் குடோனில், போலீசார் மீண்டும் சோதனையை துவக்கி உள்ளனர். நேற்று நடந்த சோதனையில், பூமிக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தவை உட்பட, பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

மீண்டும், தீனதயாள்,வீட்டில்,சிலைகள்,சோதனை

சர்வதேச சிலை கடத்தல்:காரன் சுபாஷ் சந்திர கபூரின் நெருங்கிய கூட்டாளி தீனதயாள், 83. இவன், சென்னை, ஆழ்வார்பேட்டை, 'முர்ரேஸ் கேட்' சாலையில் உள்ள வீட்டில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள, பழங்கால சிலைகளை பதுக்கி வைத்திருப்பதாக, மாநில சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல், டி.எஸ்.பி., சுந்தரம் தலைமையிலான போலீசார், கடந்த வாரம், தீனதயாளுக்கு சொந்தமான சொகுசு பங்களாவில் சோதனை நடத்தி, பல கோடி ரூபாய் மதிப்புள்ள, ஐம்பொன், யானை தந்தம் சிலைகள் மற்றும் கற்சிலைகள் என, 125 சிலைகள், பழங்கால ஓவியங்கள், கலைப்

பொருட்களை பறிமுதல் செய்தனர். மத்திய தொல்லியல் துறை நிபுணர்களும், அந்த சிலைகளை ஆய்வு செய்தனர்.இதற்கிடையில், கடத்தல்காரன் தீனதயாள், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் முன் சரணடைந்து, ஒப்புதல் வாக்குமூலம் அளித்து வருகிறான். அதனடிப்படையில், சென்னை, ஆழ்வார்பேட்டை, வீனஸ் காலனி, 'முர்ரேஸ் கேட்' சாலையில், தீனதயாள் வாடகைக்கு எடுத்துள்ள மற்றொரு சொகுசு பங்களா மற்றும் குடோனில், ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீசார், நேற்று முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த வாரம், நீதிமன்றத்தில் முறையாக அனுமதி பெற்று, சர்வதேச சிலை கடத்தல்காரன் தீனதயாளின் சொகுசு பங்களாவில்சோதனை நடத்தினோம். எங்களிடம் சரணடைந்துள்ள தீனதயாள், தன் சொகுசு பங்களாவுக்கு அருகே, மற்றொரு சொகுசு பங்களா மற்றும் கல்நாரில் வேயப்பட்ட கூரையுடைய குடோனை வாடகைக்கு எடுத்துள்ளதாகவும், அவற்றில் சிலைகளை பதுக்கி வைத்திருப்பதாகவும் கூறினான்.

அந்த இரு இடங்களிலும், நீதிமன்ற அனுமதிக்கு பின் நேற்று மதியம் முதல், இரண்டு குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தி வருகிறோம். சொகுசு பங்களா, இரண்டு தளங்கள் உடைய கட்டடம். முதல் தளத்தை உடைத்துப் பார்த்த போது, வீடு முழுக்க சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது

Advertisement

தெரிய வந்தது. மேலும் பங்களாவுக்கு வெளியே அடுக்கி வைக்கப்பட்டு இருந்த, 37 கற்சிலைகள், தங்க முலாம் பூசப்பட்ட ஓவியங்களை பறிமுதல் செய்துள்ளோம்.

முன்னதாக, தீனதயாளின் குடோனில் சோதனையை முடிக்க தீவிரம் காட்டினோம். இந்த குடோன், 'ஹாலோ பிளாக்' கல்நார் கொண்டு கட்டப்பட்டுள்ளது. 'ஷட்டரை' திறந்து பார்த்த போது மரத்தால் செய்யப்பட்ட மரப் பெட்டிகள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.

உறுதியான தேக்கு உள்ளிட்ட மரங்களால் செய்யப்பட்ட பெட்டி களின் மேல் பகுதியில், 'லெதர் பேக்ஸ்' என குறிப்பிட்டு, கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக, 'ஸ்கெட்ச் பேனா'வால், தடித்த எழுத்தில் எழுதப்பட்டு இருந்தது.

பெட்டியில், சிலைகளுக்கு எவ்வித சேதமும் ஏற்படாதபடி, வைக்கோல் மற்றும் துாள் துாளாக வெட்டப்பட்ட காகிதத்திற்கு மத்தியில், விநாயகர், விஷ்ணு, சிவன் மற்றும் அம்மன் என, ஏராளமான சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. இந்த பெட்டிகள், வெளிநாடுகளுக்கு கடத்த தயாராக இருந்தவை என்பதை தீனதயாளும் உறுதி செய்துள்ளான். இதுவரை, பல கோடி ரூபாய் மதிப்புள்ள, நுாற்றுக்கும் மேற்பட்ட சிலைகளை பறிமுதல் செய்துள்ளோம். பூமிக்கு அடியிலும் சிலைகளை பதுக்கி வைத்திருப்பதாக தீனதயாள் தெரிவித்துள்ளதால், அதையும் வெளியில் எடுக்க முற்பட்டுள்ளோம். வீடு முழுக்க மலைபோல் குவித்து வைக்கப் பட்டுள்ள சிலைகளை மீண்டும் மத்திய தொல்லியல் துறை நிபுணர்கள் ஆய்வு செய்ய உள்ளனர்; சோதனை தொடர்ந்து நடக்கிறது.இவ்வாறு போலீசார் கூறினர்.

1,000 ஆண்டு சிலைகள்:போலீசார் பறிமுதல் செய்த சிலைகளை, தமிழக தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் நாகசாமி, நேற்று ஆய்வு செய்தார். அவர் கூறுகையில், ''நம் பண்பாடு, கலாசாரத்தை பிரதிபலிக்கும் இந்த சிலைகள், 1,000 ஆண்டுகள் பழமையானவை. சிலைகளை குப்பை போல் பதுக்கி வைத்திருந்தது வேதனை யளிக்கிறது. வெளிநாடுகளுக்கு கடத்த இருந்த சிலைகளை மீட்ட போலீசாருக்கு பாராட்டுக்கள்,'' என்றார்.

- நமது நிருபர் குழு -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kuppuswamykesavan - chennai,இந்தியா
12-ஜூன்-201623:50:36 IST Report Abuse

kuppuswamykesavan2000 வருஷம் முந்தைய சிலையில், அந்தகாலகட்டத்தில், மக்கள் வாழ்ந்த முறை, அக்கால ஆடை அணிகலன்கள் மற்றும் ஆயுதங்கள் காணப்படும். வேறு வேறு மாவட்ட மக்கள் செய்த சிலைகள் வேறுவேறு விதமாக இருக்கும்.Intha சிலைகள் அந்தகால மக்கள் வாழ்ந்ததற்கு ஓர் சிறந்த சாட்சியங்கள் எனலாம். இப்படிப்பட்ட சிலைகள் நம் மண்ணில் இருக்கும்போதுதான் இவை நம் எதிர்கால தலைமுறைக்கு நம்முடைய பழைய சரித்திரம் கூறும் சாட்சிகளாக இருக்கும்.

Rate this:
Madhav - Chennai,இந்தியா
12-ஜூன்-201623:04:37 IST Report Abuse

Madhavஇது சிற்பியின் கை வண்ணம், எந்த சிற்பியிடம் இருந்து திருடியதாக சொல்லவே இல்லையே ?

Rate this:
Gostraight - chennai,இந்தியா
12-ஜூன்-201622:56:48 IST Report Abuse

Gostraightஇவ்வளவு சாமி சிலைகைளை வச்சிக்கிட்டு இவன் என்ன பண்ணுகிறான் ? கண்டுபிடிக்கலை என்றால் எவ்வளவு பொக்கிசங்கள் ஜனங்களுக்கு கிடைக்காம போயிருக்கும் . சபாஷ் காவல் துறை ..

Rate this:
Rajasekaran Palaniswamy - georgia,யூ.எஸ்.ஏ
12-ஜூன்-201622:30:46 IST Report Abuse

Rajasekaran Palaniswamy87 வயதுடைய ஒருவரால் 10 கிலோ சிலையை தூக்கிகொண்டு 10 அடி தூரம் கூட செல்லமுடியாது. எப்படி பல ஆயிரம் கிலோ மீட்டர் நடக்க முடியும். அரசியல்வாதிகளின், காவல்துறை கருப்பு ஆடுகளின் துணையின்றி இது நடக்க வாய்ப்பே இல்லை. என்ன சந்தன கடத்தல் வீரப்பனைபோல் தீனதயாளன் மட்டும் தண்டிக்க முற்படுவார்கள். அவர் நமது சட்டத்தில் உள்ள பணம், அரசியல் பலம் உள்ளவர்க்ளுக்காகவே உருவாக்கப்பட்ட ஓட்டைகள் மூலம் வெளியே வந்துவிடுவார். நமது நிதியரசர்களும் அவர்கள் பங்குக்கு ஜாமீன் கொடுத்து தங்களின் நன்றி கடனை செலுத்தி விடுவார்கள்.

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
12-ஜூன்-201615:42:33 IST Report Abuse

இந்தியன் kumarகலிகாலம் முற்றி கொண்டு வருகிறது சீக்கிரமே எல்லாம் முடிவுக்கு வரும்.

Rate this:
siriyaar - avinashi,இந்தியா
12-ஜூன்-201615:29:54 IST Report Abuse

siriyaarAs periyaar statues remains in tamilnadu streets. These things will continue. Bjp should break periyaarisam to become winner in tamilnadu

Rate this:
Durai Ramamurthy - Virudhachalam,இந்தியா
12-ஜூன்-201615:03:11 IST Report Abuse

Durai Ramamurthyதிருடுனதுல ஒன்னக்கூட வித்து காசு பாக்கலியேபா. இந்த கிரகத்திலேயே நீ அதிஷ்டம் இல்லாதவனப்பா.

Rate this:
Balaji - Khaithan,குவைத்
12-ஜூன்-201612:54:26 IST Report Abuse

Balajiஉரிய முறையில் விசாரித்து தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.... கடந்த முறை தீனதயாலனை கைது செய்யாமல் விட்டது போன்று இனியும் அவரை விடக்கூடாது..... ஏனெனில் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்ப்பட வாய்ப்புக்கள் அதிகமிருக்கிறது..... பல உண்மைகளை வெளிக்கொண்டுவர அவரின் பாதுகாப்பு மிகவும் முக்கியம்...... அதனால் அவரை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்........

Rate this:
Shanmugam - Manama,பஹ்ரைன்
12-ஜூன்-201612:15:01 IST Report Abuse

Shanmugamதமிழகத்தில் ஒரு தனி தொல்லியல் துறையே பல்லாண்டுகளாக நடத்தி வந்துள்ளான். இவ்வளவு பெரிய ஒரு திருட்டுக்கும்பல் பற்றி இதுவரை தெரியாமல் எப்படி இருக்கமுடியும். கடவுளுக்கு பயந்து முறையாக விசாரணை நடத்தினால் உண்மை வெளி வரும். அதற்கு வாய்ப்புகள் கிடையாது. தீன தயாளா. நீ செய்த பாவத்திற்கு பரிகாரமாக ரகசியங்களை உடைத்து கொஞ்சமாவது புண்ணியம் சேர்த்துக்கொள். தெய்வம் நின்று கொல்லும்.

Rate this:
baski - Chennai,இந்தியா
12-ஜூன்-201611:53:41 IST Report Abuse

baskiபல நாள் திருடன் ஒரு நாள் மாட்டிகிட்டான். இதே இவன் அரசியல் பதவில இருந்தா வெளியிலே தெரியாம இருந்திருக்கும்.

Rate this:
மேலும் 31 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement