சிறகடித்து பறக்கவிடு..!| Dinamalar

சிறகடித்து பறக்கவிடு..!

Updated : ஜூன் 12, 2016 | Added : ஜூன் 12, 2016 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
 சிறகடித்து பறக்கவிடு..!

இந்தியாவில் 11 குழந்தைகளுக்கு ஒரு குழந்தை, பள்ளி செல்லாமல் பணிக்கு செல்கிறது என'சேவ் த சைல்டு' எனும் அரசு சாரா அமைப்பின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு என்பதன் மீது மாநில அரசுகள், அரசு சாரா நிறுவனங்கள் முனைப்பு காண்பித்து வந்த போதிலும் குழந்தைகளை பணியில் ஈடுபடுத்துவது முழுவதும் ஒழியவில்லை.
குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு என்பது வலுப்பெறும் அதே நேரம், அது குறித்த முறையான கணக்கெடுப்புகள் தொடர்ந்து இருந்தால் தான், அவற்றை முற்றிலுமாக அகற்றுவதை நோக்கி செயல்பட இயலும். ஆனால் துரதிருஷ்டவசமாக 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் 2004, 2009 தொழிலாளர்கள் கணக்கெடுப்பு என பழைய தகவல்கள் தான் முன் நிற்கின்றன.
குழந்தை தொழிலாளர் கணக்கெடுப்பு மேற்கொள்ள இயலாத வகையில், மாநிலம் விட்டு மாநிலம் புலம் பெயரும் தொழிலாளர்கள், அவர்கள் குடும்பத்தினர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு, இங்கு ஓட்டுரிமையோ, முகவரியோ இல்லாத அவர்கள் தரப்பு குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
முற்றுப்பெறா பள்ளிக் கல்வி :குழந்தைகள் கல்வி கற்கும் உரிமையை பறிக்காமல் அவர்களை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும் என்பது தான் உலக அளவில் நிபுணர்களின் பரிந்துரையாக இருந்து வருகிறது. ஆனால் இந்தியாவில் 17.7 மில்லியன் குழந்தைகள் மற்றும் பருவமடையா இளம் சிறார்கள் பள்ளிக்கு செல்லாமலோ அல்லது பள்ளி கல்வியில் இருந்து இடையில் வெளியேறியோ திரிகிறார்கள்.
இது ஏறக்குறைய உலக மக்கள் தொகையில் 14 சதவிகிதம் என்கிறது ஆய்வறிக்கை. இந்தியாவில் பள்ளிக்கே செல்லாதவர்கள் 4.30 சதவிகிதம், 6 முதல் 13 வயதில் பள்ளியில் இருந்து வெளியேறுபவர்கள் 4.28 சதவிகிதம், 11 முதல் 13 வயதில் பள்ளியில் இருந்து வெளியேறுபவர்கள் 5.2 சதவிகிதம், வீட்டு வேலை பார்க்கும் தொழிலாளர்கள் 92 சதவிகிதத்தில் 20 சதவிகிதம் பேர் 14 வயதிற்கு குறைவான தொழிலாளர்கள் என்கிறது புள்ளி விபரம்.
உலகளவில்... ஆசியாவில் 61 சதவிகிதம், ஆப்ரிக்காவில் 32, லத்தீன் அமெரிக்காவில் 7, அமெரிக்காவில் 1 சதவிகிதம் என குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர். ஆசியாவில் நடைபெறும் வேலைகளில் 22 சதவிகிதமும், லத்தீன் அமெரிக்காவில் நடைபெறும் வேலைகளில் 17 சதவிகிதமும், அங்குள்ள குழந்தை தொழிலாளர்களால் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தியாவில் மட்டும் 70 முதல் 80 மில்லியன் குழந்தை தொழிலாளர்கள் இருப்பதாக 'சி.ஏ.சி.எல்' தெரிவிக்கிறது. குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை நாட்டுக்கு நாடு வேறுபட்ட போதிலும், தேசிய அளவில் 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் பணியமர்த்தப்படுவது முற்றிலும் தடுக்கப்படவில்லை.
அதிர்ச்சி தரும் சட்டத்திருத்தம் :உலகளவில் குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், இங்கு அதன் மீதான அதிகளவு விமர்சனத்தை ஆட்சியாளர்கள், தொழில் நிறுவன உரிமையாளர்கள் சந்திக்க வேண்டியிருக்கிறது என்பதாலேயே குழந்தை தொழிலாளர் (பாதுகாப்பு மற்றும் நெறிப்படுத்துதல்) சட்டம் 1986ன் மீது 2012 டிச.,4ல் ஒரு சட்டத்திருத்த மசோதா முன் வைக்கப்பட்டது.
2013 டிச., 13ல் மாநிலங்களவையில் வைக்கப்பட்ட போதிலும், இன்னும் பாராளுமன்றத்தால் ஏற்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இடையில் பல தரப்பினர் எதிர்ப்பை சமாளிக்கும் வகையில் தொழிலாளர் துறைக்கான பாராளுமன்ற நிலைக்குழுவிடம் இந்த திருத்த மசோதா முன் வைக்கப்பட்டது. பெயரளவில் சில பரிந்துரைகளை நிலைக்குழு தெரிவித்துள்ள போதிலும் முன் வைக்கப்பட்ட திருத்தம் வேண்டாம் என தெரிவிக்கவில்லை.
சட்டத்தை ஏமாற்றும் தொழில்கள்:நாடு முழுவதும் பல தொழில்களில் குழந்தைகளை நேரடியாக வேலைக்கு அனுப்பாமல், வீட்டளவிலான தயாரிப்பு பணிகளில் பயன்படுத்தப்படுகின்றனர். திருப்பூர் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் அதிகாரி ஒருவரிடம் வினவியபோது ''இங்கு ஏற்றுமதியை அங்கீகரிக்க வேண்டுமெனில் வருங்கால வைப்பு நிதி, இ.எஸ்.ஐ., போன்றவை அமலில் இருக்க வேண்டும்.
முறையாக வரி செலுத்தப்படுகிறது என்பன போன்ற ஆவணங்களை தணிக்கை ஒப்புதலுடன் காண்பிக்கும் நிறுவனங்களில் இருந்து தான் வாங்குபவர்கள் ஆர்டர் எடுக்கிறார்கள். எனவே இத்தகைய பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களாக செயல்படுகிற கம்பெனிகளில் மட்டும் தான் குழந்தை தொழிலாளர்கள் இல்லை.
மற்றபடி சிறு சிறு பணிகளாக 'அவுட் சோர்சிங்' முறையில் விடப்படும் ஒப்பந்தங்களை ஏற்கிற தனி நபர்கள், வீடுகளில் வைத்து குழந்தைகளை பணியில் ஈடுபடுத்துவது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது,'' என்றார்.
புலம் பெயர் தொழிலாளர்கள் :வட மாநிலங்களில் வறட்சி காரணமாக, மாநிலம் விட்டு மாநிலம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குடும்பங்களில் அவர்களின் குழந்தைகள் கட்டுமானப்பணிகள், சலையோர உணவகங்கள் போன்ற பலவற்றில் பணிபுரிய வைக்கப்படுகின்றனர். புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பாக ஆண்டு தோறும் முறையான கணக்கெடுப்பு, ஆய்வுக்கு உட்படுத்துதல் மற்றும் அவர்களை கண்காணிப்பதற்கான முறையான சட்ட நெறிமுறைகள் இல்லாமையால் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து கொண்டு இருக்கிறது.
கட்டாயக்கல்வி சட்டம் 2009 :14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும் எனவும், ஒவ்வொரு பள்ளியிலும் 25 சதவிகிதம் கட்டாய இலவச கல்விக்கான இட ஒதுக்கீடு செய்ய வேண்டுமெனவும் சட்டம் கொண்டு வரப்பட்டது. குடும்ப வறுமை, 20 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் உலகமயமாதல், ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றால் தான் குழந்தைகள், தொழிலாளர்களாக பணிபுரிய தள்ளப்படுகின்றனர். வறுமையின் காரணமாக கல்வியை துறக்கின்றனர். வேலைக்கு கடத்தப்படுகின்றனர். கடன் காரணமாக குடும்பத்தோடு கொத்தடிமையாக செல்வதாலும், குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
நிலை நிறுத்தும் உறுதிமொழி :மத்திய, மாநில அரசு மற்றும் இதர அலுவலகங்களில் ஆண்டு தோறும் ஜூன் 12ம் நாள் 'குழந்தைகளை வேலை வாங்க மாட்டேன்,' என்பதற்கான உறுதி மொழி எடுத்து கொள்ளப்படுகிறது. அதோடு நமது பணி முடிந்ததாக கருதாமல், அரசு துறைகள் உடனடியாக குழந்தை தொழிலாளர்கள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பாக சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்றை விரைவாக மேற்கொள்ள வேண்டும்.
கட்டாயக்கல்வி சட்டத்தின் கீழான குழந்தைகளின் கல்வி உரிமை மீறப்படாமல் இருக்க அதன் மீதான கண்காணிப்பு மற்றும் தண்டனை முறை நெறிப்படுத்தப்பட வேண்டும். புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பணிகளை நெறிப்படுத்துதலுக்கான சட்டமும் கடுமையாக்கப்பட வேண்டும்.''சிறகுகள் முளைத்துபறக்கத் துவங்குமுன்னேவெட்டப்படுகின்றன,'' என்கிற வரிகள் மாற்றப்பட்டு, குழந்தைகள் சிறகடித்து பறந்து சென்று சாதிப்பதை உறுதியாக்குவோம்!- எஸ்.சம்பத்,சமூக ஆர்வலர். 94420 36044

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
13-ஜூன்-201606:12:42 IST Report Abuse
Rajendra Bupathi கொடூரமான கொழந்தை தொழில் எதுன்னா குழந்தையை கடத்தி அவங்கள அங்கஹீனம் பண்ணி பிச்சை எடுக்க வைக்கிற துதான்.இததான் மொதல்ல கடுமையான சட்டம் போட்டு தடுக்கனும்.
Rate this:
Share this comment
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
13-ஜூன்-201606:09:39 IST Report Abuse
Rajendra Bupathi இவங்கள கட்டு படுத்தவோ ,இல்ல கண்காணிக்காவோ யாரும் இல்லாததால, எல்லா கெட்ட பழக்கங்களும் சின்னா வயசுலேயே கத்துக்குறாங்க.அதனால இவங்க யாருக்கும் பயபடுறதே இல்ல.
Rate this:
Share this comment
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
13-ஜூன்-201606:06:55 IST Report Abuse
Rajendra Bupathi சில நேரத்தில நிழல் உலக தாதாவாகவும்,இல்ல கூலிபடையாவும் மாறுராங்க.
Rate this:
Share this comment
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
13-ஜூன்-201606:05:22 IST Report Abuse
Rajendra Bupathi எல்லா தீவிரவத செயலும் இவங்க மூலமாதான் நடக்குது. இவங்களும் காசுக்கு அசைபட்டு எதவேணுமின்னாலும் செய்றாங்க.
Rate this:
Share this comment
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
13-ஜூன்-201606:03:02 IST Report Abuse
Rajendra Bupathi இவங்கதான் வருங்காலதின் அவுட்லாசாக உருவாகுறாங்க.
Rate this:
Share this comment
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
13-ஜூன்-201606:01:11 IST Report Abuse
Rajendra Bupathi இந்தியாவின் எதிர் காலமெலாம் குப்பையை பொறுக்கிகிட்டும் குழந்தை தொழிலாளியுமா இருந்தா அது எதிர் வினை இயக்கத்துக்குதான் ஆதரவா மாறும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை