வரி வசூலில் கெடுபிடி வேண்டாம் : அதிகாரிகளுக்கு பாடம் எடுக்கிறார் மோடி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

வரி வசூலில் கெடுபிடி வேண்டாம் : அதிகாரிகளுக்கு பாடம் எடுக்கிறார் மோடி

Added : ஜூன் 13, 2016 | கருத்துகள் (31)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
வரி வசூலில் கெடுபிடி வேண்டாம் : அதிகாரிகளுக்கு பாடம் எடுக்கிறார் மோடி

புதுடில்லி : வாடிக்கையாளர்களிடம் அன்பான முறையில் வரிகளை வசூல் செய்ய வேண்டும் என பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக வரித்துறை முக்கிய அதிகாரிகளுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.மோடியின் திட்டம் குறித்து நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், வரிகளை முறையாக வசூலிப்பதன் மூலம் நாட்டின் வருவாயை பெருக்க பிரதமர் திட்டமிட்டுள்ளார். நேரடி மற்றும் மறைமுக வரி செலுத்துபவர்களிடம் கனிவான போக்கை கையாண்டு அதன் மூலம் வேமாக வருவாயை உயர்த்தி உலக பொருளாதார சவால்களை இந்தியா எதிர்க்க வேண்டும் என அவர் நினைக்கிறார். இதற்காக அதிகாரிகளை அழைத்து அவர் பேச உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வரி பாக்கியை வசூலிக்க அரசு கடுமையான முறைகளை கையாள்வதாக வரி செலுத்தும் தனிநபர்களும், நிறுவனங்களும் புகார் கூறி வருகின்றன. இதனால் வாடிக்கையாளர்களிடம் நட்புறவுடன் நடந்து கொள்ள மத்திய நேரடி வரி கழகம் மற்றும் மத்திய கலால் மற்றும் சுரங்க வரித்துறை விதிமுறைகளை மாற்றி அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இது தொடர்பாக வரித்துறையைச் சேர்ந்த 421 அதிகாரிகளை அழைத்து பிரதமர் பேச உள்ளார். கனிவாக வரியை வசூலிப்பது தொடர்பாக அதிகாரிகளுக்கு தானே பாடமும் நடத்த உள்ளார். வரி செலுத்தும் முறையை மேம்படுத்துதல், சமூக வலைதளங்கள் மூலம் வாடிக்கையாளர்களை கையாளும் முறை உள்ளிட்டவைகள் குறித்தும் பிரதமர் பேச உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murali - Mayuram,இந்தியா
14-ஜூன்-201606:41:44 IST Report Abuse
Murali என் கருப்பு பணத்தை திரும்ப கொண்டு வர நடவடிக்கை இல்லை மாறாக ஏழை , நடுத்தர வர்கதினர்டம் வரி கட்ட சொல் கிறது அரசு?.
Rate this:
Share this comment
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
13-ஜூன்-201620:38:05 IST Report Abuse
Visu Iyer நடித்து எப்படியாவது மக்கள் பணத்தை வாங்க சொல்கிறார்... இந்தியாவிற்கு தேவை திறமையான பிரதமர்.. பேஸ் புக்கில் லைக் வாங்கி கொண்டு நடிப்பவர் இல்லை...
Rate this:
Share this comment
raja a - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
14-ஜூன்-201609:19:55 IST Report Abuse
raja aஅப்டி போடுங்க...
Rate this:
Share this comment
Cancel
Bharathiarun - Bangalore  ( Posted via: Dinamalar Android App )
13-ஜூன்-201618:38:13 IST Report Abuse
Bharathiarun கிசான் வரி, சுவாச் பாரத் வரி இன்னும் யத்தனயோ வரி. அஞ்சு பைசா திருடுனா அது தப்பு, அஞ்சு பைசாவ நுறு கோடி பேர் வரி போட்டா அது கொள்ளை. அரசியல்வாதிகள் வெளிநாட்டில் பதுக்கி வைத்திருக்கும் பணத்தை முதலில் கொண்டு வாருங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X