சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி ; கருணாநிதி எச்சரிக்கை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி ; கருணாநிதி எச்சரிக்கை

Updated : ஜூன் 13, 2016 | Added : ஜூன் 13, 2016 | கருத்துகள் (218)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
சமஸ்கிருதம் திணிக்க முயற்சி ; கருணாநிதி எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி நடக்கிறது. இந்த முயற்சிகள் முறியடிக்கப்படும் என சென்னையில் நடந்த திருமண விழாவில் கருணாநிதி பேசுகையில் குறிப்பிட்டார்.

திமுக மருத்துவ அணி செயலாளர் பூங்கோதை இல்ல திருமண விழாவில் பங்கேற்று திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்தி பேசியதாவது : தமிழகத்தில் சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி நடக்கிறது. இந்த முயற்சிகள் முறியடிக்கப்படும்

தமிழ் சிறந்த மொழியாக இருக்கும் போது பிற மொழிகளை திணிப்போர் இருக்கத்தான் செய்கின்றனர். தமிழகத்தில் வட மொழியை திணிக்க நினைத்தால் தமிழர்கள் ஒவ்வொருவரும் சவுக்கை எடுத்து கிளர்ந்து எழ வேண்டும். கட்டாய இந்தி திணிப்புக்கு எதிராக கிளர்ச்சி எழுந்ததோ அது போல் எழ சமஸ்கிருதம் இருந்த விட கூடாது. கிளர்ச்சி உருவாக யாரும் காரணமாக இருந்து விடக்கூடாது.

ஆளும் கட்சியின் ஆசியோடு சமஸ்கிருதம் பரப்ப முயற்சி நடக்கிறது. இழித்துரைக்கப்பட்ட இந்த மொழிக்கு தமிழகத்தில் ஆதிக்கமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தங்கள் மொழியை காப்பாற்ற, இந்த முயற்சியை நிறுத்த வேண்டும். வட மொழி ஆதிக்கம் இருந்தால் சவுக்கடி கொடுத்து விரட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (218)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
16-ஜூன்-201605:01:23 IST Report Abuse
meenakshisundaram காளிதாசன் போற ஒப்பற்ற கவிஞன் சமஸ்க்ரிதத்திலே அளித்த படைப்புகளையே ரசிக்கத்தெரியாத கலைஞன் எப்படி டாக்டர் கலைஞன் ஆக முடியும்?
Rate this:
Share this comment
Cancel
Neelaa - Atlanta,யூ.எஸ்.ஏ
14-ஜூன்-201620:11:33 IST Report Abuse
Neelaa இடையனூரில் வாழும் இரக்கச் செல்வம் அவர்களின் உறவினர்கள் சிலர் பெயர்களை உங்கள் முன் வைக்கிறேன்.... , ஆறுமுக அழகம்மையார், தாமரைச்செல்வி, அறத்தாய், வள்ளல் அன்னை, எழுச்சிச்செல்வம், கலைச்செல்வம், கொற்கை, ஆதவன் ... அது வேறு யாருமில்ல சார் கோபாலபுரத்தில் வாழும் கருணாநிதி யின் உறவினர்களான ஷண்முக சுந்தராம்பாள், பத்மாவதி, தர்மாம்பாள், தயாளு, உதய நிதி, கலாநிதி, துர்கா, ஆதித்யா.. போன்ற சம்ஸ்கிருத பெயர்களின் தமிழாக்கம்... உலகிலேயே, மண் பாரத நாட்டில் மட்டுமே, இப்படி ஒரு புராதன மொழிக்கு அரசியல்(வியா)திகளின் வெறுப்பு, வெறி..
Rate this:
Share this comment
Cancel
கேண்மைக்கோ சேகர் - Dharmapuri/Bangalore,இந்தியா
14-ஜூன்-201614:11:11 IST Report Abuse
கேண்மைக்கோ சேகர் இங்கு பலர் எப்படி சமஸ்கிருதத்திற்கு வக்காலத்து .. வாங்குவது தமிழை இழிப்பது,குறை கூறுவது போன்றல்லவா .
Rate this:
Share this comment
parthiban - coimbatore,இந்தியா
15-ஜூன்-201609:36:34 IST Report Abuse
parthibanஇங்கு யாரும் தமிழை படிக்க வேண்டாம் என சொல்லவில்லை , மற்ற மொழியை போல் சமஸ்கிருமமும் இருக்கட்டும் என்கிறார்கள்...
Rate this:
Share this comment
கேண்மைக்கோ சேகர் - Dharmapuri/Bangalore,இந்தியா
15-ஜூன்-201614:28:03 IST Report Abuse
கேண்மைக்கோ சேகர் இதற்கு இது பதில் இல்லையே ?...
Rate this:
Share this comment
Neelaa - Atlanta,யூ.எஸ்.ஏ
16-ஜூன்-201600:12:44 IST Report Abuse
Neelaaஉங்கள் பெயரில் உள்ள "சேகர்" சம்ஸ்கிருத மொழிச்சொல் அல்லவா? அதனால் நீங்கள் தமிழ் மொழியை இழிவு படுத்தினீர்கள், குறை கூறினீர்கள் என்றாகுமா? ஒரு மொழியை உயர்வு செய்ய, மற்றொரு மொழியை இகழ்வது எவ்வளவு தவறு? இதனால் யாருக்கு லாபம்?...
Rate this:
Share this comment
கேண்மைக்கோ சேகர் - Dharmapuri/Bangalore,இந்தியா
16-ஜூன்-201611:29:39 IST Report Abuse
கேண்மைக்கோ சேகர் தெரியாமல் திணிக்கப்பட்டது அதை மாற்றவே முற்படுகின்றோம் .நான் சமஸ்கிருதத்தை குறை கூற வில்லை .இங்குள்ள கருத்து பதிவின் மையம் நம் மொழியை குறை கூறுவது போன்றே நான் கருதுகிறேன் ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X