கரூர் அருகே கரெண்ட் பில் கட்ட தவறியதால் கோயிலில் மின் இணைப்பு துண்டிப்பு; பக்தர்கள் வேதனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கரூர் அருகே கரெண்ட் பில் கட்ட தவறியதால் கோயிலில் மின் இணைப்பு துண்டிப்பு; பக்தர்கள் வேதனை

Added : ஜூன் 13, 2016 | கருத்துகள் (13)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: பழைய ஜெயங்கொண்டான் ஆலவந்தீஸ்வரர் கோயிலில் கரெண்ட் பில் கட்ட தவறியதால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பக்தர்கள் இருளில் நின்று சாமி தரிசனம் செய்யும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பழையஜெயங்கொண்டான் பகுதியில் ஆலவந்தீஸ்வரர் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயில் கடந்த பிப்., மாதம் கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில் இந்த கோயில் தற்போது மின் இணைப்பிற்காக பில் கட்ட தவறியதால் நேற்று திடீர் என மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் இருளில் நின்று சாமி கும்பிடும்அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். இது குறித்து கோயில் நிர்வாகத்தினரிடம் கேட்ட போது இந்த முறை கோயிலுக்கு 4000 ரூபாய் அதிகமாக கரெண்ட் பில் வந்துள்ளது. இதற்காக போதுமான நிதி இல்லாததால் பில் கட்டவில்லை என கோயில் நிர்வாகத்தினர் கூறியதாக தெரிகிறது. கோயிலில் பக்தர்கள் இருளில் நின்று சாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் இதுகுறித்து பொதுமக்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கார்த்திக் சித்தன் - சிவலோகம் ,இந்தியா
14-ஜூன்-201610:52:51 IST Report Abuse
கார்த்திக் சித்தன் எந்த ஒரு முக்கியமான விழாவிற்கும், வைபோகத்திற்கும், இந்து சமுதாய தலைவர்களை, சான்றோர்களை அரசு கலந்தாலோசிப்பதேயில்லை. அறநிலையத்துறையில் வேலை செய்யும் நிறைய பேருக்கு பக்தி என்பதோ, நமது பண்பாட்டினை மதிக்கவோ தெரியவில்லை. கோவில்கள் அனைத்தையும் இந்துக்கள் வசம் ஒப்படையுங்கள். சிறப்பு தரிசன கட்டணம் என்ற கேவலமான கொள்ளையை தடுத்து நிறுத்துங்கள். சர்வதேச அளவில் சிலை கடத்தும் மாபியாக்களுக்கு, அறநிலையத்துறையினர் ஆதரவு இருக்கிறது. மிக மிக கேவலமான விஷயம். கோவில் சொத்துக்களை அபகரிப்பவர்களுக்கு சரியான தண்டனை அளிக்க எல்லாம் வல்ல சிவபெருமானை வேண்டுகிறேன்.
Rate this:
Share this comment
Cancel
கார்த்திக் சித்தன் - சிவலோகம் ,இந்தியா
14-ஜூன்-201610:52:30 IST Report Abuse
கார்த்திக் சித்தன் அறநிலையத்துறை வருமான்கள் மூலமாக கோவில்களுக்கு எந்த நன்மையும் அரசு செய்வதில்லை. இந்து நெறிகளை மேம்படுத்தவும் எந்த முயற்சியும் எடுப்பதில்லை. ஹஜ் பயணத்திற்கு மானியம் வழங்குகிறது. உலகத்திலேயே எந்த அரசும் செய்யாத வகையில், ஜெருசேலம் யாத்திரைக்கும் வழங்குகிறது. அறநிலையத்துறையின் மூலமாக நிறைய வருமானம் வந்தாலும் கூட, இந்துக்களின் புனித பயணங்களுக்கு வழங்குவதில்லை. ஒரு சராசரி இந்துவிற்கு, அரசு எந்த அளவிற்கு இந்து விரோத செயல்களை செய்கிறது என்பது புரிவதேயில்லை.
Rate this:
Share this comment
Cancel
கார்த்திக் சித்தன் - சிவலோகம் ,இந்தியா
14-ஜூன்-201610:52:23 IST Report Abuse
கார்த்திக் சித்தன் அரசு கிறிஸ்தவர்களுடைய, இஸ்லாமியர்களுடைய, வழிபாடுகளிலோ வழிபாட்டுத்தலங்களிலோ தலையிடுவதில்லை. இந்துக்கள் கோவில் மற்றும் உரிமைகளை அவர்களிடமே அரசு விட்டு விட வேண்டும். இது போன்ற விஷயங்களில் தலையிடக்கூடாது.
Rate this:
Share this comment
Cancel
கார்த்திக் சித்தன் - சிவலோகம் ,இந்தியா
14-ஜூன்-201610:51:52 IST Report Abuse
கார்த்திக் சித்தன் ஜாதிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கூட இந்துக்கள் தங்களது பண்பாட்டிற்கு கொடுப்பது கிடையாது. இந்துக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் யாருக்கும் அக்கறை கிடையாது.
Rate this:
Share this comment
Cancel
gmk1959 - chennai,இந்தியா
14-ஜூன்-201610:03:52 IST Report Abuse
gmk1959 இது ஒரு நடைமுறை தவறு இதற்கான பொறுப்பு அதிகாரியின் பொறுப்பு அற்ற நடவடிக்கையே காரணம் துறை நடவடிக்கை எடுக்கலாம்
Rate this:
Share this comment
Cancel
kundalakesi - VANCOUVER,கனடா
14-ஜூன்-201607:52:18 IST Report Abuse
kundalakesi அமக்களே, நிறைய அளவில் கோவில் செல்லும் பழக்கத்தை கொள்வீர். உமது பழமையான அறிவுமிக்க மதம் காப்பாற்றப் பட நீங்கள் ஒத்துழையுங்கள். ஒன்று கூடுங்கள். ஜாதி மறந்து , இந்து என உணர்ந்து இறைவனிடம் மனம் செலுத்துங்கள். ஒற்றுமையே பலம். பின்னே வந்த மற்ற மதங்கள் அதனாலே வளர்ச்சி. உமது சகோதரர்களை இழக்காதீர். விடாதீர். இறை வழி விலக்காதீர்.
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
14-ஜூன்-201607:27:13 IST Report Abuse
ஆரூர் ரங் வருமானம் குறைந்த கோவில்களுக்கு கூட வணிக வியாபாரக் கடைகளுக்குள்ள Tariffஅளவு மின் கட்டணம் வசூலிப்பது தகாது வீட்டு உபயோக அளவுக்கு மட்டுமே வாங்கவேண்டும்
Rate this:
Share this comment
LAX - Trichy,இந்தியா
15-ஜூன்-201620:46:50 IST Report Abuse
LAXகரெக்ட் ஆரூரங் ஜி.....
Rate this:
Share this comment
Cancel
senthil kumar - kuala lumpur,மலேஷியா
14-ஜூன்-201604:52:01 IST Report Abuse
senthil kumar இந்த மின் கட்டணத்தை சென்னையில் கோயில் கணக்கில் கட்ட முடியுமா
Rate this:
Share this comment
Vimall - Rajapalayam ,இந்தியா
14-ஜூன்-201609:20:40 IST Report Abuse
Vimallதமிழ் நாட்டில் எங்கு வேண்டுமானால் கட்டலாம். ஆனால் கோவிலின் மின் இணைப்பு எண் தேவை....
Rate this:
Share this comment
Cancel
Siva S Krishnan - Chennai,இந்தியா
14-ஜூன்-201600:48:55 IST Report Abuse
Siva S Krishnan LAX அவர்களே.. உண்டியலில் போடும் நிதியை இந்து கோவில்களுக்கு மட்டும் செலவு செய்தால் நிதி பற்றாக்குறை வராது. கோவில்களின் குத்தகை நிலங்களை மீட்டு வாடகை வசூல் செய்து அதையும் இந்து கோவில்களுக்கு மட்டும் செலவு செய்தால் இந்த நிலை வராது.
Rate this:
Share this comment
Cancel
LAX - Trichy,இந்தியா
13-ஜூன்-201622:35:30 IST Report Abuse
LAX தட்டில் போடும் காசை குறைத்து உண்டியலில் போட்டால், நிலைமை சரியாக வாய்ப்பிருக்குமோ..?
Rate this:
Share this comment
K.Sugavanam - Salem,இந்தியா
14-ஜூன்-201607:54:39 IST Report Abuse
K.Sugavanamகும்பாபிஷேகம் செய்து உண்டியலை காலியாக்கி விட்டனர் போல..தட்டில் என்ன பெரிய அமவுண்ட் வந்துடப் போறது ஜி..ஹிந்து அரநிலயதுறையில் அந்த கோயில் EO உக்கு ஒரு மாத சம்பளம் கட் பண்ணினால் தெரியும்.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை