கட்சியில் எத்தனை பதவிகள் காலி?: விஜயகாந்த் திடீர் கணக்கெடுப்பு Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கட்சியில் எத்தனை பதவிகள் காலி?:
விஜயகாந்த் திடீர் கணக்கெடுப்பு

தே.மு.தி.க.,வில் காலியாக இருக்கும் பதவிகள் குறித்த கணக்கெடுப்பை, மாவட்ட வாரியாக விஜயகாந்த் துவங்கியுள்ளார்.

 கட்சியில் எத்தனை பதவிகள் காலி?:  விஜயகாந்த் திடீர் கணக்கெடுப்பு

சட்டசபை தேர்தலில், ம.ந.கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட தே.மு.தி.க., அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவியது. இதைத் தொடர்ந்து, கட்சியின், 70 சதவீத நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பல்வேறு கட்சிகளுக்கு தாவி விட்டனர். 30 சதவீத நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மட்டுமே, எஞ்சியுள்ளனர்.


இவர்களை, கட்சியில் தக்க வைப்பதற்கான தீவிர முயற்சியில், விஜயகாந்த் இறங்கியுள்ளார். இதற்காக, இரண்டு கட்டமாக மாவட்ட செயலர்கள் கூட்டத்தை, விஜயகாந்த் கூட்டினார்.தொடர்ந்து,வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டமும் நடத்தப்பட்டது. தற்போது, மாவட்ட வாரியாக, கட்சியின் அடிமட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தையும் கூட்டியுள்ளார்.இந்த கூட்டத்திற்காக, மாவட்ட வாரியாக விஜயகாந்த் சுற்றுப்பயணம் செய்ய இருந்தார். ஆனால், திடீரென சுற்றுப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.அதற்கு பதிலாக, அடிமட்ட நிர்வாகிகளை, சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு அழைத்து,விஜயகாந்த் ஆலோசனை நடத்த துவங்கி உள்ளார்.அதன்படி நேற்று, திருவள்ளூர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த, ஒன்றியம், பேரூர், நகர செயலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளை விஜயகாந்த் சந்தித்து பேசினார்.சென்னை மாவட்டத்தை சேர்ந்த வட்டம், பகுதி

Advertisement

, வார்டு நிர்வாகிகளையும் அழைத்து பேசினார். ஆனால், பெரும்பாலான நிர்வாகிகள், இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதையடுத்து, காலியாக உள்ள பதவிகள் விவரங்களை, விஜயகாந்த் கணக்கெடுத்தார்.
உள்ளாட்சி தேர்தலுக்குள், இந்த பதவிகளை நிரப்புவதற்கு, அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. --நமது நிருபர்--


Advertisement

வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
14-ஜூன்-201619:23:48 IST Report Abuse

meenakshisundaramபேசாம வைகோ ஒரு கை, திருமா ஒரு கை. காந்த் ஒரு கை என்று 3 சீட்டு ஆடுங்க .நேரம் போகும் .

Rate this:
Vaal Payyan - Chennai,இந்தியா
14-ஜூன்-201619:22:41 IST Report Abuse

Vaal Payyanஇவர் கட்சியை வருத்தபடாத வாலிபர்கள் சங்கம் போல நடத்தினார் ... போற இடத்தில எல்லாம் கைப்புள்ள மாதிரி அடி வாங்கினார் ... முதல்ல இவருக்கு தொண்டனா இருக்குற தகுதி கூட இல்ல ... ஆனா தலைவன் முதல்வன் ஆகணும் நு ஆசை பட்டார் முரசுக்கு சங்கு ஊதும் நேரம் வந்து விட்டது ....

Rate this:
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
14-ஜூன்-201623:51:47 IST Report Abuse

Panneerselvam Chinnasamyமொதோ, கொடியில இருக்கிற தீ பந்தத்தை அணைங்கப்பா...

Rate this:
venkatesh - coimbatore,இந்தியா
14-ஜூன்-201614:10:01 IST Report Abuse

venkateshகேப்டன் அவர்கள் காலியாக உள்ள பதவிகளை ஏலத்தில் விட்டு கொஞ்சம் துட்டு வருதான்னு பாருங்க. இனி எப்படி கட்சியை வளர்ப்பாரோ பாவம். இல்லே பேசாம வைகோ மாதிரி புரோக்கர் வேலை செய்ய கத்துகோங்க. அரசியல்ல இதெல்லாம் சகஜம்.

Rate this:
pandian.J - Tirunelveli,இந்தியா
14-ஜூன்-201619:28:23 IST Report Abuse

pandian.Jவைகோ என்ன புரோக்கர் வேலை பார்த்தார் என்று நண்பர் வெங்கடேஷ் சொல்லுங்க. அப்புறம் நீங்க இப்போ யாருக்கு புரோக்கர் வேலை பாக்குரிங்க அப்பிடின்னு சொல்லிருங்க...

Rate this:
Guruji Saran - Chennai,இந்தியா
15-ஜூன்-201615:57:41 IST Report Abuse

Guruji Saranபாண்டியன் ... நீங்கள் வைகோ மகன் கிட்ட தான் சிகரெட் வாங்கி குடிப்பீர்களோ ??? நன்றிய இப்படி காட்றீங்க... :)...

Rate this:
மேலும் 41 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X