இந்திய அரசாங்கமும் சட்டங்களும்: 2; அரசு ஒப்பந்தங்கள்:| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சட்டமும் சந்தேகங்களும்

இந்திய அரசாங்கமும் சட்டங்களும்: 2; அரசு ஒப்பந்தங்கள்:

Added : ஜூன் 14, 2016
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement


ஒரு அரசாங்கத்தின் அனைத்து சட்டங்களும் அதன் அரசியலமைப்புச் சட்டத்தையே அடிப்படையாக கொண்டிருக்கிறது.
சரி. எனக்கும் உங்களூக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானால், அதில் நம்மில் ஒருவர் அந்த ஒப்பந்தத்தை மீறினால் என்ன நிகழும் என்பது நமக்குத் தெரியும்.
இப்போது ஒரு மாநில அரசும், மத்திய அரசும் ஒரு ஒப்பந்தம் கையெழுத்திட்டாலோ, அல்லது இரு மாநில அரசுகள் ஒப்பந்தம் செய்து கொண்டாலோ, ஒரு தனி நபரும், ஒரு மாநில அல்லது மத்திய அரசும் ஒப்பந்தம் செய்து கொண்டாலோ, அதில் ஒருவர் ஒப்பந்தத்தை மீறி நடந்தால், பாதிக்கப்பட்ட மற்றவருக்கு உள்ள தீர்வழிதான் என்ன?
அதற்கு அரசாங்கத்துடனான ஒப்பந்தத்தின் கூறுகள் என்ன என்பதை நாம் அறிய வேண்டி இருக்கிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஆர்டிகில் 299 அது பற்றி சில விதிகளைச் சொல்கிறது. இந்த ஆர்டிகிலில் குறிப்பிடப்பட்ட விதிகளைப் பின்பற்றியே அரசாங்கத்துடனான ஒவ்வொரு ஒப்பந்தமும் இருக்க வேண்டும் எனினும், அந்த விதியைப் பின்பற்றுவதிலும் சில முன்னேற்ற மாற்றங்கள் பிற்பாடு வந்தது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஆர்டிகில் 298 இந்திய அரசாங்கம் ஒரு ஒப்பந்தத்தில் ஈடுபட அதிகாரம் அளிக்கிறது.ஆர்டிகில் 299 அதற்கான விதிகளைச் சொல்கிறது.சரி அந்த ஆர்டிகில் 299 என்ன சொல்கிறது?ஒப்பந்தமானது குடியரசுத் தலைவர் அல்லது ஆளுனரால் செய்யப்படுகிறது என்பது வெளிப்படுத்தப்பட வேண்டும்.ஒப்பந்தமானது குடியரசுத் தலைவர் அல்ல்லது ஆளுனரின் சார்பாக கையொப்பமிடப்பட்டு முத்திரை வைக்கப்பட்டு எழுதிக் கொடுக்கப்பட வேண்டும்.குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநர், அந்த ஒப்பந்த செயல்பாடுகளை யாரால் எவ்விதமாகச் செய்ய வேண்டுமென்று கட்டளை இடுகிறாரோ அல்லது இசைவாணை அளிக்கிறாரோ அவ்வாறே அதே நபர்களால் அவ்விதமாகக் கையொப்பமிடப்பட்டு முத்திரை வைக்கப்பட்டு முற்றுப் பெற்றிருக்க வேண்டும்.மேற்கண்ட இந்த விதிகளை அரசாங்கத்துடனான ஒரு ஒப்பந்தம் பூர்த்தி செய்திருந்தால், மட்டுமே அது அரசாங்கத்துடனான ஒரு முழு ஒப்பந்தமாகக் கருதப்பட்டு, அரசாங்கமும் அதில் கடப்பாடுகளுக்குள்ளாகும்.
அரசியலமைப்புச் சட்டத்தின் ஆர்டிகில் 298 இந்திய அரசாங்கத்திற்கு ஒப்பந்தம் அளிக்கும் அதிகாரத்தை அளிப்பதன் மூலம், இந்திய அரசாங்கம் என்பது ஒப்பந்தத்தின் ஒரு தரப்பினராக இருக்க அதிகாரம் உள்ள ஒரு சட்டபொறுப்பு நிலையை (Legal personality) ஐத் தருகிறது.
எனவே அந்த பொறுப்பினை இந்திய அரசாங்கம் ஏற்கிறது. ஆனால், இந்திய அரசாங்கத்தின் சார்பாக குடியரசுத் தலைவர் இரும் கையோப்பமோ, அல்லது மாநில அரசாங்கத்தின் சார்பாக அந்தந்த மாநில ஆளுநர் இடும் கையொப்பமோ, தனிப்பட்ட முறையில் அந்தந்த குடியரசுத் தலைவராக இருக்கும் தனி நபர் அல்லது ஆளுனராக இருக்கும் தனி நபரை கட்டுப் படுத்தாது. ஆனால், அந்தந்த அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தும்.ஆர்டிகில் 299ல் கூறப்பட்டுள்ள விதிகளில் சிலவற்றைப் பின்பற்றாமல் ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டது என்பதாலேயே அந்த ஒப்பந்தமே செல்லாது(nullified), இல்லா நிலையது(void), என தீர்ப்பான வழக்குகளும் உண்டு. (Bihar ECF Co-oprative Society Vs Sipahi Singh)ஆனால், இது போன்ற தீர்ப்புகளில், பாதிக்கப்பட்டவருக்கு, தகைமை நெறி(equity) ன் படி தீர்வழி பெற வாய்ப்பு இருப்பின் அதுவும் கவனத்தில் கொள்ளப்பட்ட தீர்ப்புகளும் உண்டு. இதற்கு உதாரணமாக, Union of India Vs Anglo (Indian) Afghan Agencies, ( https://indiankanoon.org/doc/1882267/ )எனும் வழக்கில், பொருட்களை இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய லைசன்ஸ் அளித்து ஒப்பந்தமிடப்பட்டிருந்தது. அதில், பொருள் போக்குவரத்திற்கான தொகை 100% வாங்குபவர் தர வேண்டும் எனும் ஒப்பந்தம் இருந்தது. ஆனால், அதற்கு குறைவான தொகையே தரப்பட்டது. இந்தத் தொகை வழக்கிற்குள்ளானது. இந்த வழக்கில், ஏற்படுத்தப்பட்டிருந்த அந்த ஒப்பந்தமானது இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஆர்டிகில் 299ல் கூறப்பட்டிருந்த விதிகளைப் பின்பற்றி ஏற்படுத்தப்படவில்லை என்றும், அதாவது குடியரசுத் தலைவரால் இந்த ஒப்பந்தம் செய்யப்படுகிறது என்பது தெளிவுபடுத்தப்படவில்லை என்றும், இந்தக் காரணத்தினால் இந்திய அரசுக்கு இதில் பொறுப்பில்லை என்றும் தீர்ப்பானது. ஆனால், இத்தோடு நிறுத்திக் கொள்ளாமல், இந்திய அரசியலமைப்புச் சட்டம் கூறும் விதிகளின் ஒன்றைப் பின்பற்றாவிட்டாலும், தகைமை நெறியின்படி, இந்திய அரசாங்கத்திற்கு பொறுப்பு உண்டு என்றும், பாதிக்கப்பட்டவர் தகைமை நெறியின்படி தீர்வழி பெறலாம் எனவும் தீர்ப்பானது.மற்றொரு வழக்கில் (Union of India Vs Rallia Ram, 1963 (, இந்திய அரசாங்கத்தின் கொள்முதல் துறையின் தலைமை இயக்குநர் சிகரெட் வாங்குவதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை வரவேற்றிருந்தார். எதிர் மனுதாரரின் ஒப்பந்தப் புள்ளி ஏற்கப்பட்டு இயக்குனரால் கையொப்பமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஆர்டிகில் 299ன் கீழான விதிகள் சிலவற்றை அந்த ஒப்பந்த ஷரத்துக்கள் பின்பற்றவில்லை என்றாலும், இந்த வழக்கில் தரப்பினருக்கிடையே நிகழ்ந்த தகவல் தொடர்புகளே ஒப்பந்தம் ஏற்படுவதற்குப் போதுமானது என உச்ச நீதிமன்றம் கூறியது.
அதாவது ஆர்டிகில் 299ன் விதிகளைப் பின்பற்றாவிட்டாலும், தகைமை நெறி, மற்றும், ஒப்பந்தம் ஏற்பட்டதை உறுதிப்படுத்தும் தகவல் தொடர்புகளே அந்த ஒப்பந்தத்தை செயலுக்குக் கொண்டு வரும் ஒரு காரணியாகிறது.
மேற்கூறியவை எல்லாமே சிவில் வழக்குகள். இதே போல தீங்குரிமை வழக்குகளில் இந்திய அரசாங்கத்தின் பொறுப்பு என்ன என அறிய கொஞ்சம் வரலாற்றையும் திருப்பிப் பார்க்க வேண்டி உள்ளது.
ஆங்கில அரசு சமயத்தில் 'அரசர் தவறு செய்ய மாட்டார்' எனும் முது மொழி ஆங்கில சட்டத்திலும் இருந்தது. எனவே அரசு ஊழியர் செய்த தவறுக்கு அரசரைப் பொறுப்பாக்க இயலாது எனும் நிலையே நீடித்திருந்தது. ஆனால், அதன் பின்னிட்டு பிரிட்டனின் புது சட்டம் (1947), அரசு நடவடிக்கைகள் சட்டம், இந்நிலையினை நீக்கி, அரசுக்கும் தீங்குரிமை பொறுப்பு உண்டு என ஆக்கியது.
இதனை ஒட்டி, ஆனால் இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வரும் முன், அரசு ஊழியர்களின் தீங்குச் செய்கைகளுக்காக, இங்கிலாந்தைன் கிழக்கிந்திய கம்பெனியும்,
இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த பின்,1958ம் ஆண்டு இந்திய அரசின் செலலாளரும் பகரப் பொறுப்பு வகித்தனர்.
ஆனால், இந்திய அரசியலமைப்புச் சட்டம், அரசுக்கு பகரப்பொறுப்புரிமை (vicarious liability) உண்டு என்பதை நேரடியாகச் சொல்லாமல், இதற்கு முன்பிருந்த ஆட்சி காலத்தில் இந்திய அரசாங்கங்கள் மீது (மத்திய/மாநில), இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பாக எப்படி தீங்குரிமை வழக்குகள் தொடுக்கப்பட்டனவோ அதே போல இப்போதும் அதே போன்ற காரணங்களுக்காக வழக்குத் தொடுக்கலாம் என்று கூறுகின்றது.
இதிலும் ஒரு சிக்கல் இன்றளவும் நிலவுகிறது.
இந்திய மத்திய/மாநில அரசாங்கத்தின் கீழ் செய்யப்படும் செயலானது ஒரு அரசு ஊழியரால் செய்யப்பட்டு, அந்த செயலும் அரசாங்கத்தின் செயல்திட்டத்தை ஒட்டி, அரசாங்கத்தின் டைரக்ஷன்களைப் பின்பற்றி, அந்த ஊழியரின் செயல்பாட்டுத் தகுதிக்குள்ளாக செய்யப்பட்டிருந்தால்… அந்தச் செயலின் காரணமாக ஒரு குடிமகன்/ஒரு நிறுவனம்/ஒரு சட்டபூர்வ நபர்(Legal personality) பாதிக்கப்பட்டிருந்தால், அதற்கு அரசாங்கம் பொறுப்பேற்கும். ஆனால், அப்படி இல்லாமல், அந்த அரசாங்க ஊழியர், தனது தகுதிக்கு மீறி, சுயமாக தனது கட்டுக்குள் இல்லாமல் இருந்தௌ ஒரு வேலையைச் செய்திருந்தால், அதற்கு அரசாங்கம் பொறுப்பாகாது.
உதாரணமாக, சட்டப் புறம்பான கூட்டம் ஒன்றைக் கலைக்கும் பொறுப்பு காவலர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்து, அந்த வேலையினை நியாயப்படி அதாவது சட்ட அனுமதிக்குட்பட்டு காவலர் அந்த வேலையைச் செய்கையில் ஒரு நபருக்குக் காயம் ஏற்பட்டால் அதற்குக் அந்த காவலரை வேலைக்கு அமர்த்திய வகையில் இந்திய மத்திய/மாநில அரசாங்கம் (நேர்விற்கேற்ப) பொறுப்பேற்கும்.
அதே சமயம், அதே காவலர், சட்டப் புறம்பான வகையில், பொது சனத்தை நோக்கி, தம் கைத்துப்பாக்கியால் சுட்டுவிட்டால், ஒரு நபருக்குக் காயம் ஏற்பட்டால் அதற்கு அரசாங்கம் பொறுப்பேற்காது.
P & O Steam Navigation Company Vs Secretary of State (http://lawmanblog.blogspot.in/2014/02/p-o-steam-navigation-co-vs-secretary-of.html) எனும் வழக்கில், அரசாங்க ஊழியர்கள் பொதுச் சாலை வழியாக இரும்புத் துண்டுகளைக் கொண்டு செல்கையில், வாதியின் குதிரைகள் மீது மோதி குதிரைக்கு காயம் ஏற்படுத்திவிட்டனர். இதனால் அரசு ஊழியர்களின் கவனக் குறைவிற்கு இந்திய அரசுச் செயலாளர் வாதிக்கு தீங்கீடு கொடுக்க பொறுப்புடையவர் ஆவார் என்று கல்த்தா உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆனால், ஏறத்தாழ இதே போன்ற ஆனால், அரசு ஊழியர் செய்த இறைமையற்ற செயலுக்கு அரசாங்கம் பொறுப்பேற்காது என தீர்ப்பானது.
Kasturi Lal Ralia Ram Jain Vs State of U.P (https HYPERLINK "https://indiankanoon.org/doc/1199558/"ற HYPERLINK "https://indiankanoon.org/doc/1199558/"://indiankanoon.org/doc/1199558/)எனும் வழக்கில் வியாபாரி ஒருவரை சந்தேகப்பட்டு அவரிடமிருந்து தங்கம் வெள்ளி அணிகலன்களை, தலைமைக் காவலர் கைப்பற்றுகிறார். பிறகு அந்த வியாபாரி குற்றமற்றவர் என நிருபிக்கப்படுகிறது. இந்நிலையில் தலைமைக் காவலர் கைப்பற்றப்பட்ட அந்த பொருட்களை எடுத்துக் கொண்டு பாகிஸ்தானுக்கு ஓடிவிட்டார். இந்நிலையில் பொருட்களும் காவல் நிலையத்தின் பாதுகாப்பில் இல்லை. தலைமைக் காவலரின் செயலானது அரசாங்கம் அவருக்குக் கொடுத்த விதிகளின் படி அல்லாமல், தன்னிச்சையாக செய்யப்பட்ட இறைமைப் பணி அல்லாத செயல் என்றும் அவரது அந்த தவறான நடத்தைக்கு இந்திய அரசாங்கம் பொறுப்பேற்க இயலாது என்றும், அந்த வியாபாரி குற்றமற்றவர் என நிருபிக்கப்பட்ட பின்பும் கூட, அரசாங்கம் அவருக்கு அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களைத் தரத் தேவை இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இங்கேதான் பிரச்சனை ஆரம்பம். ஏனெனில் ஒரு அரசு ஊழியர் செய்யும் செயலானது இறைமைச் செயலா? அல்லது இறைமைத் தன்மையற்ற செயலா என்பதை நிருபித்தல் கடினம்/இயலாது எனும் நிலையே அதிகம். மேலும், அரசாங்கமே அதன் ஊழியர் தவறு செய்யும் நிலையில் வைத்திருந்தது என்றும் சொல்லலாம். ஒரு பிழை அல்லது குற்றம் செய்தவர் அரசு ஊழியர் எனில் அரசாங்கம் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் எனும் நிலை இல்லாததற்குக் காரணம், மற்ற நாடுகளில் இருப்பது போன்ற நிர்வாகச் சட்டங்கள் இங்கு தெளிவாக தனியாக இல்லாததே ஆகும்.மற்ற நாடுகளில் இருக்கும் நிர்வாகச் சட்ட அமைப்பு முறைகள் பற்றி பின்னர் விரிவாகப் பார்ப்போம்.நமது அரசின் செயல்பாடுகளை, அவை எந்த அளவுக்கு சட்டத்தோடு இணைது செயல்பட்டாக வேண்டி இருக்கிறது என்பதையும், அப்படிச் செயல்பட இயலாமல் எந்த இடங்களில் எல்லாம் வழுக்கிக்கொண்டு ஓடுகிறது என்பதையும் சேர்ந்தே அலசுவோம்.(மேலே குறிப்பிட்டிருக்கும் ஹைபர் லின்குகள் எல்லாம் அந்தந்த வழக்குகளைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள உதவ அளிக்கப்பட்ட தனியார் வெப் பக்கங்களின் லின்குகளே. அவற்றின் நம்பகத் தன்மையை விசாரித்துக் கொள்ளவும்)
-ஹன்ஸா (வழக்கறிஞர்)legally.hansa68@gmail.com

Advertisement
வாசகர் கருத்து

S ANBUSELVAN - AL JUBAIL,சவுதி அரேபியா
12-அக்-201615:06:21 IST Report Abuse
S ANBUSELVAN இது போல் குற்றவியல் தொடர்பான, பொது சட்டம் தொடர்பான கட்டுரைகளை எழுதி வந்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
S ANBUSELVAN - AL JUBAIL,சவுதி அரேபியா
12-அக்-201615:05:21 IST Report Abuse
S ANBUSELVAN தங்களின் கட்டுரைக்கு நன்றி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X