உலகம் முழுவதும் இந்தியா மதிப்பு உயர்ந்துள்ளது: சுஷ்மா| Dinamalar

பொது செய்தி

இந்தியா

உலகம் முழுவதும் இந்தியா மதிப்பு உயர்ந்துள்ளது: சுஷ்மா

Added : ஜூன் 19, 2016 | கருத்துகள் (12)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
உலகம் முழுவதும் இந்தியா மதிப்பு உயர்ந்துள்ளது:  சுஷ்மா

புதுடில்லி: மோடி தலமையிலான ஆட்சியின் 2 ஆண்டுகளில் உலகம் முழுவதும் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறினார்.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதவியேற்று இரண்டாண்டு நிறைவு பெற்றதை தொடர்ந்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: தே.ஜ., ஆட்சியில் சார்க் நாடுகளுடனான உறவு வலுப்பெற்றுள்ளது. பிரதமரும் நானும் சார்க் நாடுகளுக்கு பயணம் செய்துள்ளோம். பிரதமர் மோடி கடந்த 10 மாதத்தில் ஐக்கிய அரசு எமிரேட்ஸ், சவுதி, ஈரான் மற்றும் கத்தார் நாடுகளுக்கு சென்றுள்ளார். இதனால், அந்நாடுகளுடனான பொருளாதார வலுப்பெற்றுள்ளது. சர்வதேச அளவிலும் இந்தியா பலப்பட்டுள்ளது. கடந்த வருடம் ரூ.3,69,000 கோடி அளவுக்கு அந்நிய முதலீடு கிடைத்தது. கடந்த 15-16ம் நிதியாண்டில், 55 பில்லியன் அமெரிக்க டாலர் அந்நிய முதலீடாக கிடைத்துள்ளது. இந்த வருடம் இந்தியா 140 நாடுகளுடன் தொடர்பு கொண்டுள்ளது. 65 நாடுகள் எந்த அமைச்சர்களும் தொடர்பு கொள்ளவில்லை. இந்த வருட இறுதிக்குள் அனைத்து நாடுகளும் தொடர்பு கொள்ளப்படும். எந்த நாடும் பயணம் செய்யாத நாடு என இருக்காது.

இந்தியாவை உலக நாடுகள் கவனிக்கின்றன. சர்வதேச அரங்கில், நாங்கள் அமைதியாக பார்வையாளராக அமர்ந்திருக்கவில்லை. இந்தியர்கள் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது. இந்தியாவில் ஸ்மார்ட் சிட்டி அமைக்க இங்கிலாந்தும், அமெரிக்காவும் முன்வந்துள்ளன. ஸ்கில் இந்தியா திட்டத்திற்கு உதவ ஆஸ்திரேலியா முன் வந்துள்ளது. என்எஸ்ஜி.,யில் இந்தியா உறுப்பினராக சீனா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. முன்னர் காலத்தில், பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை பாகிஸ்தான் மறுத்து வந்தது.இந்தியா- பாகிஸ்தான் உறவு நன்றாக உள்ளது எனக்கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ananda - thirunelveli,இந்தியா
20-ஜூன்-201609:34:42 IST Report Abuse
ananda அன்றைய பிரிந்து இருந்த பாரதத்தை சுரண்டித்தான் பிரிட்டிஷ் இந்திய கம்பனி உலகத்தை ஆளும் அளவிற்கு முன்னேர முடிந்து வரலாறு. அந்த வரலாற்றை மீண்டும் உருவாக்க எல்லாம் நாடுகளும் அற்ப ஆசையில் முனைகின்றன இதை வுணர்வில் கொள்ளாமல் பிற நாடுகளை நம்பி ஏமாந்து போக கூடாது.என்பது என்போன்ற நாட்டு நல விரும்பிகளின் கருத்து. சைனா விற்குள் சுலபமாக நுழைய முடியாது. மிக பெரிய ஜனத்தொகை கொண்ட இந்தியா விரும்பி அழைப்பதினால் அந்த சந்தர்பத்தை ந ழு வ விடக்கூடாது என்பது தான் உலக நாடுகளின் எண்ணம் என்பதை நம் தலைவர்கள் உணர்ந்தது கொள்வார்களா?
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
20-ஜூன்-201608:49:57 IST Report Abuse
balakrishnan இப்போது புதுசாக இப்படி பேச ஒரு கூட்டமே கெளம்பி இருக்கிறது, என்னமோ இத்தனை நாலா இந்தியாவை யாரும் திரும்பியே பார்க்காதது போலவும், இவர்கள் வந்தவுடன் தான் இந்தியாவிற்கே விமோச்சனம் கெடச்சது போலவும் பேசுறாங்க, இவரு ஊரு ஊரா போயி, இவர் மீதுள்ள கெட்ட பெயரை நீக்குவதில் தான் முழு முயற்சியாக இருக்கிறார், குறிப்பிட்டு சொல்லும்படி பெரிய முதலீடுகள்ஒன்னும் வரவில்லை, ஆனால் நித்தம் நித்தம் விளம்ப்ரத்தினாலும் திட்டமிட்ட பிரச்சரங்களினாலும் வேகமாக இதுபோல தகவல்கள் பரப்பப்படுகின்றன, மக்கள் நல திட்டங்கள் மட்டுமே நிலைத்து நிற்கும், பாராட்டுக்களும் வேற்று பேச்சுகளும் எந்த பயனும் கொடுக்காது
Rate this:
Share this comment
Cancel
CJS - cbe,இந்தியா
20-ஜூன்-201608:26:29 IST Report Abuse
CJS வழக்கம் போல விளம்பரம் தான். ஆடியோ மட்டுமே. நோ வீடியோ.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X