ஒரே இரவில் நரகமான கனவு நகரம்!| Dinamalar

ஒரே இரவில் நரகமான கனவு நகரம்!

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
ஒரே இரவில் நரகமான கனவு நகரம்!

'ஊழியின் தினங்கள்' என்ற மனுஷ்ய புத்திரன் எழுதிய கவிதைத் தொகுப்பை சமீபத்தில் படித்தேன். உயிர்மை பதிப்பகம் வெளியிட்டு உள்ளது.
சென்னையில் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு குறித்து, அவர் எழுதிய, 100 கவிதைகளின் தொகுப்பு தான் இந்நூல். ஒரு பேரழிவு சம்பவத்தை மட்டும் மையமாக வைத்து, ஒரு கவிதைத் தொகுப்பு, தமிழில் வந்துள்ளது இதுவே முதல்முறை என, எண்ணுகிறேன்.
கனவு நகரமான சென்னை, ஒரு இரவில் நரகமானது. எங்கு பார்த்தாலும் தண்ணீர், வீடுகளை, உடைமைகளை, உறவுகளை இழந்தவர்கள் ஓலமே எங்கும் கேட்டது. தண்ணீர் சூழ்ந்ததால், சென்னை தீவானது. சென்னையின் ஒவ்வொரு பகுதியும் தீவானது. ஏன் ஒவ்வொரு மனிதனும் தீவானான்.
இரவு வரை வீட்டில் அமர்ந்து உணவு உட்கொண்டவன், காலையில், குடிக்கத் தண்ணீருக்காக நடுத்தெருவில் நின்ற அவலம் நிலவியது. சொந்த வீடு இருந்தும், வீட்டுக்குள் இருக்க முடியாமல், நிவாரண முகாம்களில் மக்கள் தஞ்சம் அடைந்தனர்.
முகாம்களில் இருந்த பெண்கள், உணவு உட்கொள்ளவோ, தண்ணீர் குடிக்கவோ விடாப்பிடியாக மறுத்து வந்தனர். 'உணவு கொடுத்தும் ஏன் சாப்பிடவில்லை' என்ற கேள்விக்கு கிடைத்த பதில் அதிர வைத்தது.
'கொடுக்கும் உணவையும், தண்ணீரையும் குடித்துவிட்டால், ஜீரணமாகி வரும் மலத்தையும், சிறுநீரையும் கழிக்க எங்கு செல்வது. தின்னும் உணவே விஷமாகும் அபாயத்தில் உள்ளோம்' என அவர்கள் சொன்ன பின்பே, இயற்கை உபாதைகளை கழிக்கக் கூட இடமில்லை என்பது உதவ வந்தவர்களுக்கே புரிந்தது.
இப்படி வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் ஒவ்வொன்றையும் ஒரு கவிதையாக எழுதி உள்ளார் நூலாசிரியர். வெள்ளத்தின் பாதிப்புகளை மட்டும் சொல்லாமல், அதற்கு யார் காரணம்; பொறுப்பேற்க வேண்டியவர் யார் என்ற கேள்விகளையும் அவர் எழுப்பி உள்ளார். பாதுகாப்பும், வசதிகளும் மிகுந்த ஒரு நகரமாகப் போற்றப்படும், மாநிலத்தின் தலைநகர் சென்னையில், ஒரு சமூகம் பட்ட துன்பங்கள், ஏற்பட்ட காயங்கள், தொடரும் வலி போன்றவற்றை இந்த கவிதைத் தொகுப்பு யதார்த்தமாக வெளிப்படுத்துகிறது.

இமையம், எழுத்தாளர்
பதிப்பக தொடர்புக்கு: 044 - 2499 3448

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.