யோகா ஒரு மெய்யுணர்வு: இன்று சர்வதேச யோகா தினம்| Dinamalar

யோகா ஒரு மெய்யுணர்வு: இன்று சர்வதேச யோகா தினம்

Updated : ஜூன் 21, 2016 | Added : ஜூன் 20, 2016
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
 யோகா ஒரு மெய்யுணர்வு: இன்று  சர்வதேச யோகா தினம்

லத்தின் உள்ளிருந்து மீண்டும் எழுவதற்கு யோகா ஒரு முழுமையான பயன்பாட்டுக் கருவி. மிகவிரைவான இன்றைய வாழ்வியலில் மிக அதிக அளவு மக்கள் தங்களது ஆழ்ந்த கேள்விகளுக்கு விடைகாண முயல்கின்றனர். வாழ்க்கையில் இதற்கு மேல் ஏதேனும்
இருக்கிறதா? வாழ்க்கையின் நோக்கம் என்ன? உண்மையில் வெற்றி என்பது என்ன?
இவற்றுக்கெல்லாம் விடை காண்பது எளிதல்ல. அவ்வாறு கண்டறிந்தாலும் அவற்றினை திருப்தியுடன் ஒருவர் ஏற்றுக்கொள்ளக் கூடாது. இவற்றுக்கெல்லாம் நிலையான விடை இருந்தால், மொத்த விஷயமுமே இந்நேரம் முடிந்திருக்கும்.
இக்கேள்விகள் அனைத்தும், ஒருவர்மிக கவனமாக மீண்டும் மீண்டும்உள் நோக்கிச் செல்ல வழிவகுக்கும் ஒரு பாதையாகும்.மருத்துவ முறை பல்வேறு தரப்பு மக்களுக்கும் ஆறுதலைத்தரும் யோகா, காலச்சோதனையை வென்ற பழமையான இந்திய மருத்துவ முறையாகும். 35 ஆண்டுகளுக்குமுன்னர் வாழும் கலை துவங்கப்பெற்ற போது, ஹிப்பிகளால் மட்டுமே பின்தொடரப் பட்டயோகா இன்று பெருமளவில் பிரபலமாகியுள்ளது. அனைத்துக் கண்டங்களிலும் கோடிக்கணக்கான மக்களால் இன்று யோகப் பயிற்சி செய்யப் படுகிறது. மாறிக்கொண்டிருக்கும் இன்றைய உலகமக்களின் விருப்பதேர்விற்கு ஏற்றபடி தன்னை பொருத்தியமைத்து கொள்ள துவங்கியது. இது, ஆச்சாரமான நாடுகளில் கூட உலகளாவிய மற்றும் மதச்சார்பற்ற சான்றுகளை நிறுவி, பல்வேறு நம்பிக்கைகள் மற்றும் சடங்குகள் ஆகியவற்றில் ஈடுபாடுள்ள மக்களும் யோகப் பயிற்சிசெய்ய உதவியுள்ளது.
தத்துவம் யோகாவின் ஆரோக்கிய தத்துவம் அதன்எட்டு உறுப்புக்களைச் சுற்றி அமைந்திருக்கின்றது. துரதிருஷ்டவசமாக, மக்கள் அவற்றை எட்டு படிகள், ஒன்றன்பின்
ஒன்றாகத் தான் செய்யவேண்டும் என்று எண்ணுகின்றனர். இந்தஉறுப்புக்கள் வரிசை
முறையில் இல்லை; அவை முழுமையின் பகுதிகள் ஆகும். இந்தஎட்டு உறுப்புக்களும் ஒரு நாற்காலியில் உள்ள நான்கு கால்கள் போன்றவை.
ஒருகாலை இழுத்தால், முழுநாற்காலியும் நகரும். யோகாசனம் முக்கியம் தான் என்றாலும், பிராணயாமம், தியானம் இன்றி யோகா இல்லை. ஒருசிறிய
அளவிலான தியானம் ஒருவரது வாழ்க்கையையே மாற்றப் போதுமானதாகும்.சிறைகளில் நடைபெறும் நமது பயிற்சித்திட்டங்களில் இதைப் பார்த்திருக்கிறேன். தியான அனுபவத்தைப் பெற்ற கைதிகளின் முழு சிந்தனை, செயல்முறை, மற்றும் நடத்தை முறை மாற்றம் அடையும். அவர்கள் பழிவாங்கும் உணர்வு, மற்றும்கோபம் ஆகியவற்றை எளிதாகக் கைவிட்டு, ஆக்கப்பூர்வமாக சமூகத்திற்கு பங்களிக்க விரும்பும் அகிம்சை பாதையில்வரத் துவங்குவர்.
தியானம் (6வதுஉறுப்பு) யாமங்கள் (1வது உறுப்பு )மற்றும் நியமங்கள் (2வதுஉறுப்பு ) இவையிணைந்து ஒருவரது வாழ்க்கையில் வெளிப்படுகிறது. யோகா மூலம், மக்கள் மன அழுத்தம், பதட்டம், பணிக்
களைப்பு, போதைக்கு அடிமையாதல், துாக்கமின்மை போன்ற பல நோய்களிலிருந்து நிவாரணம் அடைந்திருக்கின்றனர்.
சக்தி வாய்ந்த கருவி உலக மக்களுக்கு யோகா ஒரு சக்திவாய்ந்த கருவி. எனவே ஆதாரபூர்வமான அதை முன்வைக்கவும், மற்றும் தவறான கருத்துக்களை அகற்றவும் உதவுவதற்காக நமக்கு தகுந்தஆசிரியர்கள் வேண்டும். முழுமையான அதன் துாய வடிவில் உள்ள யோகா, நவீன வாழ்க்கையின் அனைத்து துன்பங்களுக்கும் மூலகாரணத்தைஆராய்ந்து அகற்ற முடியும் என்னும் ஞானத் திறனைக் கொண்டிருக்கிறது.
இன்று மிகப் பெரிய நோய்களில் ஒன்று மன அழுத்தம். மிககுறைந்த நேரத்தில் அதிகமாக. பணிச்சுமையை ஏற்கும் போது மன அழுத்தம் ஏற்படுகிறது. பணியைக் குறைப்பதும் நேரத்தை அதிகரிப்பதும் சாத்தியமற்றவை. எனவே நமக்கு உள்ள ஆற்றல் நிலையை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. யோகாகுறைந்தபட்ச நேரத்தில் அதிகபட்ச ஆற்றலை உருவாக்குகிறது.
அதிக செயலாற்றல் ஒருசில நிமிடங்கள் செய்யும் தியானம் ஒரு சில மணி நேரம் துாக்கத்திற்கு ஒப்பான ஓய்வை வழங்க முடியும். யோகா வழங்கும் ஆழமான ஓய்வினால் ஒருவர், அதிகசெயலாற்றலுடன் கூர்மையான விழிப்புணர்வுடன் முடிவுகள் எடுப்பதில் உள்ளுணர்வுடன் விளங்க முடியும். அதன்பின்னர் அற்ப விஷயங்களில் சிக்கி அமிழ்ந்து போகாமல் பெரிய பிரச்னைகளை எதிர்கொண்டு, பிறருக்காக அவற்றைத் தீர்க்கும் வலிமை படைத்தவராகிறார்.
யோகா என்பது ஒரு பயிற்சி மட்டுமல்ல, அதுமொத்த வடிவுலகையும் கடக்கும் ஒரு மெய்யுணர்வு நிலையாகும். இன்றைய உலகில் ஒருவரது ஆழமான
ஆற்றல்களை கண்டுணர்ந்து காக்கும் ஒரு வழியாகும்.
-- ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்நிறுவனர்,
வாழும் கலை அமைப்பு
www.artofliving.org

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை