வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கன் ஹிந்து அகதிகளுக்கு மறுவாழ்வு : இந்திய குடியுரிமை அளிக்க மத்திய அரசு திட்டம் Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
மறுவாழ்வு
வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கன் ஹிந்து அகதிகளுக்கு
இந்திய குடியுரிமை அளிக்க மத்திய அரசு திட்டம்

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து, இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ள ஹிந்துக்களுக்கு, இந்தியக் குடியுரிமை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கன் ஹிந்து அகதிகளுக்கு மறுவாழ்வு : இந்திய குடியுரிமை அளிக்க மத்திய அரசு திட்டம்

உலகிலேயே அதிக மக்கள்தொகை உடைய நாடுகளில், இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியா, 1951ல் கொண்டு வரப்பட்ட ஐ.நா., அகதிகள் தீர்மானம் மற்றும் அதைத் தொடர்ந்து, 1967ல் கொண்டு வரப்பட்ட அகதிகள் தொடர்பான நடைமுறை ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.

ஐ.நா.,வில் உள்ள, 190 நாடுகளில், 140 நாடுகள் இதில் கையெழுத்திட்டுள்ளன. 'ஏற்கனவே உள்நாட்டு மக்களுக்கு போதிய கட்டமைப்பு வசதிகள் மற்றும் தேவையான ஆதாரங்கள் கிடைப்பதில்லை. அண்டை நாடுகளில் இருந்து அதிக அளவு மக்கள் அகதிகளாக வந்துவிடுவர்' என்பதாலேயே, இந்த அகதிகள் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை.

தற்போது, நாட்டில் அகதிகளுக்கான எந்த சட்டமும் இல்லை. அதே நேரத்தில், அகதிகளுக் கான நடைமுறை வழிகாட்டுதல்கள் உள்ளன. இருப்பினும், வங்கதேசம்,ஆப்கானிஸ் தான், பாகிஸ் தான் ஆகிய, முஸ்லிம்கள் பெரும் பான்மையினராக உள்ள நாடுகளில் இருந்து, ஹிந்துக்கள் பலர் இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ளனர்.

பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து வந்துள்ள ஹிந்துக்கள், சீக்கியர்கள், ஜெயினர்கள், புத்த மதத்தினர், கிறிஸ்தவர்கள், பார்சிகள், பாஸ்போர்ட், விசா இல்லாமல் தங்கி

யிருக்க, கடந்த ஆண்டு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதைத் தொடர்ந்தே, இவர்களுக்கு குடியுரிமை அளிப்பதற்கானமுயற்சிகள் துவங்கின.

இவ்வாறு அகதிகளாக உள்ள ஹிந்துக்களுக்கு, இந்தியக் குடியுரிமை அளிக்கப்படும் என, 2014 லோக்சபா தேர்தல்பிரசாரத்தின்போது, பா.ஜ., அறிவித்திருந்தது. அந்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலும், அகதிகளாக வந்துள்ள ஹிந்துக்களுக்கு சட்டப்பூர்வமான உதவிகள் கிடைக்கும் வகையிலும், அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை அளிக்கமத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக, இந்தியக் குடியுரிமை சட்டம் - 1955ல் திருத்தம் செய்யப்பட உள்ளது. இதற்கான மசோதாவை, அடுத்த பார்லிமென்ட் கூட்டத் தொட ரில் தாக்கல் செய்ய, மத்திய அரசு தீவிரமாக உள்ளது. வரும் ஆகஸ்ட், 15ல், சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்குள், இவ்வாறு அகதிகளாக உள்ள ஹிந்துக்களுக்கு குடியுரிமை வழங்க, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
என்ன சொல்கிறது மசோதா? : அகதிகளாக வந்துள்ளவர்களுக்கு இந்தியக் குடியுரிமை அளிக்கும் வகையில் கொண்டு வரப்பட உள்ள வரைவு மசோதா, தற்போது தயாராக உள்ளது. மத்திய அமைச்சரவையில் ஒப்புதலுக்குப் பின், இது இறுதி செய்யப்பட்டு, பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படும்.இந்த வரைவு மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது: சட்ட விரோதமாக குடியேறி யவர்கள் என்ற வாசகம் நீக்கப்படும்

இந்திய சட்டத்தின்படி, வெளிநாடுகளில் இருந்து வந்து, இந்தியாவில், தொடர்ந்து, ஏழு ஆண்டுகள் தங்கியிருப்பவர்கள், குடியுரிமை கோரலாம் அகதிகளாக வருபவர்கள், அவர் களுடைய நாட்டில் இருந்து வெளியேறியதற்கான சான்றிதழையும், குடியுரிமை பெறுவதற்கு விண்ணப்பிக்கும்போது தாக்கல் செய்யவேண்டும். புதிய மசோதாவில், இந்தப் பிரிவு நீக்கப்படுகிறது

குடியுரிமை பெறுவதற்கான கட்டணமும் குறைக்கப்படுகிறது. ஒவ்வொரு குடும்ப உறுப்பி னருக்கும், 5,000 ரூபாய் செலுத்த வேண்டும். அதே நேரத்தில் பாகிஸ்தானில் இருந்து வந்துள்ள ஹிந்துக்களுக்கு, இந்தக் கட்டணம், 100 ரூபாயாக

Advertisement

இருக்கும்

குடியுரிமை பெறுவதற்கான விண்ணப்பத்தை, தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். புதிய மசோதாவின் படி, தாங்கள் தங்கியுள்ள மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் எஸ்.பி.,யிடம் தாக்கல் செய்தால் போதும் இந்தியக் குடியுரிமை பெறு வதன் மூலம், வங்கிக் கணக்கு துவங்க லாம்; டிரைவிங் லைசென்ஸ், பான் கார்டு, ஆதார் எண் ஆகியவற்றை பெறலாம்.
அகதிகள் எத்தனை பேர்? : மத்திய அரசின் கணக்கின்படி, தற்போது நாட்டில் அகதிகளாக உள்ள ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்களின் எண்ணிக்கை, இரண்டு லட்சமாக உள்ளது. ஜோத்பூர், ஜெய்சல்மார், ஜெய்ப்பூர், ராய்பூர், ஆமதாபாத், ராஜ்கோட், கட்ச், போபால், இந்துார், மும்பை, நாக்பூர், புனே, டில்லி, லக்னோவில் மட்டும், பாகிஸ்தான் ஹிந்து அகதிகளுக்கான, 400 குடியிருப்புகள் உள்ளன.

இந்தியாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அகதிகளாக உள்ளனர். இதில், இலங்கையைச் சேர்ந்தவர்கள், ஒரு லட்சம் பேர்; ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள், 10 ஆயிரம் பேர். மேலும், திபெத், மியான்மரைச் சேர்ந்தவர்களும், இந்தியாவில் அகதிகளாக உள்ளனர்.- பார்லிமென் டில் கேள்விக்கு அளித்த பதிலில், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். - நமது சிறப்பு நிருபர் -

Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
உன்னை போல் ஒருவன் - Chennai,இந்தியா
23-ஜூன்-201619:55:31 IST Report Abuse

உன்னை போல் ஒருவன்பச்சைகளின் நாட்டில் யாருக்குமே பாதுகாப்பு கிடையாது ... இது வரவேற்க தக்க முடிவு ...

Rate this:
Indian - Shelton,யூ.எஸ்.ஏ
23-ஜூன்-201619:13:29 IST Report Abuse

Indianஅப்போ தமிழர்கள் ?? தமிழர்கள் என்றாலே இளிச்ச வாயன் தானே..

Rate this:
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
23-ஜூன்-201622:21:42 IST Report Abuse

Agni Shivaஆமாம், திராவிட கட்சிகளின் விஷமத்தனமான வலையில் இருந்து மீளும் வரை....

Rate this:
AG MOHD SALI - THANJAVUR,இந்தியா
23-ஜூன்-201619:09:27 IST Report Abuse

AG MOHD SALIஇந்தியா வில் மத சாயம் அதிகமாகி விட்டது , இது எங்கு கொண்டு போய் விடுமோ கடவுள் எல்லோரையும் காப்பாற்ற வேண்டூம்

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
23-ஜூன்-201617:56:28 IST Report Abuse

Endrum Indianஅப்போ இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் முஸ்லிம்களை பாங்க்ளா தேஷ், பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தானுக்கு அனுப்பிவிடலாமே.

Rate this:
Subbu - chennai,இந்தியா
23-ஜூன்-201615:04:00 IST Report Abuse

Subbuஇங்கு தமிழ் நாட்டில் வந்து உள்ள அகதிகளுக்கு இந்திய குடியுரிமை பெற இது ஒரு நல்ல சந்தர்ப்பம், இங்கு தமிழ் நாட்டில் வீண் கூச்சல் போட்டு கொண்டு இருக்கும், தமிழின காவலர்கள், போராளிகள், விடுதலை வீரர்கள், இனமான காவலர்கள், தமிழ் இன வெறியர்கள், இரண்டு கழகங்களின் எம்.பிக்கள் அனைவரும் இதில் ஒன்று சேர்ந்து இந்த சலுகையை இங்குள்ள இலங்கை அகதிகளை இந்திய குடியுரிமை பெற அனுமதித்தே ஆகவேண்டும் என சட்டமன்றத்தில் ஒருங்கிணைத்த தீர்மானம் நிறைவேற்றி அதை சட்டமாக்க, பாராளுமன்றத்தை முடக்கி ஆணை பெறவேண்டும். செய்வார்களா, அல்லது வழக்கம்போல் ஊரை ஏமாற்றி அறிக்கை மட்டும் விடுவார்களா என பார்க்கலாம்.

Rate this:
GANESH - BANGALORE,இந்தியா
23-ஜூன்-201614:47:41 IST Report Abuse

GANESHஹிந்துக்கள் இந்தியாவில் மைனாரிட்டிகள். ஆனால் இதுதான் கதி. மத மாற்றம், குடும்பக்கட்டுப்பாடு ஆகியவைகளால் ஹிந்துக்களின் ஜனத்தொகை குறைந்து வருகிறது. ஹிந்து பெரும்பான்மை உள்ள வரையில்தான் ஜனநாயகம், மதசார்பின்மை, பேச்சுரிமை, பிற மத சகிப்புத்தன்மை ஆகியவை இருக்கும். மைனாரிட்டிக்கள் ஆக்கப்பட்டால் இவை யாதும் இருக்காது. ஹிந்துக்களே வெளியேற்றப்படுவார்கள். உலகில் இஸ்லாமிய நாடுகளில் என்ன நடக்கிறது, சிறுபான்மையினர் எவ்வாறு ஒடுக்கப்ப்டுகிறார்கள், இரண்டாம் குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள் என்பதை பார்த்துக்கொண்டிருக்கிறோம்.அவர்களை பற்றி குறை சொல்ல முடியாது. அந்த மதத்தின் தன்மை அப்படி பட்டது. அவர்கள் பிற மதங்களை சமமாகிக்க நினைப்பதில்லை. பிற வழிபாடு முறைகளை ஏற்பதில்லை.இது ஏன், உட் பிரிவான ஷியா, அஹ்மதியா பிரிவினரியாய் ஏற்றுக்கொள்வதில்லை. ஹிந்துக்கள் இனிமேலாவது விழித்துக்கொள்ள வேண்டும்.ஹிந்துக்கள் பெரும்பான்மை உள்ள ஒரே நாடு இந்தியா தான். இதை பாது காத்துக்கொள்ள வேண்டும். இதை பற்றி கவலைப்படுவது RSS மற்றும் ப ஜ க தான். போலி மத சார்பின்மை பேசும் மதசார்பற்ற என்று சொல்லு கட்சிகளுக்கு கவலை இல்லை. அவர்களை புறக்கணிப்போம். இவை எல்லாம் தெரிந்தும் மத சார்பின்மை என்ற பெயரில் ஹிந்து மதத்தையும், ஹிந்துக்களையும்

Rate this:
Johnson Ponraj - சென்னை,இந்தியா
23-ஜூன்-201617:47:52 IST Report Abuse

Johnson Ponrajமுதலில் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை தரவேண்டும்....

Rate this:
GANESH - BANGALORE,இந்தியா
23-ஜூன்-201614:22:55 IST Report Abuse

GANESHவரவேற்க thakkadhu

Rate this:
PRABHU - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
23-ஜூன்-201613:13:14 IST Report Abuse

PRABHUஇலங்கையிலிருந்து இந்தியாவிற்கு வந்த இந்துக்கள் இந்தியர் இல்லையா.......இப்படி மதம் பார்த்து குடியுரிமை கொடுத்தால் ஐரோப்பியாவில் மற்றும் அமெரிக்காவில் குடியேறிய கிறித்தவர்களுக்கு மட்டும் ஐரோப்பா குடியுரிமை கொடுக்க தொடங்கினால் ஐ நா அனுமதிக்குமா..... அங்கெல்லாம் குடியேறியுள்ள இந்துக்களின் நிலைமை என்ன......மதத்தையும் மதரீதியாக சிந்திப்பதையும் இவ்யுலகிலிருந்து ஒழிக்க வேண்டும்.......கனடா மற்றும் அமெரிக்கா நாட்டிற்கு குடியுரிமை அப்ப்ளிகேஷன் பார்மில் மதமே கிடையாது.....

Rate this:
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
23-ஜூன்-201615:09:26 IST Report Abuse

Agni Shivaபிரபு ஐயா "இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு வந்த இந்துக்கள் இந்தியர் இல்லையா" என்று கேட்கிறீர்கள். இலங்கையில் ஹிந்துக்கள் என்பதினால் துன்பப்படுத்தப்படுவதில்லை. மாறாக மேற்குறிப்பிட்ட பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் போன்ற முஸ்லீம் நாடுகளில், ஹிந்துக்கள் சொல்லொணா துயரங்களை அனுபவிக்கிறார்கள். ஹிந்து இளம்பெண்கள் கடத்தப்பட்டு கற்பழிக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள் அல்லது மதம்மாறி வாழ வற்புறுக்கிறார்கள் ஹிந்து வியாபாரிகள் ,கல்வியாளர்கள்,ஹிந்து மதத்தவர்கள் குறிவைக்கப்பட்டு தினந்தோறும் கொல்லப்படுகிறார்கள். இது அக்னி ஷிவா சொல்லவில்லை. தினம் தினம் பத்திரிகை செய்திகள் சொல்கிறது.கிறித்தவர்களை குறி பார்த்தே இந்த காட்டுமிராண்டி ஆட்கள் பாகிஸ்தான் சர்ச்சிற்குள் குண்டு வைக்கிறார்கள். வளைகுடா நாடுகளின் முந்தைய சொந்தக்காரர்களான கிறிஸ்தவர்கள் இருந்த தடயமே அங்கு இல்லாமல் துடைத்தெறியப்பட்டு கொண்டு இருக்கிறது. இதை பற்றி கிறிஸ்தவ நாடுகள் ஏதாவது பேச்சு மூச்சு எடுக்கிறார்கள் என்றால் இல்லை. கடைசியாக ஒரு நறுக்கென்ற வார்த்தை. "கனடா மற்றும் அமெரிக்கா நாட்டிற்கு குடியுரிமை அப்ப்ளிகேஷன் பார்மில் மதமே கிடையாது....." என்று நீங்கள் சொல்வதானால் தான் அந்த நாடுகளில் முஸ்லீம் மசூதிகள் ஆங்காங்கு முளைத்து 'எங்கள் மதம் இவ்வாறு சொல்லவில்லை என்று சப்பை காரணம் கூறி பிற கலாச்சார , பண்பாடு மக்களை கூட்டத்திற்குள் துப்பாக்கியோடு புகுந்து கொன்று குவிக்கிறார்கள்....

Rate this:
Indian - Shelton,யூ.எஸ்.ஏ
23-ஜூன்-201619:47:59 IST Report Abuse

Indianஇலங்கையில் தமிழர்கள் என்பதால் துன்பப்படுத்த படடார்கள்.....

Rate this:
Raja - chennai,இந்தியா
23-ஜூன்-201613:01:17 IST Report Abuse

Rajaபாகிஸ்தான் முஸ்லிம்கள், இந்துக்கள் என்று பொய் சொல்லிக்கொண்டு உள்ளே வருவார்கள்

Rate this:
சூத்திரன் - Madurai,இந்தியா
23-ஜூன்-201612:31:03 IST Report Abuse

சூத்திரன்இங்கு இருக்கும் சிறுபான்மையினர் யாரும் அக்பரின் வாரிசோ ராபர்ட் கிளைவ் வாரிசோ அல்ல, காவிகள் அட்டகாசம் தாங்காமல் ஓடியவர்கள் தான். தமிழகத்தில் சிறுபான்மை மக்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகம், ஏன்? திருவாங்கோர் சமஸ்தானத்துடன் இருந்த போது தாழ்த்தப்பட்ட மக்கள் என கூறி பெண்களை மேலாடை அணியவிட வில்லை, அவர்களின் மார்புக்கு கூட வரி விதித்தார்கள், என்று இவர்கள் செய்த கொடுமை எண்ணில் அடங்காதவை. அதன் விளைவே இன்று அந்த மாவட்டத்தில் சிறுபான்மை மக்கள் அதிகம்..

Rate this:
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
23-ஜூன்-201618:33:52 IST Report Abuse

Agni Shivaகண்ணா அசுரா கன்யாகுமரி மாவட்டத்தில் சிறுபான்மை அதிகம் காரணம் அந்த காலத்திலேயே ஏசு அவர்களின் தொண்டர், தோமையார் இந்த பகுதிக்கு வந்து மிகப்பெரும் அளவில் கடற்கரை பகுதி ஹிந்துக்களை கிறிஸ்தவராக மதம் மாற்றியது மற்றும் வெளிநாட்டு கிறிஸ்தவ அமைப்புகளில் இருந்து இங்குள்ள கிறிஸ்தவ NGO க்கள் கையில் கோடிகளையும், பால் பொடியையும், வைத்துக்கொண்டு ஊர் ஊராக திரிந்து வீடு வீடாக ஏறி உதவி செய்கிறேன் என்று சொல்லியும் பிரேயர் பண்ணுகிறேன் என்று சொல்லியும், அப்பாவி ஹிந்துக்களை மதம் மாற்றியதில் காரணமாகத்தான். மாறாக நீங்கள் சொல்வது போல அல்ல. முத்துக்குட்டி நாடாரின் ( வைகுண்டர்) வரலாறு தெரியாதின் விளைவு தான் உங்களின் பிதற்றல்....

Rate this:
மேலும் 28 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement