வழி தெரியாமல் விழி பிதுங்கும் பயணிகள்: கோவை மணிக்கூண்டு பஸ் ஸ்டாப் அவலம்| Dinamalar

வழி தெரியாமல் விழி பிதுங்கும் பயணிகள்: கோவை மணிக்கூண்டு பஸ் ஸ்டாப் அவலம்

Updated : ஜூன் 24, 2016 | Added : ஜூன் 23, 2016
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

கோவை :கோவை டவுன்ஹால் மணிக்கூண்டு பஸ் ஸ்டாப்பில் பஸ் செல்லும் 'ரூட்' எண் மற்றும் பஸ் நிற்கும் இடத்துக்கான அறிவிப்பு பலகை இல்லாததால் மக்கள் அவதிப்படுகின்றனர்.டவுன்ஹால் எப்போதும் பரபரப்பாக ஏராளமான மக்கள் கூடும் பகுதி. ஆடைகள், நகைகள், காலணிகள், காய்கறி மார்கெட் மளிகை பொருட்கள் என ஏராளமான கடைகள் இங்கு செயல்படுகின்றன. பல்வேறு ஊர்களில் இருந்து, பொருட்கள் வாங்க மக்கள் இங்கு குவிகின்றனர். ஆடி மாத தள்ளுபடி, தீபாவளி, கிறிஸ்மஸ், ரம்ஜான் போன்ற பண்டிகை காலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும்.மேலும் தொழில், மருத்துவம், வியாபாரம், வேலை என்று உள்ளூர், வெளி மாவட்டம், வெளி மாநிலம், வெளி நாட்டினர் என தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து, செல்கின்றனர். எப்போதும், 'பிஸியாக' இருக்கும் இங்கு, 'டவுன் பஸ்கள்' எந்த பஸ் எப்போது வரும், எப்போது போகும், எங்கு பஸ் நிற்கும் போன்ற விவரங்கள் கொண்ட அறிவிப்பு பலகை இல்லை. இதனால், பயணிகள் அலைச்சலுக்குள்ளாகின்றனர்.தாராபுரத்தை சேர்ந்த பயணி மதன் கூறுகையில், ''பஸ் வழித்தட விவரங்கள் அடங்கிய பலகைகள் பஸ்ஸ்டாப்பில்' இல்லை. என்னை போல, பல வெளியூர் மக்கள் செய்வது அறியாமல் பல மணி நேரம் ரோட்டில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அதிகாரிகள் இதை கவனத்தில் கொண்டு அறிவிப்பு பலகை அமைத்தால், மக்கள் அனைவருக்கும் பயன் தரும்,'' என்றார்.



Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X