பாழாகும் பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம் 'விளையாடும்' விளையாட்டுத்துறை| Dinamalar

பாழாகும் பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம் 'விளையாடும்' விளையாட்டுத்துறை

Added : ஜூன் 27, 2016 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

மதுரை: மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ரூ.1.50 கோடியில் கட்டப்பட்ட பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம், பணி நிறைவடைந்து ஓராண்டாகியும் திறக்கப்படாமல் பாழாகி வருகிறது.ஐந்து மாவட்டங்களில் பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம் அமைக்க விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அனுமதியளித்தது. இதில் மதுரை உள்விளையாட்டு அரங்கம் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டாகி விட்டது. சட்டசபை தேர்தலுக்கு முன்பு இது திறக்க அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இத்துறையின் உயரதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுக்காததால் திறக்கப்படவில்லை.அரங்கில் 200 பார்வையாளர்கள் அமரும் கேலரி, இறகுபந்து, வாலிபால், கூடைப்பந்து போன்ற பலவகை விளையாட்டுகளை விளையாடலாம். இந்த விளையாட்டுகளுக்கான தரைதளம் மரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பல மாதங்களாக இது பயன்படுத்தப்படாததால் மரங்களாலான தரைதளம் வளைந்து, சமதளமின்றி வீரர்கள் தடுமாறும் நிலையில் பாழ்பட்டு உள்ளது. இந்த விளையாட்டு அரங்கத்தில் விளையாட அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் வீரர்களுக்கு பரிந்துரை செய்து அனுப்புகின்றனர். அவர்களிடம் விளையாட்டுத்துறையினர் அரங்கம் திறக்கப்படவில்லை என தெரிவித்து வருகின்றனர்.அதிகாரிகள் கூறுகையில், ''விளையாட்டு அரங்கத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான உத்தரவு கிடைக்கும்,'' என்றனர்.



Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
29-ஜூன்-201606:05:47 IST Report Abuse
மதுரை விருமாண்டி விடீயோ கான்பரன்ஸில் திறக்கப்பட்ட பல கட்டிடங்கள் பயன்பாட்டுக்கு வந்தால் மேலே விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் பொதுப்பிணித்துறை இருப்பதால் பல கட்டிடங்கள் "திறந்த" பிறகும் மூடியே கிடக்கின்றன. ஒரு இடி, மின்னல் மழை வந்தால் தரை மட்டமாகி விடும்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X