10ம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு தமிழ் பாடத்தில் 1,529 பேர் பங்கேற்பு | Dinamalar

10ம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு தமிழ் பாடத்தில் 1,529 பேர் பங்கேற்பு

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

கடலுார்:பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தவறியவர்களுக்கான உடனடி சிறப்பு துணைத் தேர்வில் கடலுார் மாவட்டத்தில் 1,529 பேர் தேர்வு எழுதினர்.தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு கடந்த மே மாதம் வெளியானது. இத்தேர்வில் தவறியவர்கள், உயர் கல்வியை தொடர வசதியான உடனடி சிறப்பு துணைத் தேர்வு நேற்று நடந்தது. கடலுார் மாவட்டத்தில் மொத்தம் 3,231 பேர் விண்ணப்பித்திருந்தனர். மாவட்டத்தில் 7 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.தமிழ் பாடத்தில் மாவட்டத்தில் 2,247 பேர் தோல்வி அடைந்திருந்தனர். அவர்களில் 1,735 பேர் உடனடி சிறப்பு துணைத் தேர்வில் தமிழ் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 1,529 பேர் மட்டுமே நேற்று நடைபெற்ற தமிழ் முதல் தாள் தேர்வு எழுதினர். 206 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. இன்று தமிழ் இரண்டாம் தாள் தேர்வு நடைபெறுகிறது.

தேர்வில் முறைகேடுகளை தடுக்க தேர்வு மையங்களில் 15 நிலை கண்காணிப்பு குழுவினர் பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும், சி.இ.ஓ.,; டி.இ.ஓ.,க்கள் தலைமையிலான பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.