தொழிற்சாலை கழிவு, மருத்துவ கழிவுகளால் விஷமாகும் செம்பரம்பாக்கம் ஏரி நீர் | Dinamalar

தொழிற்சாலை கழிவு, மருத்துவ கழிவுகளால் விஷமாகும் செம்பரம்பாக்கம் ஏரி நீர்

Added : ஜூலை 01, 2016
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

இருங்காட்டுக்கோட்டை: செம்பரம்பாக்கம் ஏரியில், தொழிற்சாலை கழிவுநீர், மருத்துவ கழிவுகள் கலந்து வருவதால், ஏரியின் நீர் விஷமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் செம்பரம்பாக்கம் ஏரி மிகவும் முக்கியமானது. காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டை, 'சிப்காட்' தொழிற்பேட்டையில், 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. அந்த தொழிற்சாலைகளின் கழிவுநீர் கால்வாய்களில் வெளியேற்றப்படுகிறது.


அந்த நீர், இருங்காட்டுகோட்டை சிப்காட் பகுதியில் இருந்து, சாலையோரம் உள்ள கால்வாய் வழியே சென்று, கீவளூர், தண்டலம், காட்டரம்பாக்கம் ஆகிய ஊராட்சிகள் வழியாக, செம்பரம்பாக்கம் ஏரியில் கலக்கிறது.


இவ்வாறு, இன்று, நேற்றல்ல, தொடர்ந்து பல வருடங்களாக கலக்கிறது. மேலும், மருத்துவமனைகளின் மருத்துவ கழிவுகள், பாலித்தீன் கவர்களில் கட்டி எடுத்து வரும் மர்ம நபர்கள் மேவளூர்குப்பம் அருகே மூட்டை, மூட்டையாக செம்பரம்பாக்கம் ஏரியின் மேற்பகுதி கரையோரம் கொட்டி வருகின்றனர்.

இந்தக் கழிவுகள், மழைக்காலத்தில் செம்பரம்பாக்கம் ஏரிக்குள் சென்று, நீரில் கலந்து வருகிறது. குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து லாரிகளில் எடுக்கப்படும் கழிவுநீர், காட்டரம்பாக்கம் அருகே ஏரியின் கரையோரம் கொட்டப்படுகிறது.


இதனால், செம்பரம்பாக்கம் ஏரி நீர் கொஞ்சம், கொஞ்சமாக விஷமாக மாறி வருகிறது.



நீர் வரத்து கால்வாய்



கிருஷ்ணா கால்வாய், சவுத்திரி கால்வாய், பங்காரு கால்வாய், நேமம் கால்வாய் ஆகிய நான்கு கால்வாய்களே செம்பரம்பாக்கம் ஏரியின் முக்கிய நீர்வரத்து கால்வாய்களாக உள்ளன. இவை நான்கும் ஏரியின் மேல்புற பகுதியில் அமைந்துள்ளன.


இதில், இருங்காட்டுகோட்டை அருகே அமைந்துள்ள கிருஷ்ணா கால்வாய், சவுத்திரி கால்வாய்கள் மூலம், மழைக்காலத்தில் கழிவுநீர் ஏரிக்கு வருகிறது.



சென்னையின் குடிநீர் ஆதாரம்



காஞ்சிபும், திருவள்ளூர் மாவட்டத்தின் எல்லை பகுதியில் அமைந்துள்ள இந்த ஏரி, 6,300 ஏக்கர் பரப்பு கொண்டது. ஏரியின் கொள்ளளவு, 3,645 மில்லியன் கன அடி நீர். 24 அடி உயரத்திற்கு நீரை தேக்க முடியும்.

ஏரியின் அருகே அமைந்துள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து, நாளொன்றுக்கு, 80 கன அடி நீர், சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு வினியோகிக்கப்படுகிறது.


மேலும், திருமுடிவாக்கம், பழந்தண்டலம் உள்ளிட்ட பல கிராமங்களின், 1,000 ஏக்கர் விவசாயத்திற்கு, ஏரியிலிருந்து, தினமும், 20 கன அடி நீர் வழங்கப்படுகிறது.


" தண்டலம், கீவளூர், காட்டரம்பாக்கம் ஆகிய ஏரியின் மேற்புற பகுதிகளில் புதர் மண்டி இருக்கும் பகுதியில் மர்ம நபர்கள் மருத்துவ கழிவுகளை கொட்டுகின்றனர். எனவே, ஏரியின் எல்லை பகுதியில் உள்ள புதர்களை அகற்றி, வேலி அமைத்து, பாதுகாக்க வேண்டும். "- என்.கணபதி, தண்டலம்

" கீவளூர் ஊராட்சியில் உள்ள, மடுவாத்தம்மன் கோவில் குளம், தண்டலம் ஊராட்சியில் உள்ள, உப்பு குளம் மற்றும் குட்டைகளில் தொழிற்சாலை கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இந்த குளத்தில் இருந்து வழிந்து செல்லும் நீர், செம்பரம்பாக்கம் ஏரியில் கலந்து வருகிறது.


அதுபோல, கீவளூர், தண்டலம் ஊராட்சிகளில் கால்வாய் வழியே வரும் தொழிற்சாலை கழிவுநீர், 10க்கும் மேற்பட்ட இடங்களின் வழியே தொடர்ந்து பல வருடங்களாக, செம்பரம்பாக்கம் ஏரியில் கலந்து வருகிறது." - எஸ்.ரகு, கீவளூர்



Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X