ராமேஸ்வரம் கோயிலில் புதிய கொடி மரம் ஜூலை 21ல் பிரதிஷ்டை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ராமேஸ்வரம் கோயிலில் புதிய கொடி மரம் ஜூலை 21ல் பிரதிஷ்டை

Added : ஜூலை 02, 2016 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ராமேஸ்வரம் கோயிலில் புதிய கொடி மரம்  ஜூலை 21ல் பிரதிஷ்டை

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ரூ.5 லட்சம் செலவில் தயாராகிவரும் புதிய கொடி மரம், ஜூலை 21ல் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.ராமேஸ்வரம் கோயிலில் சில மாதங்களுக்கு முன்பு, பர்தவர்த்தினி அம்மன் சன்னதி முன்புள்ள கொடி மரம் முறிந்தது. இதையடுத்து ரூ.5 லட்சம் செலவில் புதிய கொடி மரம் அமைக்க ராம்கோ குரூப் நிர்வாகம் முன்வந்தது. அதன்படி 40 அடி நீளத்தில் தேக்கு மரம் நேற்று ராமேஸ்வரம் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. இதன்மீது காப்பர் மற்றும் தங்க தகடுகள் பொருத்தி கொடிமரம் தயார் செய்வதற்கான நிர்மாண பணிகள் வேகமாக நடக்கிறது. ஜூலை 11ல் பாலாலய பூஜையும், ஜூலை 21ல் புதிய கொடிமரம் பிரதிஷ்டையும் செய்யப்பட உள்ளது, என கோயில் இணை ஆணையர் செல்வராஜ் தெரிவித்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chandramoulli - Mumbai,இந்தியா
02-ஜூலை-201610:29:14 IST Report Abuse
Chandramoulli நல்லதே நடக்கட்டும். சரியான பராமரிப்பு இல்லாததால் கொடி மரம் பழுது அடைந்து விட்டது. மேலும் உப்பு காற்று வீசுவதில் மூலமும் பழுது அடைந்து இருக்கலாம். கோவில் நிர்வாகம் பராமரிப்பு செய்ய தவறி விட்டது.மந்திரிகளுக்கு உபசரிப்பு செய்வது மட்டும் கோவில் நிருவாகத்தின் வேலை இல்லை. கோவிலையும் பராமரிக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை