சிக்கினான் சுவாதி கொலையாளி: செங்கோட்டையில் போலீசார் சுற்றிவளைத்தனர்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிக்கினான் சுவாதி கொலையாளி: செங்கோட்டையில் போலீசார் சுற்றிவளைத்தனர்

Updated : ஜூலை 03, 2016 | Added : ஜூலை 02, 2016 | கருத்துகள் (264)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சென்னை: சென்னையில் மென்பொறியாளர் சுவாதியை கொலை செய்த கொலையாளி நள்ளிரவு கைது செய்யப்பட்டான்.



சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி, கடந்த மாதம் 24ல் மர்ம நபரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தப்பிச் சென்ற கொலையாளியை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். போலீசாருக்கு கிடைத்த சிசிடிவி கேமரா பதிவுகளின் அடிப்படையில் குற்றவாளியின் மாதிரி வரைபடத்தை போலீசார் வெளியிட்டனர். தொடர்ந்து பல இடங்களிலும் கொலையாளியை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், சுவாதியை கொலை செய்த கொலையாளி நள்ளிரவில் செங்கோட்டையில் கைது செய்யப்பட்டான்.


கொலையாளியின் பெயர் ராம்குமார் என்றும், போலீசார் தன்னை நெருங்கியதை அறிந்த அவன், கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, கொலையாளி ராம்குமார் கைது செய்யப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.


போலீசாரால் கைது செய்யப்பட்ட ராம்குமார், 24 நெல்லை மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்தவன்; பி.இ., பட்டதாரி. வேலை தேடி சூளைமேடில் தங்கியிருந்த ராம்குமார், சுவாதியை ஒருதலையாக காதலித்துள்ளான். கடந்த 3 மாதங்களாக முயற்சித்தும் சுவாதி காதலை ஏற்காததால் வெறுப்படைந்த ராம்குமார் நண்பன் ஒருவன் உதவியுடன் கொலை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொலையாளி ராம்குமாரை சென்னை கொண்டுவர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராம்குமாரின் தந்தை பரமசிவம், தாய், சகோதரி உள்ளிட்ட 4 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சூளைமேட்டில் ராம்குமார் தங்கியிருந்த மேன்சனிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறுவை சிகிச்சை:ராம்குமாரின் கழுத்தில் எக்ஸ்ரே எடுக்கப்பட்ட பின், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப்பின் ராம் குமார் பேச ஆரம்பித்தான். அவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (264)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bharathi - Melbourne,ஆஸ்திரேலியா
03-ஜூலை-201612:05:55 IST Report Abuse
Bharathi இதுதாங்க உண்மையிலே ஆணவக்கொலை. ஒரு தறுதலை மிருகம் செய்த ஆணவ கொலை. அந்த பெண் போலீசில் கம்பளைண்ட் பண்ணியிருந்தால் இந்த நாய் வாழ்க்கை நாறியிருக்கும். பரிதாபப்பட்டதால் அப்பாவி பெண் தன் உயிரை இழந்தது.
Rate this:
Share this comment
Cancel
ஏடு கொண்டலு - Cupertino,யூ.எஸ்.ஏ
03-ஜூலை-201609:18:18 IST Report Abuse
ஏடு கொண்டலு தமிழ் நாட்டுக்கு காப்பு (cop) தான் தரணிக்கெல்லாம் டாப்பு தான்... ஒஸ்தி... அனைத்துத் தரப்பு மக்களும் emotional ஆன நிலையில், பலரும் தத்தம் சாதிக்கும், கட்சிக்கும் ஆதாயம் தேடிய நிலையில், நீதி மன்றமே கூட எமோஷன் ஆகி நிதானம் இழந்த நிலையில், நிதானம் இழக்காமல் இருந்தவர்கள் காவல் துறையினர், குஷ்பூ, முதல்வர் ஜெயலலிதா இவர்கள் மட்டுமே. சபாஷ்.
Rate this:
Share this comment
Cancel
Bharathi - Melbourne,ஆஸ்திரேலியா
03-ஜூலை-201600:51:37 IST Report Abuse
Bharathi தயவு செய்து இதை காதல் என்று சொல்லி இறந்த அப்பாவி பெண்ணையும் அவர் குடும்பத்தாரையும் அவமானப்படுத்த வேண்டாமே. இது ஒரு தகுதி இல்லாத மிருகத்தின் வெறி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X