மதுரை தியாகராஜர் இன்ஜி., கல்லூரியில் பழைய மாணவ, மாணவியர் சந்திப்பு| Dinamalar

மதுரை தியாகராஜர் இன்ஜி., கல்லூரியில் பழைய மாணவ, மாணவியர் சந்திப்பு

Added : டிச 29, 2010
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

மதுரை: மதுரை தியாகராஜர் இன்ஜி., கல்லூரியில், கடந்த 1981ம் ஆண்டு முதல் 1985ம் ஆண்டு வரை பல்வேறு துறைகளில் படித்தவர்கள் 25 ஆண்டுகளுக்குப்பின் குடும்பத்தாருடன் சந்தித்து நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் கடந்த 1981ம் ஆண்டு முதல் 1985ம் ஆண்டு வரை படித்தவர்கள் 220 பேர். இதில் 170 பேர் சந்திப்பு விழாவிற்கு வந்தனர். அப்போது கல்லூரி முதல்வராக இருந்த மரிய<<<<<லூயிஸ் விழாவிற்கு தலைமை வகித்தார்.


தற்போதைய முதல்வர் அபய்குமார், மதுரை பொதுப்பணித்துறை பொறியாளர் தங்கவேல் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் வசீகரன், இனியநேரு, பாரதி, பாரதிதாசன், ஆனந்தன், ஜான்சி பேசினர். பேராசிரியர்கள் ராஜு, பழனியப்பன், பாலமுருகன், முரளிதரன், மெய்யப்பன், கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கல்லூரியில் தாங்கள் படித்த வகுப்பு அறைகள், ஆய்வகங்கள், ஆராய்ச்சி மையங்கள் ஆகியவற்றிற்கு முன்னாள் மாணவர்கள் பார்வையிட்டு பழைய நினைவுகளை பரஸ்பரம் ஞாபகப்படுத்தி மகிழ்ந்தனர்.


இதில், மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. தற்போது கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள், பழைய மாணவர்களிடம் வேலை வாய்ப்புகள், நேர்முகத்தேர்வை எப்படி சந்திப்பது, வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் குறித்து கேட்டறிந்தனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X