இந்திய அரசாங்கமும் சட்டங்களும் 4:| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சட்டமும் சந்தேகங்களும்

இந்திய அரசாங்கமும் சட்டங்களும் 4:

Added : ஜூலை 03, 2016
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
 இந்திய அரசாங்கமும் சட்டங்களும் 4:

ஒரு வியாபாரி கையில் இருக்கும் தங்க மற்றும் வெள்ளி நகைகள் உண்மையில் அந்த வியாபாரியுடையது அல்ல எனவும், அவை களவுச் சொத்து எனவும் சந்தேகிக்கப்பட்டு போலீசால் அந்த நகைகள் கைப்பற்றப்படுகின்றன.
இதையடுத்து அந்த வியாபாரி தம் கையிலிருந்து கைப்பற்றப்பட்ட நகைகள் அனைத்தும் தமது வியாபார சொத்துக்களே என நிருபிக்கிறார். எனவே விடுவிக்கப்படுகிறார். இப்போது அவரது அந்த நகைகளை அவரிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் இடைப்பட்ட காலத்தில் அவற்றைக் கைப்பற்றிய போலீஸ் அதிகாரி அந்த நகைகளை எடுத்துக் கொண்டு பாகிஸ்தான் ஓடி விடுகிறார்.இப்போது அந்த வியாபாரி தமது நகைகளையோ, அல்லது அதற்கு ஈடான தொகைகளையோ அரசாங்கம் தமக்குத் தரவேண்டும் என வழக்குத் தொடர்கிறார்.அந்த வழக்கில், “ஒரு அரசாங்க அதிகாரி தமது அரசாங்கப் பணிகளைச் செய்கையில் ஒரு தனி நபருக்கோ, பொது சனங்களுக்கோ ஊறு வரும் எனில் அதற்கான ஈட்டுத்தொகையை அரசு தருகிறது. ஆனால் அந்த போலீஸ் அதிகாரியோ தமது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, அதாவது அரசாங்கம் கொடுத்த வேலை நேரத்தில், அரசாங்கம் அவருக்குப் பணித்துள்ள வேலையை, தமக்களித்தபடி செய்யாமல் தன் சுய லாபத்திற்காக குற்றச் செயலில் இறங்கியமையால், அதற்கு அவரைப் பணிக்கு அமர்த்திய அரசாங்கம் பொறுப்பாகாது என்றும், அது ஒரு தனி கொள்ளைச் சம்பவமாக கொள்ளப்படும்,” என்றும் தீர்ப்பானது.இதற்கு சமீப எடுத்துக் காட்டாக, பெண்ணின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து பதிவிட்ட வழக்கில் அதை கவனித்துப் பணியாற்ற வேண்டிய காவல் அதிகாரி லஞ்சம் வாங்கினார். இந்த குற்றத்திற்கு அரசாங்கப் பொறுப்பேற்காது. ஆனால் அந்த அதிகாரிக்கு, தற்காலிக பணித்தடை வழங்கியுள்ளது என்பது கவனிக்கத் தக்கது. அதாவது அது தனி மனிதக் குற்றமாகவே பார்க்கப்படுகிறது.இதைக் கேட்கையில், அரசாங்கமே ஒரு அரசாங்க ஊழியரின் குற்றத்திற்குத் துணை போவது போலவே இருந்தாலும் உண்மை நிலை அதுவல்ல.சரி. குற்றம் செய்த அரசு ஊழியருக்குத் தண்டனை சரி. ஆனால் பாதிக்கப்பட்டவருக்கு? அரசாங்கம் ஒரு திட்டத்தைச் செயல்படுத்துகிறது. அந்த திட்டத்தால் ஒரு சிலர் பாதிக்கப்படக் கூடும். ஆனால், அதே திட்டத்தால், எதிர்காலத்தில் அதிக மக்களுக்கு நன்மை பயக்கும் எனில், அரசாங்கம் அந்த திட்டத்தைச் செயல்படுத்தும். அதே சமயத்தில் தன் செயலால் பாதிக்கப்படக் கூடிய மக்களுக்கு ஈட்டுத் தொகை வழங்கிவிடும். இதற்கு மிகச் சிறந்த உதாரணம் எனில் நிலம் கையகப்படுத்தவதைச் சொல்லலாம். இதற்கென தனி சட்டமே உள்ளது. தமிழகத்தைப் பொறுத்த வரையில் “Land Acquisition Act” இதற்கு பதிலாக அமைகிறது.இது போக, அரசாங்கம் செய்ய வேண்டிய செயலைச் செய்யாததினால் மக்களில் ஒரு சிலர் நட்டமடைந்திருந்தால், அதற்காக அரசாங்கமே ஈட்டுத்தொகை தருவதுண்டு. இதற்கு உதாரணமாகம 2015 ஜனவரியில் காட்டு விலங்குகள் ஊருக்குள் புகுந்து சேதப்படுத்தியது, மேலும் சிலர் கொல்லப்பட்டனர். இவர்களுக்கு மஹாராஷ்டிர அரசாங்கம், ரூபாய் 8 லட்சம் வரை தருவதாக முடிவெடுத்தது. இதை மக்கள் நல அரசின் செயலாகக் கொள்ளலாம்.அடுத்த கேள்வி…அரசு செயல்படுகையில் அதனைச் செயல்படுத்த வேண்டிய ஒரு அரசு ஊழியர் செய்த பிழை/குற்றத்தினால் பாதிக்கப்பட்டவருக்கு என்ன தீர்வு?இந்திய அரசியலமைப்புச் சட்டம், இந்திய குடிமகன்களுக்கு பல்வேறு அடிப்படை உரிமைகளை வழங்குகிறது. அவ்வுரிமைகள் அட்மினிஸ்ட்ரேடிவ் ஏஜென்சிகளால் மீறப்பட்டால் ரிட் மனு மூலம் தமது உரிமைகளை மக்கள் மீளப்பெறலாம். நிர்வாகத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட அதிகாரத்தை அத்து மீறி பயன்படுத்தி, துஷ்பிரயோகம் செய்து, எவருக்கேனும் தீங்கு செய்தால், அது அடிப்படை உரிமையாகவும் இல்லாதிருக்கும்பட்சத்தில், பாதிக்கப்பட்ட அத்தனி மனிதருக்கு தீர்வழிதான் என்ன?இக்கேள்விக்கு பதில் சொல்லவே அமைக்கப்பட்டவைதான் தீர்ப்பாயங்கள். அதாவது நீதித் துறைக்கே உள்ள நீதி வழங்கும் அதிகாரம், இந்த அமைப்புகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது எனலாம். இவை விசாரணை ஆணையங்களாக, நிர்வாக தீர்ப்பாயங்களாக செயல்படுகின்றன.இன்றைய அரசு காவல் அரசு மட்டுமல்லாமல், மக்கள் நல அரசாகவும் பணியாற்ற வேண்டி இருப்பதால் அதிக அளவில் சட்டங்களையும் இயற்ற வேண்டி இருப்பதால், அதற்குத் தேவையான காலம் பெரிதாக இருப்பதாலேயே இந்த சட்டமியற்றும் அதிகாரப் பகிர்வு. ஆக மொத்தத்தில் தீர்ப்பாயங்கள், சட்டமியற்றும் அதிகாரப் பகிர்வை கொண்டு இருப்பதாலேயே, ஓரளவுக்கேனும், அரசாங்கம் சார்ந்த சிக்கல்களை சட்ட உதவி கொண்டு களைய முடிகிறது.ஆக, பொது சனத்தின் உரிமை மீறப்படுமாயின் அது அரசாங்க ஊழியரின் அத்து மீறலாக இருப்பின், அரசு ஊழியரின் தனிமனிதக் குற்றமாக அவருக்குத் தண்டனையும், அரசாங்கத் திட்டத்தால் பாதிப்பெனில் ஈட்டுத் தொகையும், பொது சனத்தின் அடிப்படை உரிமை அரசாங்கத்தால் மீறப்படுமாயின் ரிட் மனு மூலமும், அது அடிப்படை உரிமை மீறலாக இல்லாது இருப்பின், (அந்தப் பிரச்னைக்கு என தீர்ப்பாயங்கள் இருக்கும்பட்சத்தில்) தீர்ப்பாயங்களும் பதில் சொல்பவையாக அமையும்.-ஹன்ஸா (வழக்கறிஞர்)legally.hansa68@gmail.comPh.9994949195

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை