'தேவாங்கு போல இருக்கும் நீ, என்னை காதலிப்பதா?அவமானப்படுத்தியதால் சுவாதியை கொன்றேன்:ராம்குமார் Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'தேவாங்கு போல இருக்கும் நீ, காதலிப்பதா?
அவமானப்படுத்தியதால் கொன்றேன்

'தேவாங்கு போல இருக்கும் நீ, என்னை காதலிப்பதாக சொல்கிறாயே என, சுவாதி அவமானப்படுத்தியதால், அவரது வாயில் வெட்டினேன்; கொலை செய்யும் எண்ணம் இல்லை' என, ராம்குமார் கூறியுள்ளான்.

 'தேவாங்கு போல இருக்கும் நீ, என்னை காதலிப்பதா?அவமானப்படுத்தியதால் சுவாதியை கொன்றேன்:ராம்குமார்

சென்னை, சூளைமேடு, தெற்கு கங்கை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுவாதி, 24; மென் பொறியாளர். ஜூன், 24ம் தேதி காலை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், மர்ம வாலிபனால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார்.

இது குறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன், கூடுதல் கமிஷனர் சங்கர் தலைமையிலான போலீசார் துப்பு துலக்கி, நெல்லை மாவட்டம், செங்கோட்டையை அடுத்த, டி.மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார், 24, என்பவனை, வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.

அவன் குரல் வளையை, பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்றதால், நெல்லையில் சிகிச்சை அளித்த பின், சென்னைக்கு கொண்டு வரப்படுகிறான். அவன் மயக்க நிலையில் இருந்ததால், கொலைக்கான காரணத்தை தெரிந்து கொள்ள முடியாமல், போலீசார் தவித்தனர். அவ்வப்போது அவன் கண் விழிக்கும் போதெல்லாம், டாக்டர்கள் உதவியுடன் போலீசார் அவனிடம் விசாரணை நடத்தினர்.

நேற்று அவனிடம், நெல்லை மாவட்டம் செட்டிக்குளம் மற்றும் வி.எம்.சத்திரம் கிராம நிர்வாக அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றனர். அவர்களிடம் ராம்குமார் கூறியதாவது:

நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள, ஐன்ஸ்டின் பொறியியல் கல்லுாரியில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தேன். பெரும்பாலான பாடங்களில் பெயிலானதால், என் தந்தை, 10 வெள்ளாடுகள் வாங்கி கொடுத்தார்; சில மாதங்கள் ஆடு மேய்த்தேன்.

என் வயதுடைய இளைஞர்கள், தந்தை பரமசிவத்திடம், 'இன்ஜினியரிங் படித்தவனை, ஆடு மேய்க்க விடுகிறீர்களே; அவனை சென்னைக்கு அனுப்புங்கள்' என்றனர். எங்கள் ஊரைச் சேர்ந்த நண்பர் ஒருவர், சூளைமேட்டில் உள்ள மேன்ஷனில் தங்கி, 'ஏசி' மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார்.

அவருடன், செப்டம்பரில் சென்னைக்கு சென்றேன். ஏப்.,7 முதல், அவர் தங்கி இருந்த,

ஏ.எஸ்., மேன்ஷனிலேயே தங்கி, ஜவுளிக் கடை யில் வேலை பார்த்து வந்தேன். தினமும் மாலை யில், சூளைமேட்டில் உள்ள பெருமாள் கோவிலுக்கு செல்வேன். அங்கு தான் சுவாதியை பார்த்தேன். சில நாட்கள் தொடர்ந்து கோவிலுக்கு சென்ற நான், அவளிடம் பேச முயற்சித்தேன்; ஆனால், அவள் பேசவில்லை.

பின்னர், நுங்கம்பாக்கத்தில் இருந்து செங்கல் பட்டு, தினமும் ரயிலில் சுவாதி செல்வதை அறிந்தேன். அதனால், சுவாதியை கோவிலில் பார்ப்பதோடு, ரயில் நிலையத்திலும் காத்திருந்து, அவளை பார்க்கத் துவங்கினேன். ஒரு முறை ரயில் நிலையத்தில் நின்றிருந்த சுவாதியிடம், அவளைகாதலிப்பதாக கூறினேன்; உடன் கோபப்பட்டு திட்டினாள்.

அத்துடன் தன் தந்தைக்கு போன் செய்தாள்; அவரும், ரயில் நிலையம் வந்து சுவாதியை அழைத்து சென்றார். ஆனால், நான் காதலிப்பதாக சொன்ன விவரத்தை, தன் தந்தையிடம் சுவாதி கூறவில்லை. தந்தையிடம் விபரத்தை சொல்லி, அவள் என்னை காட்டிக் கொடுத்து விடுவாளோ என, பயந்தேன். அவள் விஷயத்தை தந்தையிடம் கூறாதது எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

அதனால், அவள் என்னை காதலிப்பதாக நினைத் தேன். அதன் பின், தினமும் பின் தொடர்ந்து சென்றேன். மீண்டும் ஒரு முறை காதலை சொன்ன போது, 'தேவாங்கு போல இருக்கும் நீ, என்னை காதலிப்பதாக எப்படி சொல்வாய்' என, என்னை கடுமையாக திட்டினாள்.

அவளின் பேச்சு எனக்கு ஆத்திரத்தை உண்டாக்கி யது. அன்று இரவு முழுவதும் துாக்கம் இல்லை; பெரிய அவமானமாக கருதினேன். அவளின் நாக்கை அறுக்க வேண்டும் அல்லது வாயில் வெட்டவேண்டும் என, நினைத்தேன்.

ஜூன், 24ம் தேதி காலை, ரயில் நிலையம் சென்று, சுவாதியிடம் என் காதலை ஏற்கும்படி கெஞ்சி னேன்; அப்போதும் திட்டினாள். இதனால், அவளை லேசாக தான் வெட்டினேன்; வெட்டு கழுத்தில் விழுந்ததால் இறந்து விட்டாள். சுவாதியின் பையில் இருந்த, மொபைல் போனை எடுத்துக் கொண்டு தப்பி விட்டேன்.

நான் எப்படியும், போலீசில் சிக்குவேன் என தெரி யும். அதற்கு முன் தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன்; ஆனால், தைரியம் வரவில்லை. பின், சொந்த ஊருக்கு சென்று விட்டேன். தினமும் செய்தித் தாள்கள் வாங்கி, சுவாதி கொலை பற்றி வரும் செய்திகளை எல்லாம் படித்தேன்.இவ்வாறு அவன் கூறியுள்ளான்.

யார் அந்த நண்பன்?: ராம்குமாரைசென்னைக்கு அழைத்து சென்றது, அதே கிராமத்தை சேர்ந்த பட்டதாரி வாலிபன். சூளைமேட்டில், 'ஏசி' மெக்கானிக்காக உள்ளான். கொலைக்கு பின் ராம்குமாரை அவன் சந்தித்திருக்க வாய்ப்பு உள்ளது. தற்போது அவன் தலைமறைவாக உள்ளான்.

ராம்குமார் சென்னைக்கு மாற்றம்: நெல்லை அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்ற

Advertisement

ராம்குமாரிடம், நேற்று மதியம், 2:15 மணிக்கு, நெல்லை முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் ராமதாஸ் வாக்குமூலம் பெற்றார். அவரது உத்தரவுப்படி, சென்னை, தனிப்படை போலீசார், நேற்று மாலை, 4:20க்கு, '108' ஆம்புலன்ஸ் மூலம், சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.

மூன்று மருத்துவர்கள், செவிலியர்கள் என, ஐந்து பேர் ஆம்புலன்சில் சென்றனர். துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு அளித்தனர். இன்று காலை, 10:00 மணிக்கு, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில், ராம்குமார் ஆஜர்படுத்தப்படுகிறான்.

*சிறப்பு வார்டு: சென்னைக்கு கொண்டு வரப்படும் ராம்குமார், ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில், கைதிகளுக்குரிய வார்டில், சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட உள்ளான். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காது, மூக்கு, தொண்டை நிபுணர்கள் சிகிச்சை அளிக்க உள்ளனர். சிகிச்சைக்கு பின், தெளிவாக பேசும் நிலைக்கு வந்த பின், போலீசார் தொடர் விசாரணை நடத்த உள்ளனர். பின், அவன் புழல் சிறையில் அடைக்கப்பட உள்ளான்.

கைரேகை சேகரிப்பு: சூளைமேட்டில், ராம்குமார் தங்கி இருந்த அறையில், போலீசார் நேற்று அவன் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் கதவு உள்ளிட்ட இடங்களில், கைரேகைகளை சேகரித்தனர். அப்போது, பல முக்கிய தடயங்கள் கிடைத்ததாக கூறினர்.

உசுப்பேற்றிய நண்பர்கள்: சென்னை, சூளைமேட்டில் உள்ள தனியார் விடுதியில் ராம்குமார் தங்கியிருந்த போது, அவனுடன் பழகிய சிலரிடம், சுவாதியை காதலிப்பதாக கூறியுள்ளான். அவர்களும், 'எப்படியாவது அந்தப் பெண்ணை காதல் வலையில் வீழ்த்தி விடு' என, உசுப்பேற்றியுள்ளனர்.

அதனால், ஜவுளிக்கடையில் வேலை பார்த்த ராம்குமார், விதவிதமான ஆடைகள் அணிந்து, சுவாதியின் மனதில் இடம் பிடிக்க நினைத்துள் ளான். நண்பர்கள் உசுப்பேற்றி யதால், அளவுக்கு அதிகமான கற்பனையில், பகல் கனவு கண்ட ராம்குமார் கொலைகாரனாக மாறி விட்டான் என, போலீசார் கூறியுள்ளனர்.

- நமது நிருபர் குழு -

Advertisement

வாசகர் கருத்து (195)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
apn shanmugam - trichy,இந்தியா
05-ஜூலை-201609:54:29 IST Report Abuse

apn shanmugamஇது போன்ற செயல்களுக்கு சினிமாதான் காரணம்

Rate this:
சாமி - மதுரை,இந்தியா
04-ஜூலை-201621:05:13 IST Report Abuse

சாமிதேவாங்கு போல இருக்கும் நீ, என்னை காதலிப்பதாக சொல்கிறாயே/// அந்த பொன்னு சரியாதானே சொல்லி இருக்கு...

Rate this:
mohan ramachandran - chennai,இந்தியா
04-ஜூலை-201620:32:57 IST Report Abuse

mohan ramachandran இதற்கும் (என்னுடைய கருத்துக்கும் சினிமாவைத்தான் இழுக்க வேண்டி இருக்கு. பாபநாசம் திரைப்படத்தில் அந்த போலீஸ் அதிகாரி "சினிமா வின் தாக்கத்தை பற்றி .அது போல 80 க்கு பின் வந்த சினிமாக்கள் விடலை பருவத்தில் வரும் இச்சை உணர்வை "காதல் " என்கிற போர்வையில் காவியம் போல சித்தரித்து இளம் நெஞ்சங்களை பள்ளி செல்லும் பாலர்களின்உ காம ணர்வை தூண்டி விட்டு அவனை நிழல் உலகத்திர்ற்கு அழைத்து சென்று நிஜத்தை மறக்கடிக்க பட்டு மூளை சலவை செய்யப்பட்ட அவர்கள் செய்யும் உணர்வுதான் காதல் என்பது.அது தற்பொழுது அசுர ரூபம் பெற்று வீட்டின் வரவேற்பு அறையில் பட்டனை தட்டினால் குடும்பம் அனைவரும் பார்த்து ரசிக்கும் காலம் இது. மேலும் சமூக வலை தலங்களான FB ,வாட்சப் .மற்றும் ட்விட்டர் போன்றவைகள் அந்த தாக்கத்தை மேலும் ராக்கெட் வேகத்தில் பரவுகிறது .மீனாக்ஷி புறம் என்ற குக் கிராமத்தை சேர்ந்த ஒருவன் சென்னையில் நுங்கம்பாக்கத்தில் வசிக்கும் பெண்ணுடன் தொடர்பு கொள்கிறான் .அந்த பெண்ணும் (தவறாக சொல்ல வில்லை )அவன் யாரென்றே தெரியாமல் அவனுடன் இணைய தளத்து மூலமாக தொடர்பு கொள்கிறாள் .(இப்படித்தான் பத்திரிக்கைகள் செய்தி தருகிறது )ஆக இந்த தகவல் தொடர்பு வளர்ச்சி அசுரத்தனமானது .ஆக பெற்றோர்கள் இதில் அதி முக்கிய கவனம் கொள்வது அதாவது பிள்ளைகள் கண்காணிப்பது முக்கிய தேவையாகிறது. இதைத்தான் இந்த சம்பவம் சமூகத்தின் கவனத்தை ஈர்க்கிறது .மிக முக்கிய பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கிறது. தகவல் நுட்ப வளர்ச்சி ஒரு வரப்பிரசாதம் .அதே சமயத்தில் அதை மிக்க கவனமாக ,நிதானத்தோடு கையாள வேண்டிய சூழ் நிலை பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இருக்கிறது .நடந்த துயரமான சம்பவம் மிக்க வேதனை அளிக்கிறது .நாட்டையே உலுக்கி விட்ட சம்பவம் நமது அனைவரின் சிந்தனையையும் தூண்டி விட்டது .

Rate this:
மேலும் 192 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X