காரைக்குடி ரோட்டில் ஓடும் கழிவு நீரால்... தூர்வாராத கால்வாய்களால் மக்கள்அவதி| Dinamalar

காரைக்குடி ரோட்டில் ஓடும் கழிவு நீரால்... தூர்வாராத கால்வாய்களால் மக்கள்அவதி

Added : ஜூலை 04, 2016 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
காரைக்குடி ரோட்டில் ஓடும் கழிவு நீரால்... தூர்வாராத கால்வாய்களால் மக்கள்அவதி

காரைக்குடி: காரைக்குடியில் கால்வாய்கள் தூர்வாராாததால் கழிவுநீர் ரோட்டில் ஓடுகிறது. இதனால் மக்கள் அவதிப் படுகின்றனர்.

காரைக்குடி நகராட்சியில் 30,867 வீடுகள், 3 ஆயிரம் வணிக வளாகங்கள் உள்ளன. மழைநீர் செல்ல நகர் முழுவதும் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. பத்து முதல் 20 மீ., வரையிலான அகல கால்வாய்கள், ஒன்றரை அடி முதல் 2 அடி வரையிலான அகல கால்வாய்கள் 206 கி.மீ., க்கு உள்ளன.

இந்த கால்வாய்கள் வழியாக செல்லும் மழைநீர் காரைக்குடியை சுற்றியுள்ள காரைக்குடி பெரிய கண்மாய், அதலை, செஞ்சை நாட்டார், அமராவதிபுதூர் கண்மாய்களுக்கு சென்றன. அவற்றை பயன்படுத்தி 3 போகம் விவசாயமும் செய்யப்பட்டன. தற்போது கால்வாய்கள் அனைத்தும் கழிவு நீர் ஓடையாக மாறிவிட்டன. இதனால் மழைநீருக்கு பதிலாக கழிவுநீரே அந்த கால்வாய்களில் ஓடுகிறது.


மேலும் சில இடங்களில் கால்வாய்கள் போதிய பராமரிப்பு இன்றி, தூர்வாரப்படாமல் உள்ளன. சில இடங்களில் கால்வாய்களை ஆக்கிரமித்து மண்ணை மூடி மேவியுள்ளனர். பெரும்பாலான பகுதிகளில் கால்வாய்களில் கழிவு நீர் தேங்கி நிற்கின்றன.


காரைக்குடி அம்மன் சன்னதி வி.ஆர்.எம்.சந்து கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, ரோட்டில் கழிவு நீர் ஓடுகிறது. அதே பகுதியில் ரோட்டோரத்தில் பல இடங்களில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுத் தொல்லையும் அதிகமாக உள்ளது. இதேபோல் நகர் முழுவதும் ஆங்காங்கே ரோட்டில் கழிவுநீர் ஓடுகின்றன.


எம்.ராமனாதன், அம்மன் சன்னதி: வி.ஆர்.எம்.சந்து கால்வாயில் பல மாதங்களாக அடைப்பு உள்ளது. அவ்வப்போது தற்காலிகமாக சரிசெய்கின்றனர். பாலம் அமைத்தால் மட்டுமே நிரந்தர தீர்வாக இருக்கும். நகராட்சி நிர்வாகத்திடம் கூறியும் பலனில்லை, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
05-ஜூலை-201604:10:11 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே யோவ் ராமநாதன், நகராட்சியை குறை கூறுகிறாயே, கால்வாய்களை ஆக்கிரமித்து மண்ணை மூடி வைக்கும் பன்னாடைகளை (இழி பிறவிகளை) எண்ணத்துக்குடா இப்படி பண்ணினீங்கன்னு கேட்க தோணுதா உனக்கு?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X