மின்சார பிரச்னைக்கு தீர்வு: ஆகஸ்டில் ஆலோசனை Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மின்சார பிரச்னைக்கு தீர்வு:
ஆகஸ்டில் ஆலோசனை

தென் மாநிலங்களில் நிலவும் மின்சார பிரச்னைக்கு தீர்வு காண, ஐந்து மாநில மின் வாரிய அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டம், சென்னையில், அடுத்த மாதம் நடைபெறுகிறது.

மின்சார பிரச்னைக்கு தீர்வு: ஆகஸ்டில் ஆலோசனை

ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, ஒடிசா மாநிலங்களில் இருந்து, மத்திய அரசின், 'பவர் கிரிட்' நிறுவன வழித்தடம் வழியாக, தமிழகத்திற்கு, மின்சாரம் கொண்டு வரப்படுகிறது.
பிற மாநிலங்களுக்கு...இதேபோல, தமிழகத்தில் உள்ள நெய்வேலி அனல் மின் நிலையம், கூடங்குளம் அணு மின் நிலையம், வல்லுார்

அனல் மின் நிலையம், துாத்துக்குடி என்.டி.பி.எல்.,ஆகிய மத்திய மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரம், பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. மாநில எல்லைகளில் உள்ள மின் வழித்தடங்களில், அவ்வப்போது பழுது ஏற்படுவதால், மின்சாரம் கொண்டுசெல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.இந்த பிரச்னைக்கு தீர்வு காண, மத்திய மின் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், தென் மாநில மின்சார குழு சார்பில், சென்னையில், ஆகஸ்ட், 26, 27ல், சிறப்பு கூட்டம் நடக்கிறது.இதில், மத்திய மின் துறை அதிகாரிகள், தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கார்நாடகா, புதுச்சேரி மாநில மின் வாரிய அதிகாரிகள், என்.டி.பி.சி., பவர் கிரிட் அதிகாரிகள் என, 35 பேர் பங்கேற்க உள்ளனர்.
உதவிகள் : இந்த கூட்டத்தில், தென் மாநிலங்களில்நிலவும் மின்சார பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: பவர் கிரிட் துணை மின் நிலையங்களில், குறைந்த எண்ணிக்கையில், 'பவர் டிரான்ஸ்பார்மர்' உள்ளதால், பிற மாநிலங்களில் இருந்து,

Advertisement

தமிழகத்திற்கு அதிகளவில் மின்சாரம் கொண்டு வர முடியவில்லை. சென்னையில் நடக்கும் கூட்டத்தில், கூடுதலாக டிரான்ஸ்பார்மர் பொருத்துமாறு, பவர் கிரிட் அதிகாரிகளிடம் வலியுறுத்தப்படும். தற்போது, தமிழகத்தில் உள்ள தனியார் மின் நிலையங்கள், பிற மாநிலங்களுக்கு மின்சாரம் விற்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. எனவே, அந்த நிறுவனங்களுக்கு தேவையான உதவிகள் வழங்குவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayan - Zurich,சுவிட்சர்லாந்து
05-ஜூலை-201622:29:34 IST Report Abuse

Narayanதமிழக அரசின் ஒத்துழைப்பு இல்லாமலேயே பியூஷ் கோயல் அவர்கள் மிகப்பெரிய சாதனைகள் புரிந்து கொண்டுள்ளார். 67 வருடமாக இருட்டில் இருந்த பல ஆயிரம் கிராமங்களுக்கு இப்போதுதான் விடிவு காலம் வந்துள்ளது. வாழ்த்துக்கள்

Rate this:
Indian - Shelton,யூ.எஸ்.ஏ
05-ஜூலை-201617:09:48 IST Report Abuse

Indianதமிழகத்திற்கு தேவை இல்லை, தமிழகம் மின் மிகை மாநிலமாகி 5 வருடம் ஆகி விட்ட்து. மீதி மின்சாரத்தை தமிழகம் கடலில் கொட்டிக்கொண்டிருக்கிறது

Rate this:
Chandramoulli - Mumbai,இந்தியா
05-ஜூலை-201610:33:32 IST Report Abuse

Chandramoulliஇந்த மாதிரி நிலைமையை உருவாக்கியதே காங்கிரஸ் கட்சி. பவ்ர் கிரிட் மூலம் அதிக பலனை அடைந்தது கேரள, கர்நாடக, ஆந்திரா அரசுகள். தமிழகத்தில் அதிக அளவில் ட்ரான்ஸ்பார்மர் நிறுவாமல், தரம் குறைந்த வற்றை நிறுவி, திருட்டு தனமாக மின்சாரம் திருட உதவி செய்த அரசுகள் காங்கிரஸ் கட்சி. மோடி அவர்களின் ஆட்சியில் தவறுகள் களையப்பட்டு இப்போது தான் தமிழகத்திற்கு தீர்வு என்று ஒரு வர உள்ளது. நல்லது நடந்தால் சரி .

Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X