'பூம் பூம்' மாடுகள் ஊர்வலம்; நிதி முறைகேடு குறைதீர் கூட்டத்தில் குவிந்த மனுக்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'பூம் பூம்' மாடுகள் ஊர்வலம்; நிதி முறைகேடு குறைதீர் கூட்டத்தில் குவிந்த மனுக்கள்

Added : ஜூலை 05, 2016
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

மதுரை: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர் கூட்டத்தில் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் நேற்று மனுக்கள் அளித்தனர்.பேரையூர் தாலுகா உத்தப்புரம் தெற்குதெரு செல்லப்பாண்டியன் தலைமையில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் வந்தனர். போலீசார் தடுத்தனர். செல்லப்பாண்டி கூறியதாவது: உத்தப்புரத்தில் 2008ல் நடந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட 191 பேருக்கு தலா ரூ.60 ஆயிரம் நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனால் பயனாளி பட்டியலில் ஒருவர் பெயர் இருமுறை இடம் பெற்றுள்ளது உட்பட பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. இதில் சிலருக்கு தொடர்பு உள்ளது. இதுகுறித்து விசாரிக்க வேண்டும். அதுவரை நிலுவை நிவாரண நிதி பயனாளிகளுக்கு வழங்கக்கூடாது, என்றார். 'பூம் பூம்' மாடுகள் ஊர்வலம்: சக்கிமங்கலம் எல்.கே.பி., நகர் 'பூம் பூம்' மாட்டுக்கார இன மக்களுக்கு 'ஆதியன்' எனும் பழங்குடி இனச்சான்று (எஸ்.டி.,) வழங்ககோரி அப்பகுதி மக்கள் மாடுகளுடன் ஊர்வலமாக வந்து மனு அளித்தனர். பள்ளி மாணவர்களையும் அழைத்து வந்தனர்.பழங்குடி நாடோடிகள் கூட்டமைப்பு நிறுவனர் மகேஸ்வரி கூறுகையில், ''பல மாவட்டங்களில் எஸ்.டி., ஜாதி சான்று அளிக்கப்பட்டும் மதுரையில் இழுத்தடிக்கப்படுகிறது. 'எனக்கு முன்னாள் பணியாற்றிய அதிகாரி சான்றிதழ் வழங்க வில்லை,' என ஒவ்வொரு ஆர்.டி.ஓ.,க்களும் சான்றிதழ் வழங்க மறுக்கின்றனர். கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.கருணை கொலைக்காக மனு: இரு கைகளையும் இழந்த கோ.புதுார் கந்தசாமி,55, மனு அளிக்க வந்தார். அவர் கூறுகையில், "ரயில் விபத்தில் கைகளை இழந்தேன். மனைவி, மகள் பலகாரம் செய்து கொடுக்க, அதை விற்று வந்தேன். மகளுக்கு திருமணமானது. எனக்கு உடல்நிலை சரியில்லாததால், என்னை விட்டு குடும்பத்தினர் சென்று விட்டனர். தனிமைப்படுத்தப்பட்ட என்னை கருணை கொலை செய்து விடுங்கள்," என்றார்.மேலும், திருப்பரங்குன்றம் மாற்றுத்திறனாளிகள் அரசு வேலை கேட்டு மனு அளித்தது உட்பட நுாற்றுக்கும் மேற்பட்டோர் மனுக்கள் அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X