52 ஆயிரம் பேர் படிக்க விரும்பிய நூல்| Dinamalar

52 ஆயிரம் பேர் படிக்க விரும்பிய நூல்

Added : ஜூலை 05, 2016
Advertisement
52 ஆயிரம் பேர் படிக்க விரும்பிய நூல்

'லத்தீன் அமெரிக்காவின் வெட்டுண்ட ரத்த நாளங்கள்' என்ற நூலை சமீபத்தில் படித்தேன். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு, ப.கு.ராஜன் மொழிபெயர்த்துள்ளார். பாரதி புத்தகாலயம் வெளியிட்டு உள்ளது. இந்நூல், உருகுவே நாட்டின் பத்திரிகையாளர் எட்வர்டோ காலியானோ, ஆங்கிலத்தில் எழுதி, 1971ல் வெளியானது. பத்திரிகையாளரான அவர், லத்தீன் அமெரிக்க நாடுகளின் நிலை குறித்து அறிய, ஒவ்வொரு நாடாகச் சென்றார். அந்நாடுகளின் பொருளாதாரம், கலை, இலக்கியம், பண்பாடு, சமூகம் என, அனைத்தையும் திரட்டி நூல் ஆக்கி உள்ளார்.
லத்தீன் அமெரிக்க நாடுகள், வளர்ந்த நாடுகளாக அறியப்படுபவை. அவற்றின் பொருளாதார மற்றும் தொழில் வளர்ச்சிக்காக, அவற்றின் இயற்கை வளங்கள் எப்படி சூறையாடப்பட்டன; இப்போது அவற்றின் நிலை என்ன என்பது தான், நூலின் மிக முக்கிய அம்சம். வளர்ந்த நாடுகள் அனைத்தும், எட்ட முடியாத நிலையில் இருப்பவை என்ற பிம்பத்தை உடைத்து, வளர்ச்சிக்காக அங்கு ஏற்பட்ட சீரழிவுகளையும், பாதிப்புகளையும் நூலாசிரியர் வெளிப்படுத்துகிறார்.
இந்நூல் வெளிவந்த பின்பு தான், லத்தீன் அமெரிக்க நாடுகளின் உண்மை நிலை, உலகுக்கு தெரியவந்தது. 2009ம் ஆண்டு, அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு, வெனிசூலா அதிபர் இந்நூலை பரிசளித்தார். இந்த நிகழ்வு நடந்த சில மணித்துளிகளில், இந்நூலை படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தில், 52 ஆயிரம் பேர் முன்பதிவு செய்தனர்.
எனினும், 35 ஆண்டுகளுக்குப் பின், தற்போது தான் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. நம் நாட்டில் தற்போது நிலவி வரும், பொருளாதார, தொழில் வளர்ச்சி என்ற சூழலில், இந்நூல் மிக முக்கியத்துவம் பெறுகிறது. வளர்ந்த நாடுகளில், வளர்ச்சி என்ற பெயரால் ஏற்பட்ட பல்வேறு பாதிப்புகளை, இப்போது நாம் அறிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
ஒரு நாட்டுக்கு பொருளாதாரம், தொழில் எப்படி முக்கியமோ, அதைவிட பல மடங்கு முக்கியம், அந்நாட்டின் வளங்களை, தலைமுறைகள் கடந்தும் பாதுகாப்பது. இதற்கு, ஒரு ஒப்பீடு நமக்கு அவசியம். அதை, இந்நூல் நமக்கு அளிக்கிறது. இதோடு, லத்தீன் அமெரிக்க நாடுகளின், சமூக, பண்பாட்டு முறைகளையும் இந்நூல் தருகிறது. இந்திய அரசியல்வாதிகள், பொருளாதார வல்லுனர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.

பி.என்.எஸ்.பாண்டியன்
எழுத்தாளர்
பதிப்பக தொடர்புக்கு: 044 - 2433 2424

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை