சுவாதி கொலையில் எனக்கு தொடர்பு இல்லை: ராம்குமார் பல்டி| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சுவாதி கொலையில் எனக்கு தொடர்பு இல்லை: ராம்குமார் பல்டி

Updated : ஜூலை 05, 2016 | Added : ஜூலை 05, 2016 | கருத்துகள் (179)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ஜாமின், ராம்குமார், சுவாதி, மனு தாக்கல்

சென்னை: சுவாதி கொலைக்கும் தனக்கும் தொடர்பில்லை எனக்கூறியுள்ள ராம்குமார், ஜாமின் கேட்டு சென்னை முதன்மை அமர்வு கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளான்.

சென்னை சூளைமேட்டை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சுவாதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டான். அவன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றான். அவனை காப்பாற்றிய போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவன் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறான். அவன் பாதுகாப்பு கருதி கைதிகள் பிரிவுக்கு மாற்றப்படவில்லை எனவும், தீவிரி சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் டாக்டர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில், ராம்குமார் இன்று புழல் சிறை மருத்துவமனைக்கு மாற்றப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், ராம்குமார் ஜாமின் கேட்டு, மனு தாக்கல் செய்துள்ளான். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ராம்குமார் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சுவாதி கொலைக்கும், தனக்கும் துளியும் சம்பந்தமில்லை என்று ராம்குமார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராம்குமார் தனது மனுவில், சுவாதி கொலைக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. உண்மையான கற்றவாளியை காப்பாற்றவே என் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கொலை சம்பவத்திற்கு 2 நாளுக்கு முன் சுவாதியை யாரோ தாக்கியதாக கூறப்படுகிறது எனக்கூறியுள்ளார். விரைவில் இந்த மனு குறித்து விசாரணை நடைபெற உள்ளது.

ராம்குமார் வக்கீல் வக்காலத்து : ராம்குமார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ராம்குமார் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபடவில்லை. ராம்குமார் கழுத்தை அறுத்தது போலீசாருடன் வந்த நபர்கள் தான். எங்களுக்கு வந்த அறிவுரைப்படி ராம்குமாருக்கு ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட் போலீசாருக்கு 2 நாள் கெடு விதித்ததால் ராம்குமாரை போலீசார் அவசரமாக கைது செய்துள்ளது. சுவாதி கொலைக்கும் ராம்குமாருக்கும் தொடர்பில்லை. கொலைக்கு முன்னர் சுவாதியை யாரோ தாக்கியுள்ளனர். இது பற்றி தீவிரமாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.
டி.என்.ஏ., சோதனை: சுவாதியை கொலை செய்ததற்கான காரணங்கள் குறித்து ராம்குமார் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துவிட்ட நிலையில், அதற்கான ஆதாரங்களை திரட்டி கோர்ட்டில் சமர்பிக்க போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர். சுவாதியை கொலை செய்ய ராம்குமார் பயன்படுத்திய அரிவாளில் படிந்திருந்த ரத்தம் ஏற்கனவே சேகரிக்கப்பட்டுள்ளது. அதுபோல ராம்குமாரின் சட்டையில் படிந்திருந்த ரத்தத் துளிகளும் சேகரிக்கப்பட்டுள்ளது. அவை ஹைதராபாத்தில் உள்ள சோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சேகரிக்கப்பட்ட அந்த ரத்தத்தை கொண்டு மரபணு சோதனை செய்யப்படும். அதில் சுவாதியை கொலை செய்தது ராம்குமார் என அறிவியல் பூர்வமாக கண்டுபிடிக்கப்பட்டு, உறுதிபடுத்தப்படும். இந்த வழக்கில் டி.என்.ஏ. அறிக்கையானது முக்கியமானதாக கருதப்படுகிறது. இதுதவிர தடயவியல் சோதனை மற்றும் சாட்சிகளையும் போலீசார் திரட்டி வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (179)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vetri Vel - chennai,இந்தியா
12-ஜூலை-201601:13:23 IST Report Abuse
Vetri Vel ஒன்னும் புரியல.. பல விவரங்கள் வெளியில் வரலைன்னு மட்டும் தெரியுது... யாரை எதை தான் நம்புவதோ.... அப்போ அந்த பெண்ணின் பேஸ் புக் ல் உள்ள அனைத்து ஆண் நண்பர்களையும் கூட்டி ஊர்வலம் நடத்தி கண்டுபுடிக்கலாமே.... கொலை செய்தது ஆம்பளையா பொம்பளையா னும் இன்னும் தெரியல போல...
Rate this:
Share this comment
Cancel
DAYA - Tiruttani,இந்தியா
08-ஜூலை-201619:15:59 IST Report Abuse
DAYA இவன் உண்மையாகவே காதலிக்க நினைத்திருந்தால் தன் முகத்தை முதலில் கண்ணாடியில் பார்த்திருப்பான்.தன் தகுதி என்னவென்று தெரிந்திருக்கும். உடனே தன் ஊரில் உள்ள உமா ,தேவி, மீனா ,ராணி இவர்களில் ஒருவரைத்தான் தேர்ந்தெடுத்து இருப்பான். ஸ்வாதியை அல்ல. அப்போதும் உட்கார்ந்து யோசித்திருப்பான். தான் இன்னும் அரியர் முடிக்காததும் ,வேலையின்றி வருமானமின்றி இருக்கிறோம் என்ற உண்மை உரைத்திருக்கும். உடனே அதை தேடிப் போயிருப்பான். காதலை அல்ல. ஆனால் இவன் காமப்பசியில் அலைந்திருக்கிறான். அதுவும் தகுதிக்கு சற்றும் பொருந்தாத ஸ்வாதியோடு. உண்மை காதல் என்றால் முதல்முறை நட்புமுறையில்தான் பழகினேன் என்று காதலை ஸ்வாதி மறுத்தபோதே ஊர்போய் சேர்ந்திருப்பான். ஆனால் இவன் காமவெறியில் வெள்ளைத்தோல் மீதல்லவா ஆசை வைத்து திரிந்திருக்கிறான். இதற்காக மறுபடி மறுபடி போய் காதல் வசனம் பேசியிருக்கிறான். ஸ்வாதி திட்டிய உடன் வெறிகொண்டு கொடுரமாக வெட்டி சாய்த்துவிட்டான்.. எந்த உண்மை காதலும் துரத்தி துரத்தி போவதால் வருவதில்லை.. இயல்பான சந்திப்புகள் மூலம் தானே வருவதுதான் காதல். இத்தனை வருடம் தன் மனதில் இருந்த வெறியெல்லாம் அப்பாவி ஸ்வாதி மேல் காட்டிவிட்டான். எல்லாவற்றுக்கும் காரணம் யதார்த்தம் புரியாமல் இவன்கள் கற்பனை உலகில் கட்டும் மனக்கோட்டைகள்தான். ஸ்வாதி ,வினோதினி போன்ற ஏராளமான பெண்களின் மரணத்திற்கும் இதுவேதான் காரணம். இம்மாதிரி கற்பனை உலகில் எந்த நேரமும் சஞ்சரிப்பவர்கள் மிக ஆபத்தானவர்கள். குற்றங்கள் செய்து கொண்டே இருப்பார்கள்..இவர்களை கடுமையாக தண்டித்தே ஆகவேண்டும். அது மற்றவர்களுக்கு பாடமாக இருக்கவேண்டும் . அடே அரக்கனே ,எக்கச்சக்கமான மனிதாபிமானிகளின் தூக்கத்தையும் ,நிம்மதியையும் கெடுத்திருக்கிறாய். உன்னை நாங்கள் தண்டிக்காமல் விடமாட்டோம். குழந்தை மாதிரி சிரிக்கும் அப்பாவி பெண் ஸ்வாதி இப்போது சொர்க்கத்தில் இருக்கிறார். காலமெல்லாம் இருப்பார். ஆனால் உன் இறப்பிற்கு பின் உன் ஆவி காரிருள் சூழ்ந்த கொடிய நரகத்தில் காலமெல்லாம் உழன்று கொண்டிருக்கும். இனி நீ இந்த உலகில் இருக்கும் வரையிலும் நரகம்தான், இறந்தபின்னும் உனக்கு நரகம்தான். எதிர்க்க திராணியற்ற அப்பாவி பெண்ணிடமாடா உன் வீரத்தை காட்டுவாய்........
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
06-ஜூலை-201615:18:31 IST Report Abuse
meenakshisundaram கொலையாளி செய்தது சாஸ்த்திரங்களின் படி ப்ரம்மஹத்தி தோஷம் எனப்படும்.கண்டிப்பாக இதற்கான தண்டனை ராம்குமாருக்கும் அவனது குடும்பத்தாருக்கும் வாதாடும் வக்கீலுக்கும் உண்டு.இது பரிகாரமே செய்யமுடியாத குற்றம் ஆகும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X