'கெஜ்ரிவாலின் செயலர் தப்பு செஞ்சிருக்கலாம்!' : டில்லி 'மாஜி' முதல்வர் ஷீலா 'சேம்சைட் கோல்' Dinamalar
பதிவு செய்த நாள் :
'கெஜ்ரிவால் செயலர் தப்பு செஞ்சிருக்கலாம்!' :
டில்லி 'மாஜி' முதல்வர் ஷீலா 'சேம்சைட் கோல்'

புதுடில்லி: ''டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் முதன்மைச் செயலர் ராஜேந்திர குமார் கைது செய்யப்பட்டதற்கு, அரசியல் உள்நோக்கம் கிடையாது,'' என, காங்., கட்சியை சேர்ந்த, டில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் கூறியுள்ளார்.

'கெஜ்ரிவாலின் செயலர் தப்பு செஞ்சிருக்கலாம்!' : டில்லி 'மாஜி' முதல்வர் ஷீலா 'சேம்சைட் கோல்'

டில்லியில், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். அவருக்கு நெருங்கிய உதவியாளராகவும், முதன்மைச் செயலராகவும் செயல்பட்ட ராஜேந்திர குமார், சமீபத்தில், சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டார். இதற்கு, கடும் கண்டனம் தெரிவித்த அரவிந்த் கெஜ்ரிவால், 'பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு,பழிவாங்கும் போக்குடன்

நடக்கிறது' எனக் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், காங்., கட்சியை சேர்ந்தவரும் , டில்லி முன்னாள் முதல்வருமான ஷீலா தீட்சித் கூறுகையில், ''முதன்மைச் செயலர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில்,அரசியல் உள் நோக்கம் எதுவும் கிடையாது. ஊழல் குறித்த தகவல் கிடைத்ததாலேயே, சி.பி.ஐ., அவர் அலுவலகத்தில் சோதனை நடத்தியிருக்கக் கூடும்,'' என்றார்.ஆனால், ஷீலா தீட்சித் கருத்து, 'சேம்சைடு கோல்' அடிப்பதாக உள்ளது என, அவரது விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியுள்ளதாவது: கடந்த, 2007 முதல், 2014க்கு இடைப்பட்ட காலத்தில், செய்த ஊழல்களுக்காகவே ராஜேந்திர குமாரை, சி.பி.ஐ., கைது செய்துள்ளது. ஊழல் நடந்த காலத்தில், ஷீலா தீட்சித் முதல்வராக இருந்துள்ளார். எனவே, ஊழல் நடந்திருக்க வாய்ப்புள்ள தாக ஷீலா தீட்சித் கூறுவது, அவர் ஆட்சிக் காலத்தில் ஊழல் நடந்திருப்பதை ஒப்புக் கொள்வது போலாகும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதற்கு பதில் அளித்த, ஷீலா தீட்சித்தின் ஆதரவாளர் கள், 'ராஜேந்திர குமார் பற்றிய புகார்கள் வந்த காரணத்தாலேயே, அவரை, வேறு பதவிகளுக்கு, ஷீலா தீட்சித் மாற்றினார்.'என்றனர்.

Advertisement

நடந்தது என்ன? :

Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
06-ஜூலை-201616:05:42 IST Report Abuse

இந்தியன் kumarஊழல் பண்ணியவர்கள் மக்களிடம் தப்பிக்கலாம் ,இறைவன் பார்வையில் இருந்து தப்பிக்க முடியாது , அதற்கான பலனை அனுபவித்தே ஆவார்கள்.

Rate this:
Pasupathi Subbian - trichi,இந்தியா
06-ஜூலை-201612:44:08 IST Report Abuse

Pasupathi Subbianகேஜ்ரிவாலுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தை மீறுகிறார். இத்தனை நாளாக இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக உறுதி கொடுத்ததும், அதற்கு பரிகாரமாக அவருக்கு டெல்லி ஆட்சிக்கு ஆதரவு கொடுத்ததும் இவருக்கு மறந்து விட்டதா? கெஜ்ரிவால் வசம் ஆதாரம் நிறைய உள்ளது என்பதை இவர் நினைவு வைத்துக் கொள்ள வேண்டும்.

Rate this:
Srinivas - India,இந்தியா
06-ஜூலை-201611:37:51 IST Report Abuse

Srinivasமோடி அவர்கள் இதை சொல்லியிருந்தா,கெஜ்ரிவால் இந்நேரம் வாளு வாளு ன்னு கத்தி ஊரைக்கூட்டி நாடகம் போட்டு அழுது புரண்டு மாய்மாலம் பண்ணியிருப்பாரே

Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X