ஆந்திராவில் கோவில்கள் இடிப்பு : தெலுங்கு தேசம் - பா.ஜ., மோதல்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சாலை விரிவாக்கப் பணிகளுக்காக, விஜயவாடாவில், ஐந்து கோவில்கள் இடிக்கப்பட்ட விவகாரத்தில், ஆந்திராவில் ஆளும் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் மற்றும் அதன் கூட்டணியில் உள்ள, பா.ஜ., இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் - பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ளது. கிருஷ்ணா நதியில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும், நதி திருவிழாவுக்காக, விஜயவாடாவில் சாலை விரிவாக்கப் பணிகள் நடக்கின்றன. அப்போது, ஒரு பகுதியில் இருந்த ஐந்து கோவில்கள் இடித்துதள்ளப்பட்டன. அதை தொடர்ந்து, பா.ஜ., உள்ளூர் தலைவர்கள், அரசுக்கு எதிராக கடும் விமர்சனம் செய்து வருகின்றனர். இதற்கு, தெலுங்கு தேசம் கட்சியினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்து அறநிலையத் துறை அமைச்சராக உள்ள மாணிக்யாலா ராவ், பா.ஜ.,வைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கிடையே, இந்த பிரச்னை குறித்து விவாதிக்க, மூன்று பா.ஜ., அமைச்சர்கள், இரண்டு தெலுங்கு தேசம் அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது. ''இடிக்கப்பட்ட கோவில்களுக்கு பதிலாக, வேறு இடத்தில் புதிதாக கோவில் கட்டித் தரப்படும்,'' என, முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்து உள்ளார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
07-ஜூலை-201613:43:56 IST Report Abuse
Pasupathi Subbian தற்பொழுது கோவில்களை இடிக்காமல் அப்படியே வேறு இடத்துக்கு மாற்றும் பழக்கம் உள்ளதே. அதை பற்றி சந்திரபாபு நாயுடு ஏன் சிந்திக்கவில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்