சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன தேரோட்டம்| Dinamalar

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன தேரோட்டம்

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன தேரோட்டம்

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சனம் உற்சவத்தையொட்டி, நேற்று நடந்த தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்து, சுவாமி தரிசனம் செய்தனர். கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோவிலில், ஆனி திருமஞ்சன உற்சவம், 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்று, ஒன்பதாம் நாள் விழாவில், தேரோட்டம் நடந்தது. அதிகாலை சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜ பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.காலை, 7:00 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 9:00 மணிக்கு, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், 'தில்லை அம்பலத்தானே... பொன்னம்பலத்தானே' என கோஷத்துடன், தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாலை, 4:00 மணிக்கு, பருவதராஜ குரு சமூகத்தினரின் வரவேற்பு சிறப்பு பூஜைக்கு பின், தேர் கீழ சன்னிதியை அடைந்தது. இன்று, 10ம் தேதி அதிகாலை மகா அபிஷேகம் நடக்கிறது.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.