'டிமிக்கி' தந்த ஜாகிர் நாயக்: இந்தியா வராததால் பரபரப்பு Dinamalar
பதிவு செய்த நாள் :
'டிமிக்கி' தந்த ஜாகிர் நாயக்:
இந்தியா வராததால் பரபரப்பு

மும்பை,: 'பாகிஸ்தானில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளான தாவூத் இப்ராஹிம், டைகர் மேமன் ஆகியோரை பிடிப்பதைவிட, இந்தியாவைச் சேர்ந்த, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் ஜாகிர் நாயக்கை முதலில் பிடிக்க வேண்டும்' என, மத்திய அரசை சிவசேனா வலியுறுத்திஉள்ளது.

'டிமிக்கி' தந்த ஜாகிர் நாயக்: இந்தியா வராததால் பரபரப்பு

மத்தியிலும், மஹாராஷ்டிராவிலும், பா.ஜ., தலைமையிலான கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ளது சிவசேனா கட்சி. கட்சியின் பத்திரிகையான 'சாம்னா'வில் நேற்று ெவளியான தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:பாகிஸ்தானில் உள்ள தாவூத்தை பிடிப்போம், டைகர் மேமனை பிடிப்போம் என்று சொல்வதை

தற்காலிகமாக நிறுத்துங்கள். வங்கதேசத்தில், இந்திய பெண் உட்பட, 22 பேரை கொன்ற பயங்கரவாதி களை துாண்டிய, மத போதகர் ஜாகிர் நாயக்கை முதலில் பிடிக்க வேண்டும்.
முஸ்லிம் மக்களை பயங்கரவாதத்தில் ஈடுபடுவதற்குதுாண்டும் வகையில் பேசும் ஜாகிர் நாயக்கின், 'பீஸ் டிவி'க்கு உலகெங்கும் தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐதராபாத்தில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட, ஐ.எஸ்., பயங்கரவாதிகள், ஜாகிர் நாயக் நடத்திய, 'அமைதி முகாமில்' பங்கேற்றதாகவும் கூறியுள்ளனர்.
ெவளிநாட்டில் இருந்து கறுப்புப் பணத்தை மீட்பது; தாவூத், மேமனை கைது செய்வது போன்ற விஷயங்களை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி, ஜாகிரை கைது செய்வதில் அக்கறை காட்ட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.


'டிமிக்கி' தந்த ஜாகிர் நாயக்: இந்தியா வராததால் பரபரப்பு

அண்டை நாடான, வங்கதேச தலைநகர் தாகாவில், கடந்த வாரம், பயங்கரவாதிகள் நடத்திய கொலைவெறித் தாக்குதலில், 22 பேர்

Advertisement

பலியாயினர். இந்த சம்பவத்தில் தொடர்புள்ள இரு பயங்கரவாதிகள், மும்பையை சேர்ந்த பிரபல மதபோதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சால் கவரப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து, ஜாகிர் நாயக் நடத்தி வரும் சர்ச்சைக்குரிய, 'பீஸ் டிவி' சேனலுக்கு, வங்கதேச அரசு தடை விதித்தது. இதற்கிடையில், சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ள ஜாகிர் நாயக், நேற்று, மும்பை திரும்புவதாக திட்டமிட்டிருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் திட்டத்தை மாற்றிய அவர், இந்தியா திரும்பும் பயணத்தை ரத்து செய்துள்ளார்.

Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (87)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஜூலை-201610:54:22 IST Report Abuse

Yaro Oruvanஎல்லா இஸ்லாமியர்களும் தீவிரவாதிகள் என்று யாரும் சொல்ல வில்லை.. ஆனால் உலகின் எல்லா (90% மேல்) தீவிரவாதங்களும் இஸ்லாம் என்ற போர்வையின் கீழ் நடைபெறுகிறது என்பது நிதர்சனம்.. உடனே நீங்கள் அப்படி செய்ப்பவர்கள் இஸ்லாமியர் இல்லை அது இஸ்லாத்தில் சொல்லப்படவில்லை என சப்பைக்கட்டு கட்டலாம்.. யாரோ சிலர் செய்யும் தவறுக்கு எல்லா இஸ்லாமியரும் எப்படி பொறுப்பேற்க முடியும் என்று கேட்கிறீர்கள்.. உங்களுக்கு ஒரு கேள்வி - ஒருவன் கடவுளை நிந்தித்தால் அந்த கடவுள் உண்மையிலேயே சக்தி உடையவராக இருந்தால் அவனை தண்டிக்க மாட்டாரா?? எவனோ ஒருவன் உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒரு கார்ட்டூன் போட்டான் என்பதற்காக நீங்கள் கும்பலாக போட்ட ஆட்டம் இருக்கிறதே.. அப்பப்பா?? இந்த மாதிரி கும்பலாக கடவுளை காப்பாத்த கும்மி அடிக்குறத என்னென்னு சொல்ல?? கும்பல் கும்பலா ஓட்டு போடுறத என்னென்னு சொல்ல?? உண்மையில் எனக்கு நிறைய இஸ்லாமிய நண்பர்கள் உண்டு.. தனிப்பட்ட முறையில் அவர்கள் பழகுவதற்கு இனிமையானவர்.. உண்மையில் எனக்கு விளங்கவில்லை.. எப்படி? தவறு மசூதிகளில் மதரஸாக்களும்தான்.. தவறான போதனைகள் / தவறான உணர்சசி ஏற்படுத்துதல் / ஜாகிர் போன்ற நன்றாக நயவஞ்சகமாக பேசும் குள்ள நரிகள் / இவைகள்தான் அவர்களை திசை திருப்பி கும்பல் கும்பலாக செயல்பட வைக்கின்றது.. கடவுள் அவரை பாத்துக்கொள்வார்.. நீங்கள் முதலில் உங்கள் பொழப்ப பாருங்க..

Rate this:
Anbu - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஜூலை-201619:26:03 IST Report Abuse

Anbuநண்பரே எத்தனையோ குண்டு வெடிப்புகள் இஸ்லாமியர்களின் பெயர் சொல்லி நடத்தப்படுவது உங்களுக்கு தெரியுமா? எங்கயாவது குண்டு வெடிச்சா ஏதாச்சும் ஒரு இஸ்லாமிய இயக்கத்தின் பெயர் சொல்லி முதல் பக்கத்தில் போடும் பத்திரிகைகள் உண்மை தெரிய வந்ததும் அதை பத்தி வாய் திறக்காதது என்? ISIS இயக்கத்திலே மூளை யார் என்று தெரியுமா உங்களுக்கு?? உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் பீர் bottle இல் கடவுள் லக்ஷ்மி படம் போடத்துக்காக நீங்கள் போராட வில்லையா? இஸ்லாம் ஒரு போதும் தீவிர வாதத்தை ஆதரிப்பது இல்லை..தீவிர வாதம் பண்ணுவான்...

Rate this:
arulmozhi - chennai,இந்தியா
14-ஜூலை-201606:50:15 IST Report Abuse

arulmozhiஇவர் சொல்வதை கேட்க இவ்வளவு கூட்டமா... இவரை யாரும் இன்னும் நேருக்கு நேர் டீவி யில் மடக்க வில்லையா...அதிசயமாக உள்ளது... இவரிடம் ஒரே கேள்வி ''எல்லாம் வல்ல இறைவனுக்கு எதற்கு மனித உருவில் ஒரு தூதர்?" இந்த கேள்விக்கு சப்பை கட்டு காட்டாமல் இவரால் மழுப்பாமல் பதில் கூற முடியுமா?

Rate this:
Anbu - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
14-ஜூலை-201615:17:50 IST Report Abuse

Anbuஇவரோட பேச்ச நீங்க கேட்டது இல்லையா?? கடவுள் தூதராதான் அனுப்பினர். இன்னொரு கடவுளை இல்லை..அவரோட போதனைகளை உலகுக்கு எடுத்துரைக்க தூதரை கடவுள் அனுப்பினார்..இவரு விவாதம் பண்ணாத ஆடைகள் இல்லை..ஸ்ரீ ரவி ஷங்கரிடம் கூட இவர் விவாதம் செய்துள்ளார்...சிலருக்கு நினைப்பு பூனை கண்ணை மூடினாள் உலகம் இருட்டு என்று..இவரோட பேச்ச முழுசா கெடுத்து இங்க கமெண்ட் பண்ணுங்க பிலீஸ்.....

Rate this:
arulmozhi - chennai,இந்தியா
14-ஜூலை-201619:12:06 IST Report Abuse

arulmozhiநான் ஸ்ரீ ஸ்ரீ யுடன் ஆன விவாதத்தை பார்த்துள்ளேன் .... ஸ்ரீ ஸ்ரீ யின் கொள்கை எல்லா மதத்திலும் நல்லது உள்ளது என்பதே .... மற்றவருடைய மதத்தில் உள்ள குறைகளை சுட்டி கட்டுவது என்பது அவருடைய கொள்கை களுக்கு புறம்பானது .... தூதர் இன்னொரு கடவுள் இல்லை... தூதர் கடவுளின் மைந்தரும் இல்லை என்பதை அறிவேன் ... "எல்லாம் வல்ல" இறைவனுக்கு அவருடைய போதனைகளை நம்முடைய சாதாரண இயல்பாக படைப்பது அவ்வளவு கடினமான வேலையே இல்லையே ... உலகத்தில் உள்ள நல்ல விஷயங்கள் எல்லாம் ஒரே ஒரு "புத்தகத்தினால்தான்" தோன்றியதா என்பதை தீவிரமாக யோசித்து பாருங்கள்......

Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
13-ஜூலை-201611:56:22 IST Report Abuse

Malick Rajaநியாயம் நிலை நிறுத்தப்படவேண்டும்.. விசாரணை செய்து தவறிருப்பின் தண்டனை கொடுப்பதில் தவறில்லை... மாறாக விசாரிக்கும் முன் குற்றவாளி என்று கூறுபவன் முட்டாள்.. ஆகவே விசாரணை செய்து தண்டனை கொடுக்கலாம்.. நேற்றைய தினம் அனைத்து தோலை காட்சிகளிலும் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது அதாவது நான்கு இளைஞர்களை கட்டிவைத்து பின்புறத்தில் கட்டையை கொண்டு அடிக்கிறார்கள்.. அதை அனைவரும் வேடிக்கை பார்க்கிறார்கள் ..இது நடந்தது குஜராத்திலாம் அதுவும் பசுமாட்டின் தோலை கடத்திய சந்தேகத்தின் பெயரிலாம்.. இந்த காட்சியை பார்க்கும் மனிதர்கள் மனதில் என்ன தோன்றும்.. ? ஆக மிருகங்ககை விட கேவலமானவர்கள் இருக்கிறோம் என்பதை அடிப்பவர்கள் நிரூபணமாகி இருக்கிறார்களோ? விளங்குமா?

Rate this:
Paran Nathan - Edmonton,கனடா
13-ஜூலை-201601:01:54 IST Report Abuse

Paran Nathanநான் இவரின் வீடியோ பார்த்திருக்கின்றேன். இந்து மத வேத, இதிகாசங்களை படித்து இருக்கின்றார். அதிலிருந்து இவர் கூறும் பெரிய குறை என்னவென்றால், கடவுள் மனிதனாக பிறந்தது. கடவுள் மனிதனாக பிறக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது இவரின் வாதம். கடவுளை மிக உயரத்தில் வைத்து வணங்குவது இஸ்லாம். ஆனல் இறைவனை அம்மாவாக, அப்பாவாக, குழைந்தையாக, நண்பனாக, சேவகனாக இன்னும் மேலாக சகல உயிரினங்களாக பார்ப்பது இந்து மதம். இன்று பல இஸ்லாமிய நண்பர்கள் இந்து மதத்தை குறைகூறுவது சாதாரணமாகிவிட்டது. என்னுடன் வேலை பார்க்கும் இஸ்லாமிய நண்பர் ஏனைய வேலை நண்பர்கள் முன்பு சிவலிங்கத்திற்கு தவறான விளக்கத்தை ஒரு வித தேவையும் இன்றி கூறினார். நான் அவற்றிற்கு, ஒன்றை எப்படிப்பார்ப்பது என்பது அவரவரின் அறிவுக்கேற்றது. மெக்காவிலுள்ள கறுப்பு பெட்டியின் உள்ளே சிவலிங்கம் இருப்பதாக கூறுகின்றனரே? உண்மையா என்றேன், ஏனைய வெள்ளைக்கார நண்பர்கள் சிரித்து விட்டனர். அதன் பின்பு அவர் மதம் பற்றி என்னுடன் பேசுவதில்லை. இன்னுமோர் இஸ்லாமிய நண்பர் விநாயகர் குஜராத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டவர் என்றார். நான் அவரிற்கு 7ம் நூற்றாண்டில் மாமல்லர் வாதாபியில் போர்முடிந்த பின்னர் தளபதியாக இருந்த பரஞ்சோதியால் கொண்டுவரப்பட்டவர் வாதாபி கணபதி. ஆனால் அதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு விநாயகர் வழிபாடு தமிழ்நாட்டில் இருந்திருக்கின்றது. 3000 ஆண்டுகளிற்கு முன்பு வாழ்ந்த திருமூலர் விநாயகரை பாடியிருக்கின்றார் என்றேன். இப்படியாக பல தவறான தகவல்கள் இஸ்லாமிய நண்பர்களிற்கு பரப்பப்படுகின்றது. அப்பர் காலம் தொடக்கம் அருணகிரிநாதர் வரை இதுபோன்ற எமது மதத்தை வம்புக்கு இழுத்தவர்கள் பலர். இன்று அவர்கள் எங்கு இருக்கின்றார்கள்? இது போன்றவர்களால் இவரின் மார்க்கத்திகு இழுக்கு. இது வேதனையானது. சில வருடங்கள் முன்பாக இந்த நிலை இல்லை.

Rate this:
உண்மை நண்பா - riyadh,சவுதி அரேபியா
12-ஜூலை-201623:39:03 IST Report Abuse

உண்மை நண்பாஜெயராமன்.1. முஸ்லிம் ஆண்களுக்கு என்னென்ன உரிமைகள் உண்டோ அதே உரிமைகள் முஸ்லிம் பெண்களுக்கும் எண்டு. இதில் மணவிலக்குப் பெறும் உரிமையும் அடங்கும். 2. அவளுக்குச் சொத்துரிமையும் வாரிசுரிமையும் உண்டு. அவள் தனக்கென்று ஒரு வியாபாரத்தை நடத்தலாம். 3. முஸ்லிம்களில் தனக்குப்பிடித்த எந்த ஆணையும் அவள் திருமணம் செய்து கொள்ளலாம். அவளுடைய பெற்றோர்கள் அவளுக்கு ஒரு கணவனைத் தேர்ந்தெடுத்தால் அவளுடைய இசைவைப் பெற்றேயாக வேண்டும். 4. பெண்ளுக்குத்தான் ஆண் பணம் தந்து திருமணம் செய்து கொள்ள வேண்டுமேயல்லாமல் ஆணுக்கு பெண் அள்ளித்தர தேவை இல்லை. 5. முஸ்லிம் விதவைப் பெண்கள் மறுமணம் செய்து கொள்ளலாம். அவளது மறுமணத்திற்கு ஏற்பாடு செய்திட வேண்டியது சமுதாயத்தின் பொறுப்பு. முஸ்லிம்கள் தங்கள் தாய்க்கு மிகவும் உயர்ந்த கண்ணியத்தை வழங்குகின்றார்கள். சில முஸ்லிம்கள் இதற்கு நேர்மாறாக நடக்கின்றார்கள் என்றால் அவர்கள் தங்கள் இறைவனுக்கு மாறு செய்கின்றார்கள் என்றே பொருள். உண்மை நிலை இப்படி இருக்க, முஸ்லிம் பெண்களைப் பற்றிய இந்து ஊடகங்களின் அளவுக்கதிகமான ஊதல்களுக்கு காரணம் இந்து மதத்தில் உள்ள பெண்ணடிமைத்தனத்தை மறைப்பதற்காகத்தான் இருக்கும்.

Rate this:
prasad - Coimbatore  ( Posted via: Dinamalar Android App )
12-ஜூலை-201623:29:17 IST Report Abuse

prasaddr ஜாகிர் நாயக் அவர்கள் தீவிரவாதி அல்ல. அவர் இஸ்லாமிய மத விற்பனை பிரதிநிதி.ஆமாம் அவர் தனது மதத்தை ஏற்க வைப்பதற்காக மற்றவர்கள் மதத்தவர்களின் கற்றறிந்து அந்த மதத்தை காட்டிலும் தனது மதமான இஸ்லாமே சிறந்தது என மூளை சலவை செய்வதில் வல்லவர்.அவரது பேச்சுகளில் இந்துக்களின் ரிக் யஜூர் வேத உபநிடதங்களையும் பைபிள் வாசகங்களையும் மேற்கோள் காட்டி பேசுவதை இவரது YouTube video வில் காணலாம்.

Rate this:
shantharam - bangalore  ( Posted via: Dinamalar Android App )
12-ஜூலை-201623:27:59 IST Report Abuse

shantharamThalavar, சாத்வி பிரச்சி, மோகன் பகவத், உதவ் தாக்ரே போன்றோர் யாரையும் குண்டு வைத்து, கழுத்தை அறுத்து கொல்லவில்லை.

Rate this:
thalaivan - channai,இந்தியா
13-ஜூலை-201619:57:40 IST Report Abuse

thalaivanஆமாம் அப்படி என்றால் சாஹிர் நாயக் என்ன ஆயிரம் தலைகளை அறுத்து கொன்று விட்டாரா இல்லை ரத்த யாத்திரை நடத்தினார்..இல்லை சாம்னா என்று பத்திரிக்கையில் விஷம் கக்கினார்.....

Rate this:
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
12-ஜூலை-201623:02:29 IST Report Abuse

மலரின் மகள்இவர் அதிகம் பாப்புலர் ஆனவர்.முஸ்லிம் தேசத்தினரிடையே. அனைத்து முஸ்லிம்களுக்கும் இவர் சொல்வதுதான் உண்மை என்று கொள்வர். அவர்கள் மற்ற மதங்களை பற்றி அறிந்து கொள்வதற்கு வாய்ப்பே இல்லை. பள்ளியில் முழுவதும் அவர்கள் மதம் சம்பந்தப் பட்ட போதனைகள் தான். ஆகையால் இவர் மற்ற மதத்தினரை குறித்து அவற்றில் சொல்லப் பட்ட அனைத்து நல்ல கருத்துகளும் அவர்களின் தேவன் அனைவரும் நபி ஸல் ஒருவரையே சாரும் என்று வாதிடுபவர். கூட்டம் மிகப் பிரமாண்டமாக இருக்கும். ஒளி ஒலி அமைப்புகள் 3D ரெகார்டிங்குகள் என்று அசத்தலாக இருக்கும். இவர் பேசுவதை அப்படியே சொக்கிக் கேட்டுக் கொண்டிருப்பர். உண்மைக்கு புறம்பாகப் பேசுவது மற்றவர்களுக்குத் தெரியும். அவருக்கும் தெரியும். ஆனால் கேட்போருக்கு தெரியவே தெரியாது. ஒரு மயக்க நிலைதான் அவர்களுக்கு.மதம் எவ்வளவு வலியது என்பதை அறிந்து கொள்ளலாம். இவரின் போதனைகள் தவறு என்று அவர்களின் உலகிற்கு சொல்ல வேணும் என்றால் ஷாருக் கான் சல்மான் கான் மற்றும் அமீர்க்ஹான் கலால் அவர்களின் திரைப்படங்கள் மூலம் தான் முடியும். இவர்களின் திரைப்படங்கள் அரபி மொழியில் sub டைட்டில் உடன் அரபு தேசத்து தொலைக்காட்சிகளில் ஒளி பரப்பாகின்றன. இந்தியாவை அவர்கள் பார்ப்பது வியப்பது இவர்கள் மூலம் தான்.சென்னை எஸ்க்பிரஸ் படத்தை நான் பார்க்கவில்லை. என்னிடம் பேசும் அரபு தேசத்தவர்கள் இந்தியர் என்றவுடன் அந்த திரைப்படத்தைப் பற்றித்தான் சிலாகிப்பார்கள். இந்த ஜாகிர் நாய்க் ஷியா முஸ்லிமா அல்லாது சுன்னி முஸ்லிமா. ஷியா முஸ்லிம் என்றால் சவுதியில் இவரால் தாக்கு பிடிக்க முடியாது. இவரின் பிரார்த்தனையில் தெரிந்து விடும் இவர் முஸ்லிம் அல்ல என்று. ஆம் சுன்னி முஸ்லிம்கள் மட்டும் தான் உண்மையான முஸ்லிம்கள் மற்றவர்கள் முஸ்லிம்களே அல்ல என்பதே சவுதியர்களின் சுன்னி முஸ்லிம்களின் கொள்கை நம்பிக்கை. அல்லாஹ்வை தவிர யாரும் வழிபடுவதற்கு தகுதியானவர்கள் இல்லை என்பதே அந்த தேசத்தின் அனைத்து சாலைகளிலும் எழுதப் பட்டிருக்கும் தெய்வீக வாசகம்.குரானில் சொல்லப் பட்டிருப்பதும் அதுவே.

Rate this:
ரமா, VA,Usa - chidambaram,இந்தியா
12-ஜூலை-201622:50:10 IST Report Abuse

ரமா, VA,Usaஇவனது tv யில் இந்திய வரைபடத்தில் காஸ்மீர் இல்லை. இதிலிருந்தே இவனது தகுதி தெரிகிறது. ://www.peacetv.tv / அல்லது :/internetindu.org /2016/07/10/shocking-zakir-naiks-peace-tv-web-site-not-showing-kashmir-as-part-of-india-donated-to-pakistan/ கேரளாவில் காணாமல் போன இளைஞர்கள் இவனை சந்தித்து உள்ளார்கள்.

Rate this:
உண்மை நண்பா - riyadh,சவுதி அரேபியா
12-ஜூலை-201620:56:19 IST Report Abuse

உண்மை நண்பாமும்பையில் செல்போன் கடைக்காரரை மாமூல் கேட்டு அரிவாளுடன் வெட்ட வந்த ரவுடியை காப்பாற்றிய முஸ்லிம் பெரியவர் தாடியும் தொப்பியும் வைத்திருந்ததால் தீவிரவாதி, வெட்ட வந்த பயங்கரவாதி சேனை அமைப்பின் பிரதிநிதி என்பதால் தேசியவாதி பசித்து வந்த பசுமாட்டுக்கு பண்டம் கொடுத்தவர் முஸ்லிம் என்பதால் தீவிரவாதி, படுத்துக் கிடந்த பசுமாட்டை பூட்ஸ் காலால் எட்டி உதைத்தவன் சேனையைச் சேர்ந்தவன் என்பதால் தேசியவாதி உள்நாட்டு உணவுக்காக மாட்டை அறுத்தவன் தீவிரவாதி, வெளிநாட்டு உணவுக்காக மாடுகளை மொத்தமாக வெட்டியவன் தேசியவாதி மழைவெள்ளத்தில் மக்களைக் காக்க களமிறங்கிப் போராடி தன் உயிரை நீத்தவன் தீவிரவாதி, ஏசி அறையில் ஓசி நெட்டில் பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டவன் தேசியவாதி குப்பையை அள்ளியவன் தீவிரவாதி, குப்பையை அள்ளுவது போல போட்டோவுக்கு போஸ் கொடுத்தவன் தேசியவாதி மதச் சடங்கிற்காக புனிதப் பயணம் மெக்கா சென்றாலும் தன் நாட்டு தேசியக் கொடியை தூக்கிப் பிடித்து தேசப்பற்றைக் காட்டியவன் தீவிரவாதி, தேசியக் கொடியை விரித்து வைத்து சீட்டு விளையாடியவன், தேசியக் கொடியால் சளி சிந்தியவன், தேசியக் கொடியை வைத்து ஷூவைத் துடைத்தவன் தேசியவாதி உயிர்காக்கும் இரத்ததானத்தில் முதலிடத்தில் இருப்பவன் தீவிரவாதி, ஆனால் சொந்த மக்களின் ரத்தத்தை ஓட்டி கலவரத்தை தூண்ட நினைப்பவன் தேசியவாதி நல்லிணக்கம் பேண எந்நேரமும் உதவி செய்ய 24 மணிநேர தீயணைப்பு மீட்புத் துறை போல தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவன் தீவிரவாதி, ஆனால் 24 மணிநேரமும் கலவரத்தை தூண்ட காத்திருப்பவன் தேசியவாதி. இஸ்லாமியர்களும் ஹிந்துக்களும் ஒருதாய் மக்கள் என்று சொல்லும் ஜாஹீர் நாயக் தீவிரவாதி, பாரத் மாதாகீ ஜே சொல்லாவிட்டால் தலையை வெட்டுவேன் என்று பிரகடனம் செய்த பாபா ராம்தேவ் தேசியவாதி. ரத்தக் கலர் காவி தேசியவாதம், பசுமை அமைதி பச்சை தீவிரவாதம் தேசியவாதியாக வலம் வரும் நாட்டில் ஜாஹீர் நாயக் மட்டுமல்ல தாடியும் தொப்பியும் வைத்த அனைத்து முஸ்லிம்களும் தீவிரவாதிகளே இதுதான் இந்தியா சொல்லும் தேசியவாதம்

Rate this:
Faithooran - Thondamaan Puthukkottai,இந்தியா
12-ஜூலை-201622:30:40 IST Report Abuse

Faithooran தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் ...பின்னர் தர்மமே வெல்லும்....

Rate this:
குரங்கு குப்பன் - chennai,இந்தியா
13-ஜூலை-201606:19:04 IST Report Abuse

குரங்கு குப்பன் @Mr Sathik - Riyadh,சவுதி அரேபியா - comparison சூப்பர், தீவிரவாதம் வளராமல் இருக்க தீவிரவாதிகளுக்கு உபசதேசம் கூறுங்கள்...

Rate this:
மேலும் 71 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement