மல்லையாவுக்கு எதிராக கோர்ட் அவமதிப்பு வழக்கு| Dinamalar

மல்லையாவுக்கு எதிராக கோர்ட் அவமதிப்பு வழக்கு

Updated : ஜூலை 15, 2016 | Added : ஜூலை 15, 2016 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
மல்லையாவுக்கு எதிராக கோர்ட் அவமதிப்பு வழக்கு

புதுடில்லி: சொத்து விபரங்களை தெரிவிக்காத, தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில், வங்கிகள் கூட்டமைப்பு, கோர்ட் அவமதிப்பு மனு தாக்கல் செய்துள்ளது.

தொழிலதிபர் விஜய் மல்லையா, 'ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா' உள்ளிட்ட வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கி, திருப்பிச் செலுத்தாமல், பிரிட்டனின் லண்டன் நகருக்கு தப்பிச் சென்றார்; தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள அவரது பாஸ்போர்ட்டும் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.மல்லையாவுக்கு எதிராக, இந்தியாவில் பல்வேறு கோர்ட்டுகளில் வழக்குகள் நடக்கின்றன. அவரது சொத்துக்களை ஏலம் விடும் நடவடிக்கையை, கடன் வழங்கிய வங்கிகள் மேற்கொண்டு வருகின்றன. ஆனால், சொத்து தொடர்பான தகவல்களை தெரிவிக்க அவர் மறுத்து வருகிறார்.
இதுதொடர்பான வழக்கில், மல்லையா மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்து விபரங்களை, வங்கிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என, ஏப்ரல் மாதம் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இருப்பினும், மல்லையா தரப்பினர், அதனை தெரிவிக்கவில்லை. இதனையடுத்து, மல்லையாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ள வங்கிகள் கூட்டமைப்பு, நேற்று, சுப்ரீம் கோர்ட்டில், மனுத்தாக்கல் செய்துள்ளது. அதில், 'கோர்ட் உத்தரவை மீறி செயல்படும், விஜய் மல்லையா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோரியுள்ளது. இந்த வழக்கு விசாரணை, 18ம் தேதி நடைபெறுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
15-ஜூலை-201617:20:09 IST Report Abuse
r.sundaram வங்கிகளின் வக்கீல்களின் பணி இனிமேல் தான் இருக்கிறது. அவரது சொத்துக்கள் என்ன, என்ன எங்கெங்கு இருக்கிறது,முதலிய அடிப்படை விவரங்களை இவர்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும். வங்கிகளிடமிருந்து எல்லா விபரங்களையும் பெற்றுக்கொண்டு நீதிமன்றத்தில் வாதாடினால் மட்டும் போதாது.
Rate this:
Share this comment
Cancel
Sambasivam Chinnakkannu - paris,பிரான்ஸ்
15-ஜூலை-201613:31:16 IST Report Abuse
Sambasivam Chinnakkannu சொத்து விபரம் தராமல் எப்படி ,,???? எந்த அடிப்படையில் , எதன் பேரில் ,,??? கடன் கொடுக்க வங்கி மேலாளர்கள் ,அதிகாரிகள் ,சிபாரிசு செய்தார்கள் ...கடன் கொடுத்தார்கள் என தெரிவித்தால் நல்லது வங்கி அதிகாரிகள் தப்பித்துக்கொள்ளும் நோக்கம் அறியப்பட வேண்டும் ,,, ஜாமின் இல்லாமல் கடன் வழங்கி இருந்தால் அதிகாரிகளின் சொத்துக்களை முடக்க வேண்டும் ...
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
15-ஜூலை-201611:57:07 IST Report Abuse
Lion Drsekar அவன் வெளிநாட்டில் மிகவும் பத்திரமாக இருக்கிறான், இந்தியர்களும் யாரும் கவலைப்படப்போவதில்லை, எதற்கு இந்த கண் துடைப்பு செய்திகள் எல்லாம்,. ? மொத்தத்தில் கொள்ளையர்களின் கையில் இன்றய ஜனநாயகம் என்பது உறுதியாகிவிட்டது வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X