பிரான்ஸ்சில் பயங்கரவாத தாக்குதல்: டிரக்கை மோதச் செய்து கொடூரம் ; 84 பேர் பலி Dinamalar
பதிவு செய்த நாள் :
பிரான்ஸ்சில் பயங்கரவாத தாக்குதல்: டிரக்கை மோதச் செய்து கொடூரம் ; 84 பேர் பலி

நீஸ் : பிரான்சில் நீஸ் நகரில் பயங்கரவாதி ஒருவன் மக்கள் குழுமியிருந்த கூட்டத்தில் கண்டய்னர் லாரியை ஏற்றியதில், 84 பேர் பலியாயினர்; 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

பிரான்ஸ்சில் பயங்கரவாத தாக்குதல்: டிரக்கை மோதச் செய்து கொடூரம் ; 84 பேர் பலி

பிரான்ஸ் நாட்டின் தேசிய விடுமுறை நாளான பாஸ்டில் தின கொண்டாட்டத்தையொட்டி, நீஸ் நகரில் நடந்த வாண வேடிக்கையை காண மக்கள் பலர் குழுமியிருந்தனர். இந்நிலையில் திடீரென வந்த கண்டெய்னர் லாரி ஒன்று, மக்கள் குழுமியிருந்த கூட்டத்தை நோக்கி பாய்ந்தது. இத்தாக்குதலில் 84 பேர் பலியாயினர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
கண்டெய்னர் லாரியைஓட்டி வந்த டிரைவர் அதிக வேகத்தில் வந்து கூட்டத்தில் 2 கி.மீ., வரை லாரியை செலுத்தியதாகவும், பின் மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. டிரைவர் யார் என இதுவரைஅடையாளம் காணப்படவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது ஒரு பயங்கரவாத தாக்குதல் எனவும், கண்டய்னர் லாரியில் கையெறி குண்டுகளும், ஆயுதங்களும் இருந்ததாகவும் நீஸ் மாகாண கவர்னர்தெரிவித்துள்ளார்.

Advertisement


இந்தியர்களுக்கு பாதிப்பில்லை:இந்நிலையில் இத்தாக்குதலில்இந்தியர்கள் யாருக்கும் பாதிப்பில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் அங்குள்ள இந்தியர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள பாரீஸில் உள்ள துாதரகத்தில் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. +33-1-40507070 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை அறியலாம் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அவசரநிலை பிரகடனம்: இத்தாக்குதல் எதிரொலியாக, பிரான்ஸில் 3 மாதம் அவசரநிலை பிரகடனம் நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் ஹாலண்டே தெரிவித்துள்ளார்.டிரக்கரில் வந்த துப்பாக்கி- குண்டு: பயங்கரவாதி ஓட்டி வந்த டிரக்கரில் பயங்கர ஆயுதங்கள் , வெடிபொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.இந்த வாகனத்தில் வந்த பயங்கரவாதி ஒருவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். இதில் சக்தி வாய்ந்த துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகள் இருந்தன. மொத்தம் 8 டன் வெடி பொருட்கள் இருந்ததாக விசாரணை அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த வெடிபொருட்கள் வெடித்திருந்தால் இன்னும் உயிர்ச்சேதம் பெரிதாகி இருக்கும் என கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு இது வரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (183)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajesh - Bangalore,இந்தியா
16-ஜூலை-201611:55:00 IST Report Abuse

Rajeshநன்றி:- அமானுல்லா. எங்களுக்கு ஒரு குறை தான். உங்கள் மத தலைவர்கள் குறிப்பாக ஊடகங்களில் உலா வரும் நபர்கள் ஏன் இது போன்ற சம்பவங்கள் நடந்ததும் அதை முழு மனதாக கண்டனம் செய்வதில்லை.?

Rate this:
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா
16-ஜூலை-201601:40:49 IST Report Abuse

Krishnan (Sarvam Krishnaarpanam....)// இந்த அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து இவைகள் எல்லாம், ஏன் இன்னொரு நாட்டின் மீது படை எடுத்து அந்த நாடுகளை சீரழித்தார்களே அப்போவுது எதிர் விளைவு வரும் எண்று தெரியாதா // - அதேயே தான் நாங்களும் கூறுகிறோம். அன்று முகலாயர்கள் ஹிந்துக்களை கொன்று, ஹிந்து கோவில்களை இடித்து, ஹிந்து நாடுகளின் மீது அத்துமீறி போர் தொடுத்தது உங்களுக்கு தெரியாதா ? அது தெரிந்தும் தானே அவர்களை வீரர்கள் என்று போற்றுகிறீர்கள் ? எங்களுக்கு நன்றாக தெரியும், மேற்கத்திய நாடுகள் படையெடுப்பதும் கொல்வதும் தீவிரவாதிகளை மட்டும் தான் என்று.

Rate this:
raghavan - Srirangam, Trichy,இந்தியா
16-ஜூலை-201600:29:33 IST Report Abuse

raghavanஇந்த கொலைகாரனை அல்லாஹ் ஒரு போதும் மன்னிக்க மாட்டார். இந்தநேரம் நரகத்தில் சகல வேதனைகளையும் அனுபவித்துகொண்டிருப்பான்.

Rate this:
Krish Sami - Trivandrum,இந்தியா
16-ஜூலை-201600:12:12 IST Report Abuse

Krish Samiதீவிரவாதிகள் விரும்புவது ஒரு பிரிவினர் மற்ற பிரிவினரை மனதார வெறுக்க வேண்டும் என்பதே. இங்கு வரும் பெரும்பான்மையான கருத்துக்களை பார்க்கும் பொழுது அவர்கள் நோக்கம் நிறைவேறி வருகிறதோ என்று உண்மையாகவே அச்சமாக இருக்கிறது. நண்பர்களே, எந்த குற்றத்துடனும் மனம், இனம், மொழி, நாடு என சேர்த்து பார்த்து விஷ விதையை மேலும் மேலும் தூவாதீர்கள். வெறுப்பு யாருக்கும் விடியலை தருவதில்லை.

Rate this:
Rasu Kutty - New York,யூ.எஸ்.ஏ
15-ஜூலை-201623:54:14 IST Report Abuse

Rasu Kuttyவிசுவரூபம் படத்திற்காகவும், அமெரிக்காவில் எவனோ குறும்படம் எடுத்தான் என்று அண்ணா சாலையை ஸ்தம்பிக்க வைத்த மார்கத்தினருக்கு இது போன்ற நாய்களைக்கு எதிராக குரல் குடுக்க ஏன் வீரம் வரவில்லை??? உப்பிட்ட நாட்டிற்கு துரோகம் செய்யும் புத்தி அமைதி மார்கத்தினருக்கு மட்டுமே உண்டு...

Rate this:
Ravichandran - dar salam ,தான்சானியா
15-ஜூலை-201623:46:35 IST Report Abuse

Ravichandranபிரஞ்சு அரசே இஸ்லாம் மதத்தை முழுவதும் தடை செய்யாமல் உனக்கு வேறு வழி இல்லை. இவர்கள் கொலை தொழில் நிற்காது, அனைத்து விஷயங்களும் தடை செய்து உலகிற்கு ஒரு வழி காட்டு.

Rate this:
பெரிய ராசு - Baton Rouge,யூ.எஸ்.ஏ
15-ஜூலை-201622:16:06 IST Report Abuse

பெரிய ராசு அமைதி மார்க்கத்தின் அடாவடி தூங்கும் போது கல்லை தலையில் போட்டு கொல்வது எப்படியும் எல்லா நாடுகளும் அமைதி மார்க்கத்தினை விரட்டி அடிப்பது உறுதி

Rate this:
N.K - Hamburg,ஜெர்மனி
18-ஜூலை-201622:24:22 IST Report Abuse

N.Kஐயையோ அப்படி விரட்டிவிடப்பட்டவர்கள் எல்லாரும் இந்தியாவிற்கு வந்துவிடப்போகிறார்கள்....

Rate this:
Samir - Trichy,இந்தியா
15-ஜூலை-201622:10:22 IST Report Abuse

SamirISIS என்பது ஒரு இஸ்லாமிய அமைப்பாக இருந்தால், உலக முஸ்லிம்கள் அனைவரும் புண்ணிய ஸ்தலமாக கருதும் மதீனாவில் புண்ணிய மாதமான ரமலானில் குண்டு வெடிப்பார்களா ? கொஞ்சமாவது புத்தி உள்ளவர்க்கு விளங்கும் ISIS என்பது யாரால் எதற்க்காக உருவாக்கப்பட்டது என்பது. இஸ்ரேல் என்று ஒரு நாடு இருக்கும் வரை உலகில் அமைதியை எதிர்பார்க்க வேணாம். எண்ணெய் வளமுள்ள நாடுகள் மீது கூட்டாக சேர்ந்து படையெடுக்கும் போது யோசித்து இருக்கணும், இப்படி பதிலடி கிடைக்கும் என்று. உப்பை தின்றவன் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும். ஆனால் எல்லா இடத்திலும் பாதிக்க படுவது அப்பாவி மக்கள்தான், அரசியல் வாதிகளோ தலைவர்களோ அல்ல.என்பதுதான் வேதனை அளிக்கிறது.

Rate this:
குரங்கு குப்பன் - chennai,இந்தியா
16-ஜூலை-201606:24:09 IST Report Abuse

குரங்கு குப்பன் உங்கள் கருத்தில் இருந்து தெரிகிறது நீங்கள் எந்த அளவுக்கு மூளை சலவை செய்ய பட்டிருக்கிறீர்கள் என்று, ஹிந்துஸ்தானிகள் விழித்து கொள்ள வேண்டும்...

Rate this:
Rathinasami Kittapa - San Antonio,யூ.எஸ்.ஏ
16-ஜூலை-201610:03:40 IST Report Abuse

Rathinasami Kittapaசமீருக்குப் பரம திருப்தியா ? இருங்க இருங்க, தமிழ் பேசும் முஸ்லீம்களைத்தான் முதலில் குறி வைப்பார்கள் ஐ எஸ் ஐ எஸ் தீவிரவியாதிகள். அப்போது தெரியும் உங்களுக்கு நீங்களே வைத்துக்கொண்ட ஆப்பு என்று....

Rate this:
Ramesh Kumar - coimbatore,இந்தியா
15-ஜூலை-201622:00:49 IST Report Abuse

Ramesh Kumarவேதங்களிலும் , கீதையிலும் ...மற்ற இந்து மத புனித நூல்களிலும் உள்ள குறைகளை...எந்த இந்துவாலும் பகிரங்கமாக விமர்சிக்க முடியும்.....ஆனால் குரானிலுள்ள குறைகளை ஒரு இஸ்லாமியரால் பகிரங்கமாக விமர்சிக்க முடியுமா..? அந்த அளவுக்கு பழமைவாதத்தில் மூழ்கி மூளை சலவை செய்யப்பட்டு வருகின்றனர் இன்றைய முஸ்லிம்கள்...... காலத்திருக்கேற்ப கிறித்துவ மதம் மாறியது போல் இஸ்லாமும் மாறினால் மட்டுமே உலகம் நிம்மதியடையும்.....உங்கள் மத போதனைகளுக்கு மாறாக மற்ற மத மக்கள் நடந்தால் அவர்களை விமர்சிக்க ( இது கிறித்துவர்களுக்கும் சேர்த்து )அழிக்க நீங்கள் யார்....?மூடத்தனமான வழிகாட்டுதல்களிலிருந்து வெளியே வாருங்கள்......இறைவன் ஒருவரே....அவரே சிவன் என்றும், பரம பிதா என்றும் , யெகோவா என்றும் ..அல்லாஹ் என்றும் அழைக்கப்படுகிறார்......இதை மனிதர்கள் உணரும் போது உலகம் அமைதியடையும்..... ஆனால் கடைசி மனிதன் தான் இதை உணர்வான்.....அவன் வருத்தப்பட்டு தான் தவறை பகிர்ந்துகொள்ள சக மனிதன் இருக்க மாட்டான்......

Rate this:
Samir - Trichy,இந்தியா
16-ஜூலை-201621:37:46 IST Report Abuse

Samirகுரான் என்பது உண்மை, மனிதன் உருவானது முதல் உலகம் இறுதி வரை வாழ்வதற்கு உள்ள வழிகாட்டி....

Rate this:
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
15-ஜூலை-201621:45:53 IST Report Abuse

Swaminathan Nathசிறிய விஷயங்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் திருமா, கருணாநிதி இதற்கு கண்டனம் தெரிவிக்க வில்லை, மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்,.

Rate this:
மேலும் 169 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement