அருணாச்சல் முதல்வராக பெமா காண்டு.பதவியேற்பு !அமைச்சரவை குறித்து விரைவில் முடிவு Dinamalar
பதிவு செய்த நாள் :
பதவியேற்பு !
அருணாச்சல் முதல்வராக பெமா காண்டு
அமைச்சரவை குறித்து விரைவில் முடிவு

இடாநகர், :கடந்த ஒரு வாரமாக, பல்வேறு அரசியல் திருப்பங்களை சந்தித்த, வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசத்தின் முதல்வராக, காங்கிரஸ் கட்சியின் பெமா காண்டு, 37, நேற்று பதவியேற்றார். அவருடன், சவ்னா மேயின், துணை முதல்வராக பதவியேற்றார். விரைவில், அமைச்சரவை குறித்து முடிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அருணாச்சல் இளவயது முதல்வர்  பெமா காண்டு

மொத்தம், 60 தொகுதிகள் உடைய அருணாச்சல பிரதேச சட்டசபைக்கு, கடந்த 2014ல் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று, முதல்வர் நபாம் துகி தலைமையிலான அரசு அமைந்தது.
இதனிடையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கலிகோ புல் தலைமையில், சில எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி துாக்கியதால் அங்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பின், ஜனாதிபதி ஆட்சி விலக்கி கொள்ளப்பட்டு, பா.ஜ.,வின் ஆதரவோடு, கலிகோ புல் தலைமையிலான அரசு அமைந்தது.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு


ஆட்சி கலைக்கப்பட்டதை எதிர்த்து துகி தொடர்ந்த வழக்கில், சுப்ரீம் கோர்ட் கடந்த வாரம் தீர்ப்பளித்தது. துகி அரசை கலைக்கும் வகையில், கவர்னர் ராஜ்கோவா பிறப்பித்த உத்தரவுகளுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. கடந்த ஆண்டு டிசம்பர், 15ல் இருந்த நிலையே தொடர வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டது.
அதைத் தொடர்ந்து, முதல்வராக துகி பொறுப்பேற்றுக் கொண்டார். சட்டசபையில்,

பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று, அருணாச்சல பிரதேச கவர்னர் பொறுப்பை கூடுதலாக கவனிக்கும் திரிபுரா கவர்னர் ததாகத் ராய் உத்தரவிட்டார்.
அதன்படி, நேற்று முன்தினம் நடைபெறுவதாக இருந்த நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு முன், மிகப்பெரிய அளவில் அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டன. முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக துகி அறிவித்தார். புல் தலைமையிலானஅதிருப்தியாளர்கள் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பினர். அதைத் தொடர்ந்து, கட்சியின் சட்டசபை தலைவராக பெமா காண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மொத்தமுள்ள, 60 எம்.எல்.ஏ.,க் களில் இரண்டு இடங்கள் காலியாக உள்ளன. பா.ஜ.,வுக்கு, 11 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இரண்டு சுயேச்சைகள் உட்பட, 47 பேரின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க, பெமா காண்டு உரிமை கோரினார்.

துணை முதல்வர் சவ்னா


அதன்படி, கவர்னர் மாளிகை யில் நேற்று நடந்த நிகழ்ச்சி யில், பெமா காண்டு, முதல்வராக பொறுப்பேற்றார். அவருடன், துணை முதல்வராக சவ்னா மேயின் பதவியேற்றார். விரைவில், புதிய அமைச்சர்கள் குறித்து முடிவு செய்யப்படும் என, பதவியேற்புக்கு பின், முதல்வர் காண்டு தெரிவித்தார்.
கடந்த பல மாதங்களாக பல்வேறு அரசியல் திருப்பங்களையும், குழப்பங்களையும் சந்தித்த அருணாச்சல பிரதேசத்தில் மீண்டும் காங்கிரஸ் அரசு அமைந்துள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை, ஏழாக உயர்ந்துள்ளது. மேலும் பீஹார் மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்துள்ளது.

இளம் வயது முதல்வர்



* அருணாச்சல பிரதேசத்தின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள பெமா காண்டு, நாட்டின் மிகவும் இளம் வயது முதல்வர் என்ற பெருமையை பெறுகிறார்
* சட்டசபை தேர்தலில் போட்டியின்றி வென்ற இவரை, கட்சித் தலைவர்கள் மற்றும்

Advertisement

எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் ஒருமனதாக, முதல்வராக தேர்ந்தெடுத்தனர்
* கடந்த, 2011ம் ஆண்டு நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த, மறைந்த முன்னாள் முதல்வர் டோர்ஜி காண்டுவின் முதல் மகன் பெமா காண்டு
* தந்தையின் மறைவைத் தொடர்ந்து நடந்த தேர்தலில் வென்று, கடந்த, 2011ல் முதல் முறையாக சட்டசபைக்குள் நுழைந்தார்
* கடந்த, 2014ல் நடந்த தேர்தலில், முக்தோ தொகுதியில் இருந்து போட்டியின்றி வென்றார்
* மாநில அமைச்சராக பணியாற்றியுள்ள காண்டு, துகி அரசுக்கு எதிராக புல் போர்க்கொடி துாக்கியபோது புல் உடன் இருந்தார். அப்போது, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.


'இணைந்து செயல்படுவோம்'


முதல்வராக பதவியேற்ற பின், பெமா காண்டு கூறியதாவது:இதற்கு முன் ஆட்சியில் இருந்த என்னுடைய தந்தை டோர்ஜி காண்டு, நபாம் துகி, கலிகோ புல் அரசுகள் துவங்கிய திட்டங்களை நிறைவேற்றுவோம்.
'டீம் அருணாச்சல்' என்ற பெயரில், அனைத்து தரப்பினருடனும் இணைந்து செயல்படுவோம். மாநிலத்தின் நலனுக்காக சட்டசபையில் உள்ள ஒவ்வொருவரின்
ஆதரவுடன் திட்டங்களை நிறைவேற்றுவோம். கட்சி வேறுபாடு இல்லாமல் அனைவருடனும் இணைந்து செயல்படுவோம். மத்திய அரசின் உதவியுடனும், ஆதரவுடனும், நிறுத்தி வைக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்றுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Durai Ramamurthy - Virudhachalam,இந்தியா
18-ஜூலை-201614:54:06 IST Report Abuse

Durai Ramamurthyஇனி யாரேனும் நம்மை பேமா நீ என்றாலோ காண்டு என்றாலோ வருந்தாமல் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

Rate this:
ganapati sb - coimbatore,இந்தியா
18-ஜூலை-201612:38:54 IST Report Abuse

ganapati sbஇளம் முதல்வருக்கு வாழ்த்துக்கள் இனிமேலாவது காங்கிரஸ் குழப்பம் செய்யாமல் இணைந்து நல்ல நிர்வாகத்தை மாநில மக்களுக்கு வழங்க வேண்டும்

Rate this:
Balaji - Khaithan,குவைத்
18-ஜூலை-201611:33:27 IST Report Abuse

Balajiபுதிதாக பொறுப்பேற்ற காண்டு அவர்களுக்கு வாழ்த்துக்கள்..... இனியும் குழப்பங்கள் வராமல் ஆட்சியை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டிய சவால் தங்களின் முன் இருக்கிறது என்பதை புரிந்துகொண்டு செயல்படுங்கள்..........

Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X