விவசாய நிலத்தை பாழாக்கிய அதிகாரிகளை "கவுரவிக்கும் " நூதன போராட்டம்; கலெக்டருக்கு தேங்காய், பழத்துடன் அழைப்பு| Dinamalar

விவசாய நிலத்தை பாழாக்கிய அதிகாரிகளை "கவுரவிக்கும் " நூதன போராட்டம்; கலெக்டருக்கு தேங்காய், பழத்துடன் அழைப்பு

Updated : ஜூலை 26, 2016 | Added : ஜூலை 25, 2016 | கருத்துகள் (23)
Advertisement

சிவகங்கை: சிவகங்கை அருகே விவசாயத்தை பாழாக்கிய அதிகாரிகளை " கவுரவிக்கும் " விழாவிற்கு கிராம மக்கள் ஏற்பாடு செய்து, அதற்கான அழைப்பிதழை, தேங்காய், பழத்துடன் கொண்டு வந்து கலெக்டரிடம் நேரில் வழங்கினர்.சிவகங்கை அருகே கீழக்கண்டனி, மேலவெள்ளஞ்சி கண்மாய் மூலம் நுாறு ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றது. சமீபத்தில் இந்த நிலத்திற்கு இடையே மானாமதுரை - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை அமைத்த போது கண்மாய் தண்ணீரை ரோட்டில் மறுபுறம் கொண்டு செல்வதற்காக கால்வாய்களின் மேல் கட்டப்பட்டிருந்த சிறுசிறு பாலங்களை நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் மூடி விட்டனர். இதனால் விவசாயிகள் கண்மாய் தண்ணீரை வயல்களுக்கு பாய்ச்ச முடியாமல் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து கடந்த மே மாதம் கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர். நடவடிக்கை இல்லாததால்,தங்களின் வாழ்வாதாரத்தை பாழாக்கிய அரசு அதிகாரிகளுக்கு பொன்னாடை போர்த்தி " கவுரவிக்கும் " விழாவை வரும் ஆக.,2ல் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். இதற்காக அழைப்பிதழ் அச்சடித்து அரசு அலுவலகங்களிலும், கடைகளிலும் வழங்கினர்.நேற்று நடந்த மனுநீதி நாளில் பங்கேற்க வந்த கீழக்கண்டனி கிராம மக்கள் 2 பெரிய பாக்கு மட்டை தாம்பாலத்தில் தேங்காய்,வாழைப்பழம், பூக்கள் வைத்து கிராம சம்பிரதாய முறைப்படி கலெக்டரை விழாவிற்கு வரும்படி அழைத்து, பத்திரிகை வழங்கினர்.முதலில் பத்திரிகையில் என்ன இருக்கிறது என்று தெரியாத நிலையில் பழம், தேங்காயை பார்த்த கலெக்டர் மலர்விழி அழைப்பிதழை பிரித்து படித்து பார்த்தார்.விவசாயிகளின் நுாதன போராட்டத்திற்கு தனக்கே அழைப்பிதழா... என்பதை புரிந்து கொண்டு உதவியாளரை அழைத்து பழங்களை எடுத்துச் செல்லும்படி கூறிவிட்டு, அழைப்பு விடுத்தவர்களிடம், 'சரி... சரி... பார்க்கலாம்' எனக்கூறி, அவர்களை அவசர, அவசரமாக அங்கிருந்து அனுப்பி வைத்தார்.கீழக்கண்டனி விவசாயி பாக்கியராஜ் கூறுகையில்,“ கடந்த ஜனவரி மாதமே மனுக்கொடுத்தும் விவசாயத்தை பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்தோம். அதிகாரிகள் தலையிட்டு, 'தேர்தல் முடிந்ததும் கால்வாய் அமைத்து, சேதப்படுத்தப்பட்ட சிறு பாலங்களை கட்டி தருவோம்' என உறுதி அளித்தனர்.அதை நம்பி வாக்களித்தோம். தேர்தல் முடிந்ததும் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் இந்த நுாதன போராட்டத்திற்கு தேதி குறித்து, கலெக்டருக்கு அழைப்பிதழ் வழங்கி இருக்கிறோம். இனியாவது கால்வாய் அமைத்து கண்மாய் நீரை நாங்கள் பயன்படுத்தி விவசாயம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா, என்பது தெரியவில்லை,” என்றார்.Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayakumar - Namakkal,இந்தியா
31-ஜூலை-201617:44:01 IST Report Abuse
Jayakumar ஒருபாகம் தமிழ்நாடு கவர்மெண்ட் பக்கத்துக்கு ஸ்டாட்டோட தண்ணிக்கு சண்டை போடறாங்க. இதுக்காக உச்சநீதி மன்றத்திலேயும் கேஸ் போட்டிருக்கங்க. தமிழ்நாட்டுல இருக்கற தண்ணீரை விசைகளுக்கும் சரியாய் குடுக்க மாத்திரங்க. என்னதான் பிரச்னை இந்த கவர்மண்டுக்கு.
Rate this:
Share this comment
Cancel
மு. செந்தமிழன் - மதுரை ,இந்தியா
30-ஜூலை-201606:43:15 IST Report Abuse
மு. செந்தமிழன் இது எதோ சிவகங்கை மக்களுக்கு மட்டும் நடந்த கொடுமை அல்ல. மக்கள் அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். ஒரு மாவட்ட ஆட்சியரேய துணைபோவது கொடுமையிலும் கொடுமை. ரெம்ப சீக்கிரம் மேலே போக வழி அமைக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
sri - vellore,இந்தியா
28-ஜூலை-201616:08:58 IST Report Abuse
sri இவர்கள் சாப்பாடு சாப்பிடுவதில்லை பணம் மட்டும் சாப்பிடுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா
28-ஜூலை-201615:43:31 IST Report Abuse
மஸ்தான் கனி நிலம் சீரழித்த அதிகாரிகளை சிறை பிடியுங்கள், அரசு தானாக கிராமத்துக்கு வரும்..
Rate this:
Share this comment
Cancel
appavi - cumbum,இந்தியா
28-ஜூலை-201614:56:54 IST Report Abuse
appavi உண்மையிலேயே நம் நாடு விவசாய நாடா?
Rate this:
Share this comment
Cancel
christ - chennai,இந்தியா
28-ஜூலை-201612:20:10 IST Report Abuse
christ வாங்குற சம்பளத்துக்கு கொஞ்சமாவது வேலை செய்யுங்க
Rate this:
Share this comment
Cancel
christ - chennai,இந்தியா
28-ஜூலை-201612:18:49 IST Report Abuse
christ அட பாவிங்களா விவசாயி வயத்துல அடிக்காதிங்க. விவசாயி இல்லனா சோத்துக்கு சிங்கி தான் அடிக்கணும் .
Rate this:
Share this comment
Cancel
Devathasan T - Tirunelveli,இந்தியா
28-ஜூலை-201612:07:13 IST Report Abuse
Devathasan T உழவன் நாட்டின் முதுகெலும்பு என்பதெல்லாம் வெறும் பேச்சி
Rate this:
Share this comment
Cancel
sstamil - Chennai,இந்தியா
28-ஜூலை-201611:18:56 IST Report Abuse
sstamil அந்த ஊரு M.L.A அடுத்த தடவை வோட்டு கேட்டு வந்தா போடாதீங்க. M.L.A எல்லோரும் வோட்டு கேட்க மட்டும் தான் வருவாங்களா?
Rate this:
Share this comment
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
28-ஜூலை-201607:09:14 IST Report Abuse
Rajendra Bupathi ஆனா ஒண்ணு புதுசோ இல்ல பழசோ எதுல அடிச்சாலும் இவங்க திருந்தவே மாட்டாங்க. ஏன் அந்த தொகுதியில ஒரு டம்மி பீசு இருக்குமே அதுகூட கண்டுக்கலையா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை