தே.மு.தி.க., எழுச்சியாக உள்ளது: பிரேமலதா தடாலடி; கட்சியினர் பீதி Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தே.மு.தி.க., எழுச்சியாக உள்ளது
பிரேமலதா தடாலடி; கட்சியினர் பீதி

சென்னை : ''முன்பு இருந்ததை விட, தே.மு.தி.க., மிகவும் எழுச்சியாக உள்ளது,'' என பிரேமலதா கூறினார்.

தே.மு.தி.க., பிரேமலதா தடாலடி, கட்சியினர் பீதி

முன்னாள் அமைச்சர் தொடர்ந்த வழக்கில், நீதிமன்ற உத்தரவுப்படி, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வந்த விஜயகாந்த் மனைவி பிரேமலதாஅளித்த பேட்டி:

கடந்த ஆட்சியில், தி.மு.க.,விற்கு, 23 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தனர். தற்போது, 89 எம்.எம்.எல்.ஏ.,க் கள் உள்ளனர்.

அதனால், தமிழகத்திற்கு எந்த நன்மையும் நடக்கப் போவது இல்லை.தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு மோசமாக உள்ளது. சிறுதாவூர் பங்களாவில் இருந்த கன்டெய்னர் லாரி குறித்து, தி.மு.க., கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் புகார்கூறினார். ஆனால், என் மீது மட்டும் வேண்டும் என்றே வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

என்னை மட்டும் பழிவாங்க ஆளுங்கட்சியினர் துடிக்கின்றனர். இந்த சலசலப்புகளுக்கெல்லாம் நானும் அஞ்ச மாட்டேன்; தே.மு.தி.க.,வும் அஞ்சாது.உள்ளாட்சி தேர்தலில், தே.மு.தி.க., நிச்சயம் போட்டியிடும். உரிய நேரத்தில், விஜயகாந்த் அதை அறிவிப்பார்.

தமிழகத்திற்கு மாற்று அரசியல் வேண்டும் என்பதற்காகவே,அ.தி.மு.க.,- தி.மு.க.,வை தவிர்த்து, விஜயகாந்த் கூட்டணி அமைத்தார்; மக்கள் மனநிலை மாறும்; எல்லா சூழ்நிலைகளும் மாறும்.

Advertisement

முன்பு இருந்ததை விட, தே.மு.தி.க., மிகவும் எழுச்சியாக உள்ளது.இவ்வாறு பிரேமலதா கூறினார்.
ஆனால், கட்சியின் நிலைமை வேறு. கட்சியினர் ஒவ்வொருவராக மாற்றுக் கட்சியில் சேர்ந்து வரும் நிலையிலும், வரும் ஆகஸ்ட்டில், விஜயகாந்த் பிறந்த நாள் வருவதால், நலத்திட்ட உதவிகள் செய்ய பணம் செலவழிக்க வேண்டிய நிலையில் இருப்ப தாலும், உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக பிரேமலதா அறிவித்துள்ளதாலும், கட்சியினர் பீதியில் உறைந்து உள்ளனர்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தேச நேசன் - Chennai,இந்தியா
28-ஜூலை-201600:28:24 IST Report Abuse

தேச நேசன்திரும்பவும் வைகோ க்கு இது தெரிஞ்சுதுன்னா , அம்ம்புட்டு தான் , அமைதியா பேசுங்க

Rate this:
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
27-ஜூலை-201622:52:19 IST Report Abuse

Rajendra Bupathiகொஞ்சம் காய்ச்சல் அதிகமாதான் தெரியுது. அதுதான் இப்படி பேசுறாங்க

Rate this:
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
27-ஜூலை-201622:51:16 IST Report Abuse

Rajendra Bupathiஒண்ணும் இல்லிங்கோ... ரெண்டு பேருக்குமே கோர்ட்டு பிடி வாரண்டு அதுதான் இப்படி பீலா உட்டுகிட்டு திரியிறாங்க.

Rate this:
LAX - Trichy,இந்தியா
27-ஜூலை-201622:37:44 IST Report Abuse

LAXதுணைக்கு ஆள் தேடுறார் அண்ணியார்.. அட காவல் நிலையம்/கோர்ட்டுக்கு போகத்தான்பா..

Rate this:
Venkatesh Srinivasa Raghavan - Chennai,இந்தியா
27-ஜூலை-201621:55:47 IST Report Abuse

Venkatesh Srinivasa Raghavanநகருங்கம்மா. காத்து வரட்டும். கோயம்பேடு பக்கம் வரவே எல்லாரும் யோசிக்கறாங்க. பஸ் ஏற யாராவது வந்தா கூட அவங்களையும் பாய்ஞ்சு அடிக்கறாரு உங்க வீட்டுகாரர். இதுல கட்சி வலிமையா இருக்குனு பேட்டி வேற.

Rate this:
kavish - salem  ( Posted via: Dinamalar Android App )
27-ஜூலை-201620:07:50 IST Report Abuse

kavishஇந்தியாவில் இராணுவ ஆட்சி வந்து உன்னை எல்லாம் பேசவே விட கூடாது அஞ்சு பைசா பத்து பைசா கட்சிக்கெல்லாம் தடை விதிக்க வேண்டும்

Rate this:
BJRaman - Chennai,இந்தியா
27-ஜூலை-201619:57:38 IST Report Abuse

BJRamanஎங்க, எங்க அந்த எழுச்சி? அப்பா, எல்லாம் ஓடி போங்கப்பு

Rate this:
Balaji - Khaithan,குவைத்
27-ஜூலை-201618:34:13 IST Report Abuse

Balajiதற்போதைய கட்சி நிலவரம் தெரியாமல் பேசியுள்ளார் போல தெரிகிறது..... கட்சி முன்பை விட இப்போது தான் ரொம்ப கலகலத்துள்ளது என்பதை மறைப்பதற்காக கூட இப்படி பேசியிருக்கலாம்..... கட்சியின் தோல்விக்கான உண்மையான காரணங்களை கண்டறியாதவரை இவர்களால் கட்சியை மீதும் பழைய நிலைமைக்கு கொண்டு வருவது சாத்தியமில்லை என்பது மட்டும் நிச்சயம்.........

Rate this:
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
27-ஜூலை-201617:58:51 IST Report Abuse

Rajendra Bupathiஏதாச்சியும் கெட்ட கனவு கண்டிருப்பாங்க அதுதான் வேற ஒண்ணும் இல்ல. மந்திரிச்சி தாயத்து கட்டுனா எல்லாம் சரியா போயிடும்.

Rate this:
Sham - Ct muththur,இந்தியா
27-ஜூலை-201617:41:19 IST Report Abuse

Sham ஆமா... இந்த விஷயம் அண்ணன் வைகோவிற்குத் தெரியுமா..

Rate this:
மேலும் 50 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement