தி.மலை கோவில் ராஜகோபுரத்தில் அபாயகரமான இடத்தில் விரிசல்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

திருவண்ணாமலை: ''திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில், ராஜகோபுரத்தில் அபாயகரமான இடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது,'' என, ஐ.ஐ.டி., உதவி பேராசிரியர் அருண்மேனன் கூறினார்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக, 25 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. இதில், 13 நிலைகளுடன், 217 அடி உயரத்துடன் உள்ள கோவிலின், கிழக்கு திசையில் உள்ள ராஜகோபுரத்தை, 86 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. ராஜகோபுரத்தை துாய்மை செய்யும் பணியில் ஈடுபட்டபோது, மா அருணை விநாயகருக்கு எதிரே உள்ள, நான்காவது துாண் மேற்கூரையில், மூன்றாவது பீமில், நான்கு அடி துாரத்திற்கு விரிசல் ஏற்பட்டுள்ளதை கண்டறிந்தனர். கட்டமைப்பு பொறியியல் ஆய்வக சென்னை ஐ.ஐ.டி., உதவி பேராசிரியர் அருண் மேனன், நேற்று விரிசல் ஏற்பட்ட பகுதியில் ஆய்வு செய்தார். கலெக்டர் ஞானசேகரன், கோவில் இணை ஆணையர் ஹரி பிரியா உடனிருந்தனர்.
பின், நிருபர்களிடம் அருண்மேனன் கூறியதாவது: கோபுரத்தில் ஏற்பட்டுள்ள விரிசல், சிக்கலான அபாயகரமான இடத்தில் உள்ளது. இதை கண்டிப்பாக சரி செய்தே ஆக வேண்டும். இந்த விரிசல் ஏற்கனவே ஏற்பட்டுள்ளது; புதிதாக ஏற்பட்டது போன்று தெரியவில்லை. இந்த கோபுரம் மிகப்பழமை வாய்ந்தது என்பதால், எதனால் விரிசல் ஏற்பட்டது என்பதை உறுதியாக கூற முடியாது. விரிசல் பகுதியில், 'ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்' வைத்து ஒட்டி சரி செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாமரை - பழநி,இந்தியா
28-ஜூலை-201614:08:48 IST Report Abuse
தாமரை தமிழக அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு ஒரு ஐடியா சொல்கிறேன்.இந்த கோபுரத்தைச் சுற்றி வேலி போட்டு விட்டு இதை பார்க்க தனியாக டிக்கட் போட்டால் அறநிலையத் துறைக்கு நாலு காசைப் பார்த்த மாதிரியும் இருக்கும். நமது பக்த சிகாமணிகளுக்கும் அந்தக் குறிப்பிட்ட கோபுரத்தை ஸ்பெஷலாகத் தரிசித்தால் ஒரு திருப்தி அடைத்த மாதிரி இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Annamalai Jayaraman - Chennai,இந்தியா
28-ஜூலை-201612:57:05 IST Report Abuse
Annamalai Jayaraman பழுதுபார்க்க ஒதுக்கிய பணத்தை அதிகாரிகள் ஆட்டையை போடாமல், விரிசலை சரி செய்யவேண்டும் கடவுளே.
Rate this:
Share this comment
Cancel
babu - Nellai,இந்தியா
28-ஜூலை-201611:08:50 IST Report Abuse
babu கோவில்களில் சாதாரண பொது மக்கள் என்றால் வெகு நேரம் வெயிலிலும் மழையிலும் கால் கடுக்க நிற்க வைத்து பின் தான் அனுமதிக்க படுகின்றனர்.அதுவும் தொலைவில் இருந்து தரிசனம் செய்ய சில வினாடிகளுக்கு மட்டும். ஆனால் பணக்கார மனிதன் அல்லது அரசியல்வாதி அல்லது அரசு அதிகாரிகள் என்றால் எந்த ஒரு நிமிடமும் நிற்காமல் நேராக கருவறையில் சென்று சிறிது நேரம் அமர்ந்து அனைத்து பூஜைகளையும் முடித்து விட்டு மெதுவாக தானே செல்கின்றனர் போலீஸ் பாதுகாப்புடன்...இப்படி கடவுளை காண கூட குறுக்கு வழியில் சென்றால் அந்த கோவிலில் இறைவன் எப்படி வாழ்வான், வெறும் கல்லாக தான் கட்சி அளிப்பான்...
Rate this:
Share this comment
Cancel
Ramesh Sundram - Khazzan,ஓமன்
28-ஜூலை-201609:06:49 IST Report Abuse
Ramesh Sundram உண்மை தான் நீங்கள் கூறுவது திரு அண்ணாமலை அவர்களே பழனி கோயிலுக்கு வந்து பாருங்கள் அங்கே நடக்கும் அக்கிரமம் அந்த ஆண்டவனே நேரில் தரிசனத்திற்கு வந்தால் அவரது கோமணத்தை கூட உருவி அனுப்பி விடுவார்கள் அங்கே அர்ச்சகர் முதல் அரசியல் வியாதிகள் (உள்ளூர் )ரௌடிகள் வரை எல்லாம் ஓர் அணி. நல்ல வேலை திருப்பதி ஆந்திர பக்கம் சென்று விட்டது இல்லை என்றால் கோவிந்தா விற்க்கே நாமம் போட்டு உண்டியலில் விழும் பணத்தை கன்வேயர் பெல்ட் போட்டு வீட்டிற்கு வந்து விழும் படி செய்து விடுவார்கள்
Rate this:
Share this comment
Cancel
Annamalai - TN,இந்தியா
28-ஜூலை-201608:19:10 IST Report Abuse
Annamalai ஆகம விதிப்படி, முறையாக எல்லாம் பக்தியுடன் நடந்தால், இது போல் எல்லாம் 'ஆபத்தான நிலை' எல்லாம் ஏற்படாது. பழுது பார்க்க வேண்டிய நிலை மட்டுமே நிகழலாம். பக்தி, ஆன்மீகத்தில் திளைத்து மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஒரு பிரிவினரே ஏதேதோ வேலை செய்கின்றனர். சிலர் தகாத காரியம் கூட செய்கின்றனர். பூஜையும், ஈசுவர ஆராதனையும் ஒரு மெக்கானிக்கலான வேலை போல ஆகிவிட்டது. உணர்வு பூர்வமான பக்தி, இறைவனிடம் அன்பையும், வளர்த்து, வாழ்க்கையில் தெளிவு பெறும் தீவிரமான போக்கு அரிதாகி விட்டது. ஒரு விஷயத்தில் எல்லோரும் தீவிரம் காட்டுவது - பணம் சம்பாதிப்பது தான். ஏதோ அந்தந்த நேரத்தில், ஜோசியரை பார்த்து, பரிகாரம் செய்து கொள்வதுடன் தான் பலரின் ஆன்மீக வாழ்வு இருக்கிறது. கலியுகத்தின் முதல் 10,000 வருடம் கோல்டன் பீரியட். இப்போது 5,000 சொச்சம் தான் ஆகியிருக்கிறது. கண்ட காரியங்களில், பணத்தையும், நேரத்தையும் வீணடிக்காமல், உன்னதமான ஆன்மீக இலக்கியங்கள், புத்தகங்கள் புராணங்களை படித்து, இறைவனிடம் நம்பிக்கையை வளர்த்து கொள்வோம்.
Rate this:
Share this comment
Raj Pu - mumbai,ஏமன்
28-ஜூலை-201614:23:20 IST Report Abuse
Raj Puபக்தர்களுக்கு நல்ல அறிவுரை. ஆனால் யார் கேட்கிறார்கள். ஆன்மிகம் இன்று வியாபாரம் ஆகிவிட்டது. பஞ்ச பூதங்கள் இந்த பக்தர்களால் அழிந்து வருகின்றன...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்