ஆகஸ்ட் 2 : பல மாவட்டங்களுக்கு விடுமுறை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆகஸ்ட் 2 : பல மாவட்டங்களுக்கு விடுமுறை

Added : ஜூலை 31, 2016 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ஆகஸ்ட் 2 : பல மாவட்டங்களுக்கு விடுமுறை

சென்னை : ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி அமாவாசை விழா இந்த ஆண்டு ஆகஸ்ட் 2 ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல மாவட்டங்களில் நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆடிப்பெருக்கு மற்றும் ஆடிஅமாவாசை விழாவை முன்னிட்டு பக்தர்கள் பலர் கடலில் புனித நீராடுவார்கள் என்பதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 2 ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் வேதபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை முன்னிட்டு காஞ்சிபுரத்திலும் ஆகஸ்ட் 2ம் தேதி விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்யவும் தமிழகத்தின் அனைத்துக் கோயில்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பும், கண்காணிப்பு பணிகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் ஆடிப் பெருக்கை முன்னிட்டு ஆகஸ்ட் 2 ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று ஆகஸ்ட் 5 ம் தேதி விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடித்தேரோட்டம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj Pu - mumbai,இந்தியா
31-ஜூலை-201619:44:51 IST Report Abuse
Raj Pu இந்த விழாக்களை கணக்கில் கொண்டால் அரசு ஊழியருக்கு வருடம் 4 மாதங்களுக்கு மேல் விடுமுறை வரலாம் என்று தெரிகிறது நேற்று ஒரு நாள் வங்கி வேலை நிறுத்தம் பல கோடி ரூபாய் இழப்பு என்று கூறிய நிலையில் இதனால் எவ்வளவு இழப்பு என்று கணக்கு எதுவும் உள்ளதா தெரியவில்லை இந்த பண்டிகைகள் அமாவாசை என்று இந்து சடங்குகள் விழாக்கள் மட்டும் விடுமுறை விட்டு வாரவிடுமுறை தவிர்த்துவிடலாம் மற்றநாடுகளில் வாரவிடுமுறை தவிர்த்து சுமார் 10 நாட்கள் வரை தான் மற்ற விடுமுறைகள் பண்டிகை சேர்த்து உள்ளதாக தெரிகிறது
Rate this:
Share this comment
Cancel
sunil - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
31-ஜூலை-201616:53:21 IST Report Abuse
sunil வளைகுடா நாடுகளில் வசிக்கும் ஒவ்வொருவரும் இது போன்ற திருவிழாக்களை எங்கள் வாழ்வில் தவற விடுகிறோம்.
Rate this:
Share this comment
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
31-ஜூலை-201610:12:30 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN வரவேற்போம். நன்று.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X