ராஜிவ் கொலையாளிகள் மனு இன்று விசாரணை| Dinamalar

ராஜிவ் கொலையாளிகள் மனு இன்று விசாரணை

Added : ஆக 01, 2016 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ராஜிவ் கொலையாளிகள் மனு இன்று விசாரணை

புதுடில்லி : முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் குற்றவாளிகள் விடுதலை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது.
கடந்த 28ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவில், பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக மத்திய அரசின் ஆலோசனையை பெறலாமே தவிர அனுமதிபெற வேண்டும் என்பது கட்டாயமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 7 பேரை விடுவிக்கும் முன் மத்திய அரசின் அனுமதியை மாநில அரசு பெற வேண்டும் என்ற அரசியல் சாசன அமர்வின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ராஜிவ் கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கு மேல் சிறையிலுள்ள பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதனை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு, சிபிஐ விசாரித்த வழக்கு என்பதால் 7 பேரையும் விடுவிக்க மாநில அரசுக்கு உரிமை இல்லை என தெரிவித்தது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Selvaraj Thiroomal - Chennai,இந்தியா
01-ஆக-201616:00:17 IST Report Abuse
Selvaraj Thiroomal தமிழக அரசு தன் வித்தியாசமான அதிரடி நடவடிக்கை மூலம் இவர்களின் ஆயுள் தண்டனையை நிச்சயம் உறுதிசெய்யும் என நினைக்கிறன்.. ஆனால் ஒரேடியாக முதலில் கொடுத்த தடனையையே உடனே நிறைவேற்ற முயற்சிப்பது சிறந்த முடிவாகும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X