அழகிரியை கட்சியில் சேர்க்க கருணாநிதி புது தந்திரம் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அழகிரியை கட்சியில் சேர்க்க
கருணாநிதி புது தந்திரம்

நடந்த சம்பவங்களுக்கு வருத்தம் தெரிவித்து, தி.மு.க., தலைமைக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி கடிதம் எழுதி உள்ளதாக தெரிகிறது.

அழகிரியை  சேர்க்க புது தந்திரம்

எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், அவரது கட்டுப்பாட்டுக்குள் அனைத்து, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களும் செயல்பட துவங்கியுள்ளனர். கட்சியின் மொத்த நிர்வாகத்தையும், தன் கட்டுப்பாட்டின் கீழ், அவர் கொண்டு வந்து விட்டார்.
இது, கருணாநிதிக்கு பிடிக்கவில்லை. இதனால், சட்டசபை செயல்பாடுகள் குறித்து

விவாதிப்பதற்காக கூடும் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்திற்கு கூட செல்லாமல் புறக்கணித்து வருகிறார்.
இதற்கிடையில், கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன், கட்சியை விட்டு நீக்கப்பட்ட அழகிரியை, மீண்டும்கட்சிக்குள் கொண்டு வர வேண்டும் என, கருணாநிதி விரும்புகிறார். கட்சி நிர்வாகம் உள்ளிட்ட எல்லா விஷயங்களிலும், தன்னிச்சையாக செயல்படும் ஸ்டாலினுக்கு, அழகிரி மூலம் கடிவாளம் போடவும் திட்டமிடுகிறார்.
மேலும், சட்டசபை தேர்தலில் மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில், தி.மு.க., வேட்பாளர்கள் பெரும்பாலானோர் தோல்வி அடைந்தனர். அதற்கு, அழகிரி இல்லாததும், ஒரு காரணம் என கருணாநிதி கருதுகிறார். அதனால்,அவரை இணைக்க, அவர் தீவிரமாக உள்ளார்.
இதுகுறித்து, தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:பல்வேறு காரணங்களுக்காக, அழகிரி மீண்டும் கட்சிக்கு திரும்ப வேண்டும் என்பது,

Advertisement

கருணாநிதியின் எண்ணம். இதை, கட்சியில் இருக்கும் மூத்த தலைவர்கள் சிலர் மூலம், அழகிரிக்கு தகவலாக அனுப்பினார். கூடவே, கட்சியில் மீண்டும் சேர்ப்பதற்காக, வருத்தம் தெரிவித்து, தனக்கு கடிதம் அனுப்பும்படியும் கேட்டுக் கொண்டார். அதைத் தொடர்ந்து, அவரும் கடிதம் கொடுத்துள்ளார்.
இதனால், விரைவில் அழகிரி, தி.மு.க.,வில் சேர்த்துக் கொள்ளப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அந்த நிர்வாகி கூறினார்- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
adalarasan - chennai,இந்தியா
03-ஆக-201622:39:18 IST Report Abuse

adalarasanஇந்த வயதிலும், நரி வேலை செய்யும் குணம் மாறவில்லை? சரியான சுயநலவாதி?

Rate this:
மணிமேகலை - paris ,பிரான்ஸ்
03-ஆக-201620:53:39 IST Report Abuse

மணிமேகலை  பதவி வெறி தன் மகனையே வெறுக்கும் அளவுக்கு போய் இருக்கின்றது என்றால் இந்த அரசியலால் என்ன சாதிக்கப்போகின்றார்கள் .

Rate this:
A. Sivakumar. - Chennai,இந்தியா
03-ஆக-201620:16:12 IST Report Abuse

A. Sivakumar.// அவர் என்னை சந்தித்த போது விரும்பத்தகாத வார்த்தைகளை பேசினார். அதை எந்த தந்தையாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. யாராலும் பொறுத்துகொள்ள முடியாது. மு.க.ஸ்டாலின் பற்றி ஏற்கமுடியாத, வெறுக்கத்தக்க வார்த்தைகளை பேசினார். இப்போது அதை நினைத்தாலும் என் இதயம் நின்று போவதுபோல் இருக்கிறது // அவரைக் கட்சியை விட்டு நீக்கும்போது உதிர்ந்த முத்துக்கள் இவை. அவர் இல்லாமல் வெற்றி முழுமை அடையாதுன்னு நிரூபணம் ஆனபின்னாடி, இப்ப நடக்கிறது சூப்பர் ஸ்டன்ட். நம்ம வடிவேல் ஒரு காமெடியில் சொல்வார் இதையெல்லாம் பாக்க முடியாதபடி சிவாஜி மேலே போய் சேர்ந்திட்டாருன்னு. நம்ம தலைவர் நடிப்பின் முன்னாடி, சிவாஜி நடிப்பெல்லாம் நிக்காது.

Rate this:
மேலும் 68 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X