அரசியலில் குதிக்க மோகன்லால் திட்டம்?| Dinamalar

பொது செய்தி

இந்தியா

அரசியலில் குதிக்க மோகன்லால் திட்டம்?

Added : ஆக 03, 2016 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
அரசியலில் குதிக்க மோகன்லால்  திட்டம்?

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகர் மோகன்லால், கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேசியுள்ளார். இதனால், அவர், அரசியலில் குதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் பிரபலமான நடிகர் மோகன்லால். இதுவரை அரசியலில், அவர் ஆர்வம் காட்டியது இல்லை. இந்நிலையில், கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயனை, நடிகர் மோகன்லால், சமீபத்தில் சந்தித்து பேசினார். இதனால், அவர், மார்க்சிஸ்ட் கட்சியில் சேரவுள்ளதாக பரபரப்பு எழுந்தது.
இதற்கு, மோகன்லால் விளக்கம் அளித்துள்ளார்; அவர் கூறியதாவது: ஒருபோதும் அரசியல் பக்கம் போக மாட்டேன். நடிப்பு மட்டும் தான் எனக்கு தெரிந்த தொழில். வாய்ப்புள்ள வரை, அதை செய்வேன். முதல்வர் பினராயி விஜயன், நல்ல மனிதர். வாழ்க்கையில் மிகவும் அடிபட்டு, தற்போது உயர்ந்த இடத்துக்கு வந்துள்ளார். ஏற்கனவே அவருடன் நல்ல நட்பு உண்டு. எனவே தான் அவரை சந்தித்து பேசினேன். பல மாநிலங்களிலும், நடிகர்கள் அரசியலில் குதித்து, முதல்வர்களாகியுள்ளனர். கேரளாவிலும், சமீப காலமாக சில நடிகர்கள் அரசியலில் குதித்து, எம்.எல்.ஏ., - எம்.பி., போன்ற பதவியில் இருக்கின்றனர். ஆனால், நான் ஒருபோதும் அரசியலில் குதிக்க மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Palanivelu - Toronto,கனடா
04-ஆக-201620:23:15 IST Report Abuse
K.Palanivelu இவரே தெள்ளந்தெளிவாக அரசியலுக்கு வரமாட்டேன் என மேற்படி செய்தியிலேயே கூறிவிட்ட பிறகும் அரசியலில் குதிக்க மோகன்லால் திட்டம் என யூககேள்வியாக கேள்விக்குறியீட்டு செய்தி வெளியிடவேண்டிய அவசியமென்ன?
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
04-ஆக-201615:13:32 IST Report Abuse
Sampath Kumar நீங்க உண்மையான நடிகர்புத்திசாலியும் கூட எனவே இந்த தப்பை செய்யமாட்டீர்கள்
Rate this:
Share this comment
Cancel
ravi kumar - Hamamatsu,ஜப்பான்
04-ஆக-201613:41:19 IST Report Abuse
ravi kumar தலைப்பை எப்படி திரித்து எழுதி மக்களை படிக்க வச்சி வெறுத்து போக வைக்கணும் னு உரைகல்லுக்கு நல்லா தெரியும்... வெறுத்துட்டேன்.... அவரு அவ்வளோ விளக்கம சொல்லிருக்கிறார் .... தலைப்பு அதற்கு நேர் எதிராக இருக்கு ஒரு கேள்விக்குறியுடன் .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X