விவேகானந்தர் பிறந்த நாளையொட்டிபுதிய நல திட்டங்கள் துவக்க விழா| Dinamalar

தமிழ்நாடு

விவேகானந்தர் பிறந்த நாளையொட்டிபுதிய நல திட்டங்கள் துவக்க விழா

Added : ஜன 02, 2011
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: விவேகானந்தரின் 150வது ஆண்டு விழாவையொட்டி, "விவேகானந்தர் ஆரோக்கிய நலத்திட்டம் 2011-14' துவக்க விழா, மல்லூர் அருகே எருமநாயக்கன்பாளையம் கிராமத்தில் இன்று நடக்கிறது.புதிய திட்டத்தை மேத்தா துவக்கி வைக்கிறார். முரளீதர், சேகர், சுபாஷ், ராஜா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். குழந்தைகளின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும், கவனம் செலுத்துதல், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அளித்தல், நோய்வராமல் தடுத்தல் ஆகியவற்றை குறிக்கோளாக கொண்டு விவேகானந்தர் ஆரோக்கிய நலத்திட்டம் துவக்கப்பட உள்ளது.விவேகானந்தா டவுன்ஹால் கமிட்டி சார்பில், கோட்டூர் அதன் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் முன்னேற்ற திட்ட துவக்கவிழா, தயானந்தா எமிரேட்ஸ் மாணவிகள் இல்லத்தில் நாளை 3 மணிக்கு நடக்கிறது. மாணவ, மாணவிகள் கல்வியறிவில் சிறந்து விளங்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு, இத்திட்டம் துவங்கப்படுகிறது.தர்மபுரி கலெக்டர் ஆனந்தகுமார் திட்டத்தை துவக்கி வைக்கிறார்.ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் ஆஸ்ரமத்தின் சக்ரதாரானந்தஜி வரவேற்கிறார். தியாகராஜானந்தஜி தலைமை வகித்து பேசுகிறார்.டான் மெட்ரிக் பள்ளி தாளாளர் ராஜேந்திரன், பெங்களூரூ மஞ்சு கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் மாரியப்பன், ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் கோவிந்தராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசுகின்றனர். எய்ம் ஃபார் சேவா ஒருங்கிணைப்பாளர் பூங்கோதை நன்றி கூறுகிறார்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை