தமிழர்களுக்கு உதவ வேண்டும்; சந்திரபாபுவுக்கு கருணாநிதி கோரிக்கை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழர்களுக்கு உதவ வேண்டும்; சந்திரபாபுவுக்கு கருணாநிதி கோரிக்கை

Added : ஆக 07, 2016 | கருத்துகள் (22)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Advertisement
சந்திரபாபு,கருணாநிதி கோரிக்கை

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை: தமிழர்களுக்குத் தாய் நாட்டில் பிழைக்க வழியில்லை என்று வாழ்வாதாரம் தேடி வெளியே சென்றாலும், அங்கேயும் அடித்து நசுக்கப்படுகின்ற கொடுமை தான் நிலவிவருகிறது. உதாரணமாக இரண்டு நாட்களுக்கு முன்பு, சென்னையிலிருந்து திருப்பதிக்குச் சென்ற 32 தமிழர்களை ஆந்திரப் போலீசார் கைது செய்துள்ளனர். வியாழக்கிழமை இரவு இவர்கள் கைது செய்யப்பட்ட போதிலும், சனிக்கிழமை சப்தகிரி ரெயிலில் இவர்களைக் கைது செய்ததாக ரேணிகுண்டா காவல் துறையினர் தவறானத் தகவலை தெரிவித்திருக்கிறார்கள். ஆந்திரப் போலீசார் இவ்வாறு தமிழர்களைக் கைது செய்வது என்பது முதல் முறையல்ல. பொதுவாக தமிழக - ஆந்திர எல்லையில் அமைந்துள்ள சித்தூர், புத்தூர், நகரி, ரேணிகுண்டா ஆகிய பகுதிகளிலே, பேருந்துகளிலும், புகை வண்டிகளிலும் பயணம் செய்யும் தமிழர்களை அடிக்கடி விசாரணை என்ற பெயரால் அழைத்துச் சென்று உண்மைக்கு மாறான வழக்குகளைத் தொடுத்து, பிரச்சினை வளையத்திற்குள் சிக்க வைத்து, சித்ரவதைக்கு ஆளாக்குவது வாடிக்கையாக நடந்து வருகிறது.

சேஷாசலம் வனப் பகுதியிலே இரண்டு வனத் துறை அதிகாரிகள் கொல்லப் பட்ட பிறகு, இது தொடர்பாக நானூறுக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களை ஆந்திரப் போலீசார் கைது செய்து சிறையிலே அடைத்து, அவர்கள் எந்தத் தவறும் செய்யாத போதிலும் சுமார் இரண்டாண்டுகள் சிறையிலே வாடினர். இறுதியில் திருப்பதி நீதிமன்றம் இவர்களை நிரபராதிகள் என்று தெரிவித்து விடுதலை செய்தது. இந்த நிலையில் தான் சென்னையில் இருந்து கருடாத்ரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் திருப்பதிக்குப் பயணம் செய்த 32 தமிழர்களைப் பின் தொடர்ந்து சென்ற ரேணிகுண்டா காவல் துறையினர் கரகம்பாடி சாலையில் உள்ள வெங்கடாபுரம் என்ற இடத்திலே கைது செய்திருக்கிறார்கள் . ஆந்திர மாநிலக் காவல் துறை அதிகாரிகள் இவர்களைச் செய்தியாளர்கள் கூட்டத்தில் வைத்து, அவர்கள் எல்லாம் செம்மரம் கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்றும், சென்னையிலிருந்து சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் பயணம் செய்த அவர்களைக் கைது செய்திருப்பதாகவும், அவர்களில் 29 பேர், திருவண்ணா மலை மாவட்டத்தையும், 2 பேர் வேலுhர் மாவட்டத்தையும், ஒருவர் சென்னையை யும் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்ததோடு, அவர்களிடமிருந்து கோடரிகள், கத்திகள், கடப்பாரைகள் போன்றஆயுதங்களைக் கைப்பற்றியதாகவும் உண்மைக்கு மாறாகத் தெரிவித்திருக்கிறார்கள். திருவண்ணாமலையைச் சேர்ந்தவர்களில் 12 பேர் கண்ணமங்கலத்தை அடுத்த மேல்செண்பகத் தோப்பு மற்றும் கீழ் செண்பகத் தோப்புப் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

இந்தச் சம்பவம் குறித்து, ஆந்திர மாநில முதல்வருக்கு, தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதியிருப்பதாகவும் இன்று செய்தியில் வெளிவந்த போதிலும், கைது செய்யப்பட்டுள்ள 32 தமிழர்களின் குடும்பத்தினர் மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாகியிருக்கின்றனர். ஆந்திர மாநில முதல் அமைச்சர், நண்பர் சந்திரபாபு நாயுடு அவர்கள், ஆந்திர மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் இடையே நல்லுறவு நின்று நிலைத்திட வேண்டும் என்பதில் மிகுந்த நாட்டம் கொண்டவர் என்ற முறையில் உடனடியாக இந்தப் பிரச்சினையில் நேரடியாகத் தலையிட்டு, கைது செய்யப்பட்டுள்ள 32 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்து அவர்களுடைய சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஆவன செய்ய வேண்டுமென்றும்; ஆந்திர மாநிலக் காவல் துறையினரும் எதிர்காலத்தில் இவ்வாறு தமிழர்களைக் குறி வைத்துத் கைது செய்யும் போக்கினைக் கை விட வேண்டுமென்றும்; மிகுந்த நட்புணர்வோடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் அப்பாவித் தமிழர்களுக்கு மனித நேய அடிப்படையில் உதவிட முன்வருவார் என்று பெரிதும் நம்புகின்றேன்! இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ள 32 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று அம்மாநில முதல்வருக்கு கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
08-ஆக-201613:21:04 IST Report Abuse
Swaminathan Chandramouli நீங்கள் இந்தி படிக்கக்கூடாது, ஆங்கிலம் படிக்க கூடாது என்று 1965 போராட்டம் நடத்தி ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை பலி வாங்கினீர்கள். இப்போது புது அத்தியாயம் எழுதுகிறீர்கள் . தமிழ் நாட்டில் வேலை இல்லாத காரணத்தால் வேறு மாநிலங்களுக்கு போய் வேலை தேடுவதற்கு அந்த மாநில மொழிகள் தெரிந்து இருக்கவேண்டும். திருத்தணியை தாண்டினால், ஆந்திரா அங்கு இந்தி மொழி தெரிந்தவர்கள் பிழைக்கலாம், வடநாட்டுக்கு போனாலும் இந்தி மொழி தெரிந்தால் பிழைக்கலாம். கலைஞர் தான் இந்தி படிக்க கூடாது என்று சட்டம் இயற்றி தமிழ் மக்களை மொக்கை ஆக்கிவிட்டார். இப்போது ஒப்பாரி வைத்து என்ன பயன்
Rate this:
Share this comment
Cancel
Durai Ramamurthy - Virudhachalam,இந்தியா
08-ஆக-201612:49:13 IST Report Abuse
Durai Ramamurthy அவுங்க மரம் வெட்ட போனதை போட்டுக்கொடுத்ததே உங்கள் ராஜதந்திரம்தான் என்கிறார்களே,அது உண்மையா?..
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
08-ஆக-201607:50:15 IST Report Abuse
ஆரூர் ரங் இப்படியெல்லாம் தாய் மண்ணை விரோதித்துக்கொள்ளவே கூடாது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X