ஐதராபாத் அருகே ‛தாதா' சுட்டுக்கொலை| Dinamalar

ஐதராபாத் அருகே ‛தாதா' சுட்டுக்கொலை

Updated : ஆக 08, 2016 | Added : ஆக 08, 2016 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ஐதராபாத் அருகே ‛தாதா' சுட்டுக்கொலை

ஐதராபாத்: போலீசாருடன் நடைபெற்ற மோதலில் ‛தாதா'வாகா மாறிய முன்னாள் நக்சலைட் உள்பட இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் இருந்து, 60 கி.மீ., தூரத்தில் உள்ள ஷாத் நகரில், ரவுடிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களுக்கும், போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை இன்று காலை நடந்தது. இதில் இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதில் ஒருவர் ‛தாதா'. அவரது பெயர் நயீம். இவர் ஒரு முன்னாள் நக்சலைட். பின்னர் தாதாவாக மாறியவர். இவர் மீது ஏராளமான கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. தேடப்படும் குற்றவாளியாக இருந்தார்.போலீசாருடன் இணைந்து தேசிய பாதுகாப்பு படையினரும் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் நயீம் ஒரு பயங்கரவாதியாக இருக்கலாம் என்ற சந்தேகம் முதலில் ஏற்பட்டது. பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்துள்ளனர். தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. சுதந்திர தினம் நெருங்கும் நிலையில், இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
08-ஆக-201615:05:33 IST Report Abuse
ganapati sb பெரிய நாசவேலை செய்யும்முன் தீவிரவாதிகளை கண்டுபிடித்து வீழ்த்திய உளவுத்துறைக்கு காவல்துறைக்கும் பாராட்டுக்கள்
Rate this:
Share this comment
Cancel
yaaro - chennai,இந்தியா
08-ஆக-201613:26:15 IST Report Abuse
yaaro அது என்ன தாதா ? தீவிரவாதியா தாதா வா ? எப்படி ஒரே ஆள் ரெண்டு வேறமாதிரி விவரிக்க படுகிறார் ???
Rate this:
Share this comment
Cancel
Nalam Virumbi - Chennai,இந்தியா
08-ஆக-201612:17:27 IST Report Abuse
Nalam Virumbi இனி மனித உரிமை பேசுபவர்களுக்குக்கு கொண்டாட்டம்தான். புடிங்கிகள்,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X